ஞாயிறு, 9 மே, 2010

கேரளத்துக்கு வந்த 38 இலங்கைத் தமிழர்களிடம் விசாரணை



கொல்லம், மே 8: கேரளத்துக்கு வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 38 இலங்கைத் தமிழர்களிடம் மாநில போலீஸôர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கேரள மாநிலம் கொல்லத்திலுள்ள ஒரு லாட்ஜில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்று போலீஸôருக்கு வெள்ளிக்கிழமை ரகசியக் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸôர், அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா செல்வதற்காக அவர்கள் கொல்லம் வந்துள்ளனர். கொல்லத்தைச் சேர்ந்த டிராவல் ஏஜென்ட் இதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளதாகத் தெரிகிறது.இவர்களில் சிலர் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக கொல்லம் வந்துள்ளனர். சிலர் விமானம் மூலம் கொல்லம் வந்து சேர்ந்துள்ளனர்.இதைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகளைத் தவிர மற்றவர்களை போலீஸôர் உள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும், எதற்காக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.இதில் சிலரிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது.அவர்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.இதுதொடர்பாக தமிழக போலீஸôருடன், கேரள போலீஸôர் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர் என்று புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துக்கள்

ஈழத்திலிருந்து இங்கு மருத்துவ நோக்கில் வருபவர்களைக்கூடஇந்திய அரசு தடுத்து உயிரிழக்கச் செய்கிறது. தானே அழைத்து வரவேண்டிய கடப்பாடு இருப்பினும் தானாக வருபவர்களையும் தடுப்பதே இந்திய அரசின் செயற்பாடு. மனித நேயமற்ற போர் வெறியுடன் இனப்படுகொலை செய்யும் இநதிய அரசு இவர்களிடம் மட்டும் எப்படிக் கருணையுடன் நடந்து கொள்ளும்? மனித நேயம் மிக்கவர்கள் இந்திய ஆட்சிப் பொறுப்பிலும் அதிகாரப் பொறுப்புகளிலும் அமர வேண்டும். மக்கள் அதற்கேற்ப தங்கள் வாக்குரிமைகளைப் பயன்படுத்த வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/9/2010 5:05:00 AM

Kerala leaders like Narayan and others played an active role in the killing and massacre of Tamils in srilanka, few months ago. Now they want to eradicate Tamils. Unfortunately the leaders of Tamil Nadu are too busy making money for their families while the respect for Tamils have reached the bottom.Tamils will be treated like dogs unless our leaders take immediate action to protect the respect of Tamils.

By Kesavan
5/9/2010 4:39:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக