புதன், 12 மே, 2010

தமிழர்களின் உரிமை மேலும் பறிபோகிறது: ராஜபட்சவின் அடுத்தகட்ட நடவடிக்கை


கொழும்பு, மே 11: இலங்கையில் தமிழர்களை இன ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையை அதிபர் மகிந்த ராஜபட்ச தொடங்கியிருக்கிறார் என்றும் இந்த முயற்சியின் தொடர்ச்சியாக செய்யப்படும் திருத்தங்கள் தங்களுக்கு ஏற்புடையவை அல்ல என்றும் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.இலங்கையில் இப்போது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கிடைக்கும் மொத்த வாக்குகளின் அடிப்படையில் அந்தந்த அரசியல் கட்சிக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வசித்த தமிழர்கள் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையில் நடந்த போரினால் சிதறடிக்கப்பட்டு அகதி முகாம்களிலும் பிற பகுதிகளிலும் பிரிந்து வாழும் இந்த நிலையில்கூட, விகிதாசாரப் பிரதிநிதித்துவம் காரணமாக 11 இடங்களில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற முடிந்திருக்கிறது. தமிழர்கள் மட்டும் அல்லாமல் முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற சிறுபான்மை இன மக்களும் கெüரவமான பிரதிநிதித்துவம் பெற இந்த விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே உதவி வருகிறது.இந்த நிலையில் இதை மாற்றி, ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் மூலம் முதலிடத்தைப் பெறும் வேட்பாளரே (இந்தியாவில் உள்ளதைப் போல), அந்தத் தொகுதியின் பிரதிநிதி என்று அறிவிக்க இலங்கையின் அரசியல் சட்டம் திருத்தப்படவிருக்கிறது. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் ஏராளமானோர் போரில் இறந்துவிட்டனர். எஞ்சியவர்கள் சிதறிவிட்டனர். இந்த நிலையில் அந்த இடங்களில் சிங்களர்கள் திட்டமிட்டு அதிக எண்ணிக்கையில் குடியமர்த்தப்படுகின்றனர். இதனால் வடக்கு, கிழக்குப்பகுதிகளில்கூட ஒவ்வொரு தொகுதியிலும் தமிழர்களைவிட சிங்களர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பர். அதிக வாக்குகளைப் பெறும் முதல் வேட்பாளர் என்றால் சிங்களர்தான் வெற்றி பெறுவார். தமிழர்கள் கணிசமாக இருந்தாலும் அவர்களுக்குப் பிரதிநிதித்துவமே இருக்காது.இதனால் மத, மொழி, இனச் சிறுபான்மை மக்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் அவர்களுடைய பிரதிநிதித்துவமே நாடாளுமன்றத்தில் இல்லாமல் போய்விடும்.இதனால் இலங்கை அரசு சிறுபான்மைச் சமூக மக்களுக்கு எதிராகக் கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கப்படாவிட்டால் அது வெளியுலகுக்குத் தெரியவே தெரியாது. அத்துடன் சிறுபான்மைச் சமூக மக்களின் நலனுக்காக உளப்பூர்வமாக வாதாடவும், கோரிக்கைகளை வலியுறுத்திப் பெறவும் பிரதிநிதிகளே இல்லாமல் போய்விடுவார்கள். எனவே தமிழர்களால் இதை ஏற்க முடியாது என்று தமிழர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழர்கள் கோரிவரும் சுயாட்சி அதிகாரம், அதிகாரப் பகிர்வு, தமிழர்களின் பாரம்பரிய வசிப்பிட அங்கீகாரம் ஆகியவை குறித்து அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள சட்ட திருத்தத்தில் ஏதும் இல்லை; மாறாக, தமிழர்களின் நலனுக்கு எதிரான யோசனைகளே உள்ளன என்று தெரிவித்தார் யாழ்ப்பாண பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன்.இலங்கை நாடாளுமன்றத்தின் 225 தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நீக்கிவிட்டு, தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெறுகிறவரே வெற்றி பெற்ற வேட்பாளராக அறிவிக்கப்படும் முறைக்கு சட்ட திருத்தம் கொண்டுவரப்படும் என்று இலங்கை அமைச்சர்கள் சுசீல் பிரேமஜயந்தவும் மைத்ரிபால சிறிசேனவும் திங்கள்கிழமை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.25 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை, செனட் என்று அழைக்கப்படும் என்றும் அதில் சிறுபான்மைச் சமூக மக்களுக்கும் மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்படும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.இலங்கை நாடாளுமன்றம் இயற்றும் ஏதேனும் ஒரு சட்டம் ஒரு மாநிலத்தின் நலனைப் பாதிக்கும் என்று கருதப்பட்டால், அந்த மாநிலப் பேரவையின் ஒப்புதலை மத்திய அரசு பெற வேண்டும் என்று இப்போதுள்ள சட்டம் வலியுறுத்துகிறது. இதுவும் திருத்தப்பட்டு, செனட் அனுமதித்தால் எந்த சட்டத்தையும் நாடாளுமன்றம் இயற்றிக் கொள்ளலாம் என்று அனுமதிக்க வழி செய்யவிருக்கிறது.இதுவும் மாநிலங்களின், அதிலும் குறிப்பாக தமிழர்கள் போன்ற சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதிப்பதற்காகவே கொண்டுவரப்படுகிறது என்று தமிழர் தேசிய கூட்டணிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.இலங்கையின் அதிபராக ஒருவர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று இப்போதுள்ள சட்டம் கூறுகிறது. இதையும் திருத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் ஒருவர் அதிபராகப் பதவி வகிக்கலாம் என்று அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.அதிபர் ராஜபட்ச தன்னை நிரந்தர அதிபராக நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியே இது. இதுவும் போதாது என்று தமிழர்களின் தொகுதிகள் பிரிக்கப்பட்டு மறுவரையறை செய்யப்பட உள்ளன. அதன்படி தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகள் பிரிக்கப்பட்டு சிங்களர்களின் பகுதிகளோடு சேர்க்கப்பட்டு எல்லா தொகுதிகளிலும் சிங்களர்களே வெற்றி பெற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.தமிழர்கள் மட்டும் சிதறாமல் இருந்திருந்தால் நடந்துமுடிந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணிக்கு யாழ்ப்பாண தீபகற்பத்தில் மட்டும் 11 தொகுதிகள் கிடைத்திருக்கும், மாறாக 9 தான் கிடைத்தன என்று சுரேஷ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டினார்.
கருத்துக்கள்

இந்திய நிலைப்பாட்டிற்கு மிகப் பெரும் தோல்வி. தமிழ் ஈழத்தைஏற்க அணியமாக இருந்த பல நாடுகளும் இந்தியாவின் நிலைப்பாட்டால்தான் பின் வாங்கின. அணி சேரா நாடு எனக் கூறிக் கொண்டு இன அழிப்பிற்கு மூளையாய் இருந்து செயல்பட்ட இந்தியாவையும் பேரின அழிப்பை நடத்திய நடத்தும் சிங்களத்தையும் குற்றவாளிகள் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும். அயலவர் வரும் முன் அல்லது குறைந்ததது 1900 ஆம் ஆண்டில் இருந்த நில எல்லைகளை அளவாகக் கொண்டு தமிழ் ஈழத்தை அமைக்கவும் ஏற்கவும் உலக நாடுகளை வற்புறுத்தி வெற்றி காண வேண்டும். அடிமைகள் வாழ்ந்ததாய் வரலாறு இல்லை.எஞ்சிய மக்கள் விடுதலை பெற எல்லாரும் உதவ வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 2:53:00 AM

FROM 1948 SINGALAVA DOGS KILLED OUR RACE, COLONIZED OUR MOTHERLAND. UNDER THE LEADERSHIP OF OUR GREAT LEADER, MANY GREAT WARRIORS FOUGHT FOR FREEDOM, LIBERTY AND AGANIST SLAVERY. SINGALAVA DOGS WITH THE HELP OF UNION INDIAN GOVT CARRIED OUT TAMIL ETHNIC CLEANSING. NOW SINGALAVA DOGS WANTS TO ERASE OUR RACE FROM OUR MOTHERLAND. IT IS NOT THE END MY TAMILS. UNITE AND LIBERATE OUR MOTHERLAND. LONG LIVE TAMIL.

By Paris EJILAN
5/12/2010 2:49:00 AM

மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம்! ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம்! தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம். தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

By SAM
5/12/2010 2:31:00 AM

எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே! எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம். சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.

By SAM
5/12/2010 2:28:00 AM

Now, where are subramaniyaswami, jejalaitha, manisankaiyar, sivasnakar menon, Narayajan and mugargee? ALL GET TOGETHER MASS MURDED MORE THAN 40,000 PEOPLE IN 2 DAYS. KILLED ALL REBELS WHO WERE HELLING THE TAMILS. nOW ALL THE ABOUT PEOPLE SHUT MOUTH AND EAT RAJAPAKSHA'S LIES INDEED. YOU ALL PEOPLE WIPE OUT THE TAMIL NATIONS . THANK YOU

By Karma
5/12/2010 1:58:00 AM

உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசியபோதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது. மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல. மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு. அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்

By SAM
5/12/2010 1:34:00 AM

heartiest thanks to DINAMANI.at least now are coming out with the truth.no point in blaming Rajapakse.real traitors are Karunanithy and Sonia.

By Prabakaran.m
5/12/2010 1:33:00 AM

உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசியபோதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது. மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல. மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு. அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்

By SAM
5/12/2010 1:33:00 AM

விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவதற்கு இந்திய அரசு விதித்த நிபந்தனைகள் அவரது குடும்பத்தினருக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் அவர் இந்தியாவுக்கு செல்லவேண்டாம் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளதாக இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.இந்திய அரசு, பார்வதியம்மாள் இந்தியா வுக்கு வந்து சிகிச்சை பெற விரும்பினால், அரசு பாதுகாப்பில், அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற அனுமதிக்கப்படுவார் என்று விதித்த நிபந்தனை, அவர் தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற முடியாத நிலையை ஏற்படுத்தியதாலும், குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அவரை சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை காரணமாகவும், இந்த முடிவை குடும்பத்தினர் எடுத்துள்ளனர் என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

By முத்தமிழ்
5/12/2010 1:31:00 AM

தினமணி பத்திரிகைக்கும் ஆசிரியர் குழுமத்துக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா . நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் தான் தமிழரின் இனப்பிரச்சனைக்கான அடிப்படைக் காரணங்கள் (1948) இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப்படும்போது திருகோணமலையில் தேசிய கொடியை எரித்திது தமிழருக்கு சிங்களம் நீதியை தராது என்று கூறி தமிழர் ஆர்ப்பாட்டம் செய்தனர் சிங்களவரின் உறுதிமொழியை தமிழர் தரப்பு நம்பி ஏமாந்தது 1951 ல் இருந்து தமிழர் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு தமிழர் பகுதிகள் சிங்கள பகுதியேடு இணைக்கப்படுகிறது பிரபாகரனின் வாக்கியங்கள் தான் தமிழரை காக்கும் ஓடாத மானும் போராடாத மக்களும் உயிர்வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை போராடவில்லையென்றால் முழுமையாக அழிவோம் போராடினால் அழிவிலிருந்து தப்புவதற்கு சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கிறது இனிமேலாவது தமிழக தமிழர்கள் அரசியல்வாதிகளின் கரங்களில் தங்கியிராமல் ஈழதமிழனுக்கு உயிர்ப்பிச்சையளித்து தமிழரிக்கென்றொரு நாட்டை உருவாக்க ஆதரவுக்கர த்தை தாருங்கள் வீழ்வது நாமக இருப்பினும்வாழ்வது தமிழும் தமிழீழமுமாய் இருக்கட்டும்

By பண்டார வன்னியன்
5/12/2010 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக