திங்கள், 10 மே, 2010

மாத வாடகை ௨௫௦௦ ரூபாய் இருந்த வீட்டிற்கு என் நண்பர் ௫௦௦௦ ரூபாய் கொடுத்து வாடகைக்கு வந்தார். எதிர்பாராமல் ௩ மாதத்தில் காலி செய்து விட்டுப் போனார். அடுத்த 6 மாதம் கழித்து இந்தப் பகுதிக்கு மீண்டும் வந்தமையால் காலியாயிருந்த அந்த வீட்டைக் கேட்டதற்கு ௭௫௦௦ ரூபாய் வாடகை கேட்டனர். வாடகைக் கட்டுப்பாட்டு முறையை அரசு ஏன் பின்பற்றவில்லை? வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தாவிட்டாலும் தரகர்கள் கூடுதல் வாடகைக்கு ஆள் கொண்டுவருவதாகச் சொல்லி இருப்பவர்களைக் காலி செய்ய வைக்கும் அநியாயமும் நடக்கிறது. அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக