
பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஆர். பாண்டியனுக்கு முத்தமிட்டு வாழ்த்துத் தெரிவிக்கிறார் தாய் சாந்தி. உடன் தந்தை ராஜு.
சென்னை, மே 14: பிளஸ் 2 தேர்வில், தமிழை முதல் பாடமாக எடுத்துப்படித்த தூத்துக்குடி மாணவர் ஆர்.பாண்டியன் 1187 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார்.தூத்துக்குடி எஸ்.வி. இந்து வித்யாலயா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பாண்டியன், இயற்பியல், வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கணிதப் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்ணும், தமிழில் 194 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார்.அவருக்கு அடுத்தபடியாக 1186 மதிப்பெண்கள் பெற்ற மூன்று பேர் 2-ம் இடத்தையும், 1185 மதிப்பெண்கள் பெற்ற ஐந்து பேர் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகள்தான் அதிகளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனர். பிற மொழிகளில், சமஸ்கிருதத்தை முதல் மொழியாக எடுத்துப்படித்து, ஆர்.பாண்டியனை விட கூடுதலாக ஒரு மதிப்பெண் பெற்ற சென்னை மாணவி அனு ஆசைத்தம்பி 1,188 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளார்.சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அனு ஆசைத்தம்பி, சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்து படித்ததால் மாநில அளவிலான முதல் இடத்தைப் பெறும் வாய்ப்பை இழந்தார். ஒட்டு மொத்த மதிப்பெண்கள் பட்டியலில் அனு ஆசைத்தம்பி முதலிடம் பெற்றுள்ளார்.5.81 லட்சம் பேர் தேர்ச்சிஇந்த ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய 7,43,822 பேரில் 5,81,251 மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 85.2 சதவீதம். இது கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதமான 83 சதவீதத்தை விட 2.2 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,19,956 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88 ஆகும். இது கடந்த ஆண்டு 85.5 சதவீதமாக இருந்தது. மாணவர்கள் 2,61,295 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 81.9 சதவீதமாகும். இது கடந்த ஆண்டு 80.3 சதவீதமாக இருந்தது. 1,62,571 பேர் தோல்விபிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் 2.2 சதவீதம் அதிகரித்த போதிலும், இந்த முறை கூடுதலாக 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் 1,62,571 பேர் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இந்த முறை உடனடித் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.மே 26-ல் மதிப்பெண் சான்றிதழ்மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மே 26-ம் தேதி, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.சென்னை தேர்ச்சி விகிதம் 90.88% பிளஸ் 2 தேர்வில் வெளியூர் மாணவர்களே அதிகளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். எனினும் சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்துப் படித்த அனு ஆசைத்தம்பி, மாநிலத்தில் 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். சென்னையில் தேர்வு எழுதிய 48,404 பேரில் 43,603 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தின் ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.88 சதவீதமாகும்.இதில் தமிழ் பாடத்தை முதல் பாடமாக எடுத்து படித்த சென்னை டிஏவி கோபாலபுரம் மேல்நிலைப்பள்ளி மாணவி சுருதி 1182 மதிப்பெண் பெற்று சென்னையில் முதலிடம் பெற்றுள்ளார்.ஜூன் 29-ல் உடனடித் தேர்வுதேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான உடனடித் தேர்வு ஜூன் 29-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 9-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. மூன்று அல்லது அதற்கும் குறைவான பாடங்களில் தோல்வியடைந்தவர்கள், இந்த உடனடித் தேர்வை எழுதத் தகுதியுள்ளவர்கள்.இதற்கான விண்ணப்பங்கள் மே 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவராக தேர்வெழுதியவர்கள் அவர்கள் படித்த பள்ளியில் எஸ்எச் வகை விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, மே
21-ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும்.பாட வாரியாக சதம் அடித்தவர்கள்இயற்பியல்- 231 வேதியியல்- 741 உயிரியல்- 258தாவரவியல்- 4விலங்கியல்- 1கணிதம்- 1762கம்ப்யூட்டர்சயின்ஸ் 265 வணிகவியல் 968கணக்குப் பதிவியல் 851 வணிக கணிதம் 341கணிதப் புலிகள் சரிந்தனர்எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை 1,762 ஆகக் குறைந்துள்ளது.இந்த முறை பிளஸ் 2 கணிதப் பாடத்துக்கான வினாத்தாள் கடினமாக இருந்ததால், 200-க்கு 200 மதிப்பெண் பெறுவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்த முறை வெறும் 1,762 பேர் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 4,060 பேர் கணிதத்தில் சதம் அடித்திருந்தனர். இம்முறை 200-க்கு 200 மதிப்பெண் பெற்றோரின் எண்ணிக்கை 2 மடங்காகக் குறைந்துள்ளது. 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,92,747 ஆகும்.

கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 4:46:00 AM
5/15/2010 4:46:00 AM


By murugoo
5/15/2010 3:13:00 AM
5/15/2010 3:13:00 AM


By Raja
5/15/2010 1:55:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 5/15/2010 1:55:00 AM