திங்கள், 10 மே, 2010

பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுடனே அழகிரி மாலத்தீவு பயணம்



புதுதில்லி, மே 10- பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுதான் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அவைக்கு வராமல் அழகிரி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர். அமைச்சரவைக் கூட்டத்திலும் அழகிரி கலந்துகொள்வதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே, மாலத்தீவு செல்வதற்கு அழகிரி பிரதமர் அலுலகத்தில் முறைப்படி அனுமதி பெற்றாரா என்பது குறித்து தெரிவிக்கும்படி தில்லியைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட விளக்கத்தில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரை 10 நாள் மாலத்தீவு பயணத்திற்கு அழகிரி, ஏப்ரல் 12-ம் தேதி பிரதமர் அலுவலத்தில் அனுமதி பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

பாராளுமன்றம் நடைபெறும் பொழுது பாராளுமன்ற அவைத் தலைவரிடம் தகவல் கூடத் தெரிவிக்காமல் போனது மரபு மீறிய செயல். தெரிந்தோ தெரியாமலோ முதல் முறை என்பதாலோ தவறு நேர்ந்திருக்கலாம். எனினும் இது தொடராது என நம்புவோம். ஏனெனில் நாடாளுமன்றம் கழகக்குடும்பம் அன்று. இனி அவரை தொகுதி நன்மை குறித்தும் துறைமுன்னேற்றம் குறித்தும் சிந்திக்க விடுவோம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/10/2010 6:22:00 PM

அட போங்கப்பா அவருக்கு ஹிந்தியும் தெரியாது ,ஆங்கிலமும் தெரியாது ,ஏதோ ,விஜய் படம்,வேற்று மொழி படம் பாக்கராமதிரி ஒண்ணுமே புரியாம எவ்வளுவு நேரம்தான் அங்க உட்கார்ந்து இருக்க முடியும் ,,அவராவது என்ஜாய் பண்ணட்டும் ,வாழ்க ஜனநாயகம்!!

By Pothu janam
5/10/2010 4:51:00 PM

dear mr anbalagan, tell this to your own leader MK & Stalin. They are only concerned about Alagiri. General public or other party leaders are not concerned whether Alagiri becomes DMK chief or Stalin. Definitely, MK is not going to give the DMK Chief position to anybody else than these two. MK is not bothered about the sacrifices & service the workers of DMK did for the party.

By R
5/10/2010 4:51:00 PM

PERMISSION HAS TO BE OBTAINED ANY WAY FOR UNDERTAKING FOREIGN TOUR FROM P.M. OFFICE. BUT, DID THE PM OFFICE KNOW THAT HE HAS TO PARTICI8PATE IN THE PARLIAMENTARY SESSION DURING THAT PERIOD ? DID THE MEMBER OBTAIN PERMISSION FOR BEING AWAY WHILE THE SESSION IS ON ? THAT'S THE POINT TO BE FOUND OUT.

By R
5/10/2010 4:46:00 PM

கண்ணதாசனின் வாரிசு,கருணாவின் அரசியல் வாரிசு அழகிரி தி மு க வின் தலைவர் ஆவதை யார் சதி செயதாலும்,அண்ணாதுரை,ராமசாமி,எம் ஜி ராமசந்திரன் ,கருணா உயிர்த்துதெலுந்து வந்தாலும் தடுக்க முடியாது.

By அன்பழகன்
5/10/2010 4:24:00 PM

வேலிக்கு ஓணான் சாட்சி.... பலே பலே...

By samugham
5/10/2010 4:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக