திருச்சி, மே 10: அரசு விதித்துள்ள நிபந்தனைகளால், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாய் பார்வதியம்மாள் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் வருவது சந்தேகமே என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.பிரபாகரனின் தாய் பார்வதியம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அவர் வருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய அரசு விதித்துள்ள ஏராளமான நிபந்தனைகளே இதற்கு காரணம்.இந்நி லையில், இந்த நிபந்தனைகளால் பிரபாகரனின் தாய் பார்வதியம்மாள் தமிழகத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தது:பார் வதியம்மாள் சிகிச்சை பெற தமிழகம் வந்தால், அவரைப் பார்ப்பதற்காக வெளிநாட்டில் உள்ள அவரது மூத்த மகன் வேலுப்பிள்ளை மனோகரனும், மகளும் வர விரும்புவர்.ஆனால், மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகள், அரசு கண்காணிப்பு போன்ற பிரச்னைகளால் பார்வதியம்மாளை சந்திப்பதில் பிரச்னை ஏற்படலாம் என மகனும், மகளும் கருதுவதாகத் தெரிகிறது.இதனால், பார்வதியம்மாளும், இந்த நிபந்தனைகளை ஏற்று, சிகிச்சைக்குத் தமிழகம் வருவது சந்தேகமே.மேலும், அரசு விதித்துள்ள நிபந்தனைகளால் அவர்கள் வருத்தப்பட்டனர்.பார் வதியம்மாள் தன்னுடைய கடைசிக் காலத்தில் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற்று இங்கேயே தங்க விரும்பியதாகவும், ஆனால், அரசு விதித்துள்ள நிபந்தனைகளால் இனி தமிழகத்துக்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கள்
வீர அன்னையாரைப் பொறுத்த வரை நல்ல முடிவு. ஆனால், தாயுள்ளம் கொண்ட, வந்தாரை வரவேற்கும் பண்பாடு கொண்ட தமிழ்நாட்டிற்குத் தலைகுனிவு. உலக நாட்டு உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதாக வேடமிடும் இந்திய அரசிற்கு அவமானம்!எங்கிருந்தாலும் அவர் விரைவில் நலமடையட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/11/2010 3:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்5/11/2010 3:33:00 AM