பாவம் காங். ஏமாற்றம் அடைந்து விட்டது. ஆனால், இது குறித்துக் கவலைப்ப வேண்டியவர் எசு.வி. சேகர்தான். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மன்றாடி எதிர்பார்ப்பவருக்குப் போட்டியாக மன்றாடாமலேயே பெறும் வல்லமை படைத்த குட்பு இவரைப்போல் சேருவதற்கு நாள் கடத்தாமல் மூத்தவர் ஆய் விட்டார். குட்பு அதிமுகவில் சேரந்திருந்தால் ஆரியமும் ஆரியமு்ம் கூடிக் கொஞ்சிக் குலவுவதைப் பார்த்தாயா தம்பி என உடன்பிறப்பிற்கு வரும் ஒரு படைப்பு இப்பொழுது வேறு வகையாக வருகிறது. எனினும் குட்புவிற்குவேண்டுகோள்தந்தை பெரியார். அறிஞர்அண்ணா, கலைஞர் மு.க. ஆகியோரின் படைப்புகளையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் இலங்கை - ஈழ வரலாற்றையும் நன்கு படித்துக் கொள்க. தமிழ்நாட்டு மருமகள் என்ற முறையிலும் தமிழ். தமிழர். தமிழ்நாட்டு நலனில் கருத்து செலுத்துக. ஒழுக்கக் கேடான பேச்சிற்கு ஏற்பு கிடைத்தாக எண்ணாமல் தமிழ்ப் பண்பாட்டை அறிந்து பின்பற்றுக! பரப்புக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை :''மக்களுக்கு சேவை செய்யும் கட்சியில் தி.மு.க., தான் சிறப்பாக உள்ளது. தி.மு.க.,வின் கொள்கை பிடித்ததால், அக்கட்சியில் சேர்ந்தேன்,'' என நடிகை குஷ்பு கூறினார்.
சென்னை அறிவாலயத்தில் நேற்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து, நடிகை குஷ்பு, தி.மு.க.,வில் இணைந்தார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி கூறும்போது, ''குஷ்பு தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அவர் முற்போக்கான கொள்கையுடையவர் என்பதை அறிவேன். திராவிட இயக்க கொள்கைகளில் ஆழ்ந்த பற்று இருந்ததால் தான், 'பெரியார்' திரைப்படத்தில் குஷ்புவால், மணியம்மை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடிந்தது. தி.மு.க.,வின் மகளிர் அணியினர், கட்சி வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுவார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்,'' என்றார்.
நிருபர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில்:
குஷ்புவுக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி கொடுக்கப்படுமா?
நானோ, பேராசிரியரோ, ஸ்டாலினோ, எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் கட்சியிலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை. எங்களுடைய உழைப்பையும், ஆர்வத்தையும் பார்த்து, கட்சியில் உள்ளவர்கள் எங்களை இந்த இடங்களில் அமர்த்தியிருக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் குஷ்பு சேரப்போவதாக செய்தி வந்திருந்ததே?
பேப்பரில் தானே, (சிரிப்பு) காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!
குஷ்புவை திடீரென்று கட்சியில் சேர்த்துள்ளது பற்றி?
மாலை 4 மணிக்கு சொன்னதால், உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே அவர் கட்சியில் சேரும் முயற்சியில் ஈடுபட்டு அதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
தி.மு.க.,வில் குஷ்பு சேர வேண்டும் என நிர்பந்தம் செய்யப்பட்டதா?
யாரையும் நிர்பந்தப்படுத்தி கட்சியில் சேர்க்கும் கேவலமான ஒரு முறையை நாங்கள் கடைபிடிப்பதில்லை. குஷ்புவும் அந்த முறைக்குப் பணியக்கூடியவர் அல்ல. விரும்பி வந்து சேர்ந்திருக்கிறார்.
தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து குஷ்புவை போட்டியிட வைப்பீர்களா?
அப்படி ஏதும் ஐடியா இல்லை.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
நடிகை குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:மக்களுக்கு சேவை செய்யும் கட்சிகளில் தி.மு.க., தான் சிறப்பாகச் செயல்படுகிறது. அதன் கொள்கை பிடித்திருந்ததால் சேர்ந்திருக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும், அவர்களின் கருத்தை எடுத்துச் சொல்ல முழு சுதந்திரம் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான். நடிப்பு எனது தொழில். தொடர்ந்து 'டிவி'யிலும், சினிமாவிலும் நடிப்பேன். தி.மு.க., கட்சிக்கு முழு ஈடுபாட்டோடு உழைப்பேன்.காங்கிரஸ் மீது பற்று இருக்கிறது என்று தான் சொன்னேன்; அதில், சேரப் போகிறேன் என்று நான் சொல்லவில்லை.இவ்வாறு குஷ்பு கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக