சனி, 15 மே, 2010

சம்ஸ்கிருதம் பயின்று மாநிலத்தில் முதலிடம்



சென்னை, மே 14: சம்ஸ்கிருதத்தை முதல் மொழியாக படித்து, 1,188 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார் சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப்பள்ளி மாணவி அனு ஆசைத்தம்பி.பிளஸ் டூவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர் பாண்டியனை விட இவர் ஒரு மதிப்பெண் அதிமாகப் பெற்றிருந்தும், சம்ஸ்கிருதத்தை முதல் மொழியாகப் படித்ததால், மாநில அளவில் முதலிடத்தைப் பிடிக்க முடியாமல் போனது.அனுவின் சொந்த ஊர் சேலம், ராசிபுரம். பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறியுள்ளனர். இவரின் தந்தை ஆசைத்தம்பி, சென்னை மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர். இவரின் தாய் விமலா தனியார் பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியை.வெற்றியைக் குறித்து அனு கூறியதாவது:எனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டு, பை-பாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்.எனது தந்தையைப் போன்று கிராமப்புறங்களில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேவை புரிய வேண்டும் என்பதே என் லட்சியமாகும். சென்னை அரசு பொது மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வேண்டும். மேற்படிப்பாக இதய மருத்துவம் படிக்க வேண்டும். மேற்படிப்புக்கு அயல்நாட்டுக்குச் செல்ல வேண்டும். மீண்டும் தமிழகத்துக்கு திரும்பி வந்து சேவை செய்ய வேண்டும்.ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம் பயின்றதால், பிளஸ்-2 படிப்பிலும் அதையே தொடர்ந்து படித்தேன். சமஸ்கிருதம் தேர்வு செய்து முதலிடம் பெற்றால், தமிழ் படித்து முதலிடம் பெற்றவர்கள் போன்று புகழ் கிடைக்காது என்று தெரியும்.என் லட்சியம் புகழ் பெறுவது அல்ல. மருத்துவம் பயின்று சேவை புரிய வேண்டும் என்பதே. அதற்கு நான் பெற்ற மதிப்பெண்கள் உதவி புரியும் என்றார் அவர்.அதே பள்ளியைச் சேர்ந்த ஷாரிணியும் சமஸ்கிருதத்தை முதல் பாடமாக படித்து 1,187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
கருத்துக்கள்

ஏதோ சமற்கிருதம் படித்ததால்தான் முதலிடம் பெற்றது போல் தலைப்பு காட்சியளிக்கிறது. பிற மொழிகளுக்கு முதன்மை கொடுக்கும் போக்கு ஒழிய வேண்டும். அதற்கான வாய்ப்பை நல்கும் கல்வித்திட்ட முறை மாற வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் மட்டுமே கட்டாய மொழிப்பாடமாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் பிற மொழிகைளப் பயிலவதற்கு வாய்ப்பு இருந்தால் போதுமானது. தமிழ் ஆய்ந்த தமிழன் முதலமைச்சாய் இருந்தும் தவணை முறையில் தமிழ் மொழிப்பாடத்தை முதன்மைப்பாடமாக அறிவிக்கும் திட்டம் வெட்கக்கேடானது. தமிழுக்குத்தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்கும் ஆட்சியே நமக்குத் தேவை. ஆனால் முதன்மைக் கட்சிகள் அனைத்தும் இதற்கு மாறா நிலையிலேயே உள்ளன. இத்தகைய கட்சிகள் அனைத்தையும் புறந்தள்ளினால் தமிழ்நாடு இமயமலை போல் உயரும்; அறிவியல் அறிஞர்களும் புதியது புனைவோர்களும் தொழில் மேதைகளும் கல்வியாளர்களும் மருத்துவ வல்லுநர்களும் பிற துறை வல்லுநர்களும் பெருகுவர். அந்நாள் விரைவில் வருவதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 4:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக