சனி, 15 மே, 2010

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் மூன்றாவது இடம்



சென்னை, மே 14: ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் நிதின் சந்தோஷ், பிளஸ் - 2 தேர்வில் சென்னையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.சென்னை சூளைமேடு கில்நகர் டிஏவி பள்ளி மாணவனான நிதின் சந்தோஷ் 1,185 மதிப்பெண்கள் பெற்று சென்னையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவரது தந்தை சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் அதிகாரியாவார். எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணிபுரிகிறார்.வேதியியல், கணிப்பொறி ஆகிய பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார் நிதின் சந்தோஷ். சம்ஸ்கிருதத்தை முதல் பாடமாகப் பயின்று அதிலும் 198 மதிப்பெண் பெற்றுள்ளார்.செய்தியாளர்களிடம் நிதின் சந்தோஷ் கூறியதாவது: அன்றாட பாடங்களை அன்றைக்கே படித்து முடித்ததால்தான் அதிக மதிப்பெண்களைப் பெற முடிந்தது. பெற்றோர்கள் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தனர். பள்ளி நிர்வாகமும் என்னை அதிக அளவில் ஊக்குவித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக என் அம்மாவின் கண்டிப்பும், அரவணைப்புமே என்னை வெற்றிபெறச் செய்தது. என் தந்தையைப் போலவே நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆசைப்படுகிறேன் என்றார் நிதின் சந்தோஷ்.
கருத்துக்கள்

இஆ.ப. அதிகாரியாவேன் என எல்லாரையும் போல் சொல்லாமல் நேர்மையான இ.ஆ.ப. அதிகாரியாக ஆசைப்படுகிறேன் எனச் சொன்ன நிதினுக்குப் பாராட்டுகள். இந்த எண்ணத்தை விதைத்த பெற்றோருக்கும் பாராட்டுகள். அரசியல்வாதிகளால் ஊழல் பெருகுவதாகக் கூறுகிறார்கள். உண்மையில் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளால்தான் ஊழல் பெருகுகின்றது. எனவே, பணியில் நேர்மையும் தூய்மையும் கொண்டு சிறக்க வாழ்த்துகள். இனியேனும் தமிழக்கும் தமிழர்க்கும் முதன்மை கொடுக்க வேண்டுகிறேன்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 5:08:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக