செவ்வாய், 11 மே, 2010

யார் யாரு​டன் நளினி செல்​போ​னில் பேசி​னார்?​​ அமைச்​சர் துரை​மு​ரு​கன் விளக்​கம்

சென்னை, ​​ மே 10:​ வேலூர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள நளினி செல்​போன் மூலம் யார் யாரு​டன் பேசி​னார் என்​பது குறித்த விவ​ரங்​கள் கிடைத்து வரு​வ​தாக சட்​டப் பேர​வை​யில் அமைச்​சர் துரை​மு​ரு​கன் விளக்​கம் அளித்​தார்.​சட் ​டப் பேர​வை​யில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற உள்​துறை,​​ மது​வி​லக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை​க​ளின் மானி​யக் கோரிக்கை மீதான விவா​தத்​தில் சட்​டப் பேரவை காங்​கி​ரஸ் தலை​வர் டி.சுதர்​ச​னம் பேசி​ய​தா​வது:​கா​வல் துறை மற்​றும் நீதித் துறை​யில் உள்ள சில​ரி​டம் ஒழுங்​கீ​னம் காணப்​ப​டு​கி​றது.​ இது குற்ற பின்​னணி கொண்​ட​வர்​க​ளி​டம் பய​மின்மை உணர்வை தோற்​று​விப்​ப​து​டன் குற்​றங்​கள் அதி​க​ரிக்​க​வும் ஒரு கார​ண​மா​கி​றது.​÷கா​வல் துறை அதி​கா​ரி​கள் சிலர் பணியி​லி​ருந்து ஓய்வு பெற்ற பின் அர​சி​யல் கட்​சி​யில் சேர்ந்து பதவி பெறு​கின்​ற​னர்.​ இத்​த​கைய அதி​கா​ரி​கள் அர​சி​யல் பிர​மு​கர்​க​ளு​டன் தங்​க​ளுக்கு உள்ள நெருக்​கம் கார​ண​மாக உயர் அதி​கா​ரி​களை மதிப்​ப​தில்லை.​ இது​வும் குற்​றச் செயல்​க​ளில் ஈடு​ப​டு​வோ​ருக்கு துணிச்​சலை அளிப்​ப​தாக உள்​ளது.​த​மி​ழ​கத்​தில் கடந்த 3 மாதங்​க​ளில் ரியல் எஸ்​டேட் தொழில் தொடர்​பான தக​ராறு கார​ண​மாக 50 கொலை​கள் நிகழ்ந்​துள்​ளன.​ ​தற்​போது சிறை​யில் இருக்​கும் நளி​னி​யி​டம் இருந்து 2 செல்​போன்​கள்,​​ சில சிம் கார்​டு​கள் பறி​மு​தல் செய்​யப்​பட்​டன.​இது சாதா​ர​ண​மாக எடுத்​துக் கொள்​ளக்​கூ​டிய விஷ​ய​மல்ல.​கஞ்சா கடத்​தல் உள்​ளிட்ட வழக்​கு​க​ளில் கைதாகி சிறை​யில் அடைக்​கப்​பட்​ட​வர்​க​ளி​டம் இருந்து செல்​போன்​கள் பறி​மு​தல் செய்​யப்​பட்​டால் அதன் பாதிப்பு சாதா​ர​ண​மா​கத்​தான் இருக்​கும்.​ஆ ​னால்,​​ முன்​னாள் பிர​த​மர் ராஜீவ் காந்தி கொல்​லப்​பட்ட வழக்​கில் கைது செய்​யப்​பட்டு தண்​டனை விதிக்​கப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டி​ருக்​கி​றார் நளினி.​ அவர் ஒரு தேச விரோத சக்தி.​ அப்​ப​டிப்​பட்ட நப​ரி​டம் செல்​போன்​கள் பறி​மு​தல் செய்​யப்​பட்​டி​ருப்​பது சிறைக் காவ​லர்​கள் அவ்​வ​ளவு கவ​ன​மாக அவரை கண்​கா​ணிக்​க​வில்லை என்​ப​தையே காட்​டு​கி​றது என்​றார்.​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​அ​மைச்​சர் துரை​மு​ரு​கன்:​​ சிறைக் காவ​லர்​கள் மிகுந்த கவ​னத்​து​டன் நளி​னியை கண்​கா​ணித்து வரு​கின்​ற​னர்.​ இத​னா​லேயே அவ​ரி​டம் செல்​போன்​கள் இருந்​தது கண்​டு​பி​டிக்​கப்​பட்டு பறி​மு​தல் செய்​யப்​பட்​டன.​டி.சுதர்​ச​னம்:​​ நளினி கடந்த ஓராண்​டாக செல்​போனை பயன்​ப​டுத்தி பல்​வேறு வெளி நாடு​க​ளில் உள்ள நபர்​க​ளு​டன் பேசி இருக்​கி​றார்.​இது வேறு ஒரு பெரிய அசம்​பா​வித சம்​ப​வத்​துக்கு வழி​வ​குத்​து​வி​டா​மல் இருக்க வேண்​டு​மா​னால்,​​ இந்த செல்​போன் பேச்​சு​கள் குறித்து முழு​மை​யாக விசா​ரிக்க வேண்​டும்.​ தேவைப்​பட்​டால் மத்​திய அர​சின் உத​வி​யை​யும் இதற்​காக தமி​ழக அரசு கேட்​டுப் பெற​லாம்.​வை.சிவ​புண்​ணி​யம் ​(இந்​திய கம்​யூ​னிஸ்ட்)​:​ நளி​னியை ஏதோ தேச விரோத சக்தி போல குறிப்​பிட்டு பேசு​கி​றீர்​களே,​​ அப்​ப​டி​யா​னால்,​​ உங்​கள் கட்சி தலை​வி​யின் மகள் பிரி​யங்கா ஏன் சந்​தித்​தார்?​​பீட்​டர் அல்​போன்ஸ் ​(காங்​கி​ரஸ்)​:​​ ஒரு குற்​றச் செய​லில் ஈடு​பட்​ட​வரை அவ​ரால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் மன்​னிப்​பது என்​பது அவர்​க​ளது தனிப்​பட்ட விஷ​யம்.​ ஆனால்,​​ நாட்​டுக்கு எதி​ராக குற்​றம் இழைத்த நளினி சட்​டப்​படி தண்​டனை பெற வேண்​டி​ய​வர்.​ ராஜீவ் காந்தி கொலை குறித்து தா.பாண்​டி​யன் எழு​தி​யுள்ள புத்​த​கத்தை சிவ​புண்​ணி​யம் படித்​துப் பார்க்க வேண்​டும்.​அமைச்​சர் துரை​மு​ரு​கன்:​​ நளினி செல்​போன் மூலம் தனது மக​ளி​டம் பேசி​யுள்​ளார்.​ இலங்​கை​யில் உள்ள சில​ரி​டம் பேசி​யுள்​ளார்.​ வெளி​நா​டு​க​ளில் வேறு எவ​ரி​ட​மா​வது அவர் பேசி​யுள்​ளாரா என்​பது குறித்து விசா​ரித்து வரு​கி​றோம்.​÷இ​து​ வரை விசா​ர​ணை​யில் தெரிய வந்த விவ​ரங்​கள் அனைத்​தும் பேர​வை​யில் தெரி​விக்​கப்​பட்​டு​விட்​டன.​ தேச விரோத சக்​தி​களை அவர் தொடர்பு கொண்​டது போல ஒரு நினைப்பை ஏற்​ப​டுத்​தும் வித​மாக சுதர்​ச​னம் பேசு​கி​றார்.​ நிலைமை கட்​டுக்​குள் உள்​ளது.​டி.சுதர்​ச​னம்:​​ இந்த விஷ​யத்​தில் நளினி யார் யாரு​டன் பேசி​னார் என்​பது குறித்த முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்​பட வேண்​டும் என்​ப​து​தான் எங்​கள் கோரிக்​கையே தவிர,​​ இதில் வேறு நோக்​கம் எது​வும் இல்லை என்​றார்.
கருத்துக்கள்

நளினியிடம் அலைபேசி இருந்தது உண்மை யெனில் கடமை ஆற்றிய தவறியமைக்காக அச்சிறையின் அனைத்து அதிகாரிகளையும் துறைத் தலைவரையும் உடனே பணி நீக்கம் செய்யுங்கள். இந்திரா காந்தி, இராசீவ காந்தி மரணத்தைஒட்டி எண்ணற்றவர்களைக் கொலை செய்த கட்சி , நம் நாட்டில் வன்முறை அரசியலை அரங்கேற்றிய கட்சி, ஈழத்தில் இனப்படுகொலை செய்த கட்சி, இந்திய நிலத்தைச் சீனாவிடமும் பாகிசுதானிடமும் பறி கொடுத்தகட்சி மனித நேயமற்ற கட்சி நாட்டுப் பற்று பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. நளினி நாட்டுக்கப் பகையானவர் எனில் அவரைச் சந்தித்து நாட்டுப்பகைத் திட்டம் குறித்து சதி செய்த பிரியங்காவைச சிறையிலிட்டு விசாரணை செய்யுங்கள். எந்தத் தலைவரையும் அழிப்பதற்குச் சதித் திட்டம் தீட்டினாரகளா எனக் கண்டறியுங்கள். கல்விக் கொள்ளையடிக்கும் சுதர்சனம் போன்ற காங்.தலைவர்கள் நிதியுதவி செய்கிறார்களா எனத் துப்பு துலக்குங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/11/2010 3:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக