சனி, 15 மே, 2010

தெரு விளக்கில் படித்து மாநில அளவில் 2-வது இடம்: ஏழை மாணவிக்கு உதவி கிடைக்குமா?



பானுமதி
சென்னை, மே 14: தெரு விளக்கில் படித்து மாநில அளவில் நர்சிங் படிப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்த மாணவிக்கு பணவசதி இல்லாததால் மேல்படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள கரியப்பா மேல்நிலைப்பள்ளியில் நர்சிங் படிப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம்பெற்றுள்ள மாணவி பானுமதி. இவர் பெற்ற மதிப்பெண் 200-க்கு 116.ஆனால் வெற்றி பெற்ற மாணவர்களின் முகத்தில் இருக்கும் வெற்றிக் களிப்பையும், புன்னகையையும் பானுமதி முகத்தில் பார்க்க முடியவில்லை. பானுமதியின் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. இவருடைய தந்தை இவர்களைப் பிரிந்து சென்று விட்டார். தன் தாயைக் காப்பாற்றுவதற்காக ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே படிப்பையும் தொடர வேண்டிய நிலை பானுமதிக்கு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து வந்தவுடன் இரவு முழுவதும் தெரு விளக்கின் கீழ் அமர்ந்தே படித்திருக்கிறார் பானுமதி. தொடர் முயற்சியின் விளைவால் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஆனால் மேற்கொண்டு படிப்பதற்கு பண வசதி இல்லை.தன்னுடைய வாழ்க்கையில் ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நர்சிங் கல்வி பயின்ற பானுமதியின் எதிர்காலம், உதவும் நல்ல உள்ளங்களின் கைகளில்தான் உள்ளது.
கருத்துக்கள்

ஏழ்மையிலும் கல்வியில் செம்மையான இடத்தையடைந்த பானுமதிக்குப் பாராட்டுகள். கொடையாளர் நிறைந்த தமிழ்நாட்டில் கல்வி உதவி கிடைக்கும். தமிழக அரசும் பட்படப்படிப்பை இலவசமாக அறிவித்துள்ளது. பல்வேறு சலுகைகளும் உதவிகளும் அளிக்கிறது. முதல்வரும் உதவுகிறார். பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. பள்ளியே உதவ முன்வரும். எனவே, மகிழ வேண்டிய நேரத்தில் கவலையில் நேரம் செலவழிப்பானேன்! நைட்டிங்கேள் விருது பெற வாழ்த்துகள். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/15/2010 5:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Congratulations and hats off to you Bhanumathi.Even with financial difficulties, you have struggled yourself to achieve this.With your dedication,devotion, determination, self-confidence YOU CAN ACHIEVE A LOT IN LIFE.Don't worry.As rightly mentioned by Thiru.ILAKKUVANAR THIRUVALLUVAN, the Govt.of Thamizhnadu, the Charitable Trusts will come forward to help you financially to continue your education.Be Cheerful and have POSITIVE ATTITUDE.YOU WILL CERTAINLY ACHIEVE GREAT THINGS IN LIFE.
By NilaSundaram
5/15/2010 5:59:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக