திங்கள், 10 மே, 2010

தமிழகத்தில் சிகிச்சை பெற பார்வதியம்மாளுக்கு அனுமதி



சென்னை, மே 10: திருச்சியில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தத் தகவலை தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி இன்று தெரிவித்தார்.தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக அண்மையில் பார்வதியம்மாள் சென்னை வந்தார். ஆனால், அவர் தமிழகத்துக்குள் வர அனுமதிக்கப்படவில்லை. வந்த விமானத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் வர அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்தது.இது தொடர்பாக பார்வதியம்மாளிடம் இருந்து கோரிக்கை வந்தால், அதுபற்றி பரிசீலிப்போம் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி, பார்வதியம்மாளிடம் இருந்து கோரிக்கை வந்ததாகவும், அதை ஏற்று மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும் துணைமுதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் பேரவையில் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், திருச்சியில் 6 மாதம் தங்கியிருந்த சிகிச்சை பெற பார்வதியம்மாளுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பதாக முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் இன்று அறிவித்தார். மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டும், குறிப்பிட்ட உறவினர்களைத் தவிர, மற்றவர்களை சந்திக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

புலம் பெயர்ந்தோரை அடைத்து வைக்கும் வதை முகாம்களில் அடைத்து வைத்தால் பிறருடன் சந்திப்பு ஏற்பட்டு எழுச்சி ஏற்படும் என்று பாதுகாப்புக் கைதியாக வருமாறு தமிழக அரசு மத்திய அரசு ஒப்புதலுடன் அழைக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை நய வஞ்சகமாகக் கொன்றகூட்டணி அரசின் செலவில் மருத்துவம் பார்க்க பெருந்துயரம் ஏற்பட்ட மேத் திங்களில் இங்கு வருவது அவமானம் எனக் கருத வேண்டும். சிவாசிலிங்கம் வேறு அரசியல் காணரங்கருதி இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்தாலும் தன்மான உணர்வாளர்கள் ஈழ அன்பர்கள் அழைப்பை மறுக்கச் செய்ய வேண்டும். மருத்துவமனைச் செலவை அரசிற்கு மாற்றாக இங்குள்ளோர் ஏற்றாலும் வீரத் தலைமகன் தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் வீர அன்னையார் பாதுகாப்புக் கைதியாக வர வேண்டா! வர வேண்டா! வர வேண்டா!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/10/2010 6:14:00 PM

[By மொள்ளமாரி நான் அல்ல 5/10/2010 5:28:00PM] நேரடியாக உங்கள் கருத்துக்கே நான் வருகிறேன். விடுதலைப் புலிகள் மத்தலம் முஸ்லிம்களுக்கு செய்த கொடுமை உண்மையானது. மறுக்க முடியாது. மன்னிக்க முடியாது. நான் விடுதலைப் புலிகளைப் பற்றியே பேசவில்லையே!! என் பார்வையில், இந்த அம்மையார் எந்த தவறும் செய்தவர் கிடையாது. இவர் விடுதலைப் புலிகளின் ஓர் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி, அதுவும் மருத்துவ உதவி நாடி வரும் ஒரு நோயாளியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளைதான் நான் சாடியுள்ளேன். மேலும், பிரபாகரன் செய்த தவறுக்கு, ஏதும் அறியாத இந்த அப்பாவி மூதாட்டியை தண்டிப்பது என்பது எந்த விதத்தில் நியாயம்?? ஒரு சோனியாவின் தாலிக்காக, ஒரு லட்சம் தமிழச்சிகளின் தாலிகள் பறிக்கப்பட்டது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா???

By Abdul Rahman - Dubai
5/10/2010 5:58:00 PM

திரு அப்துல் ரஹ்மான் அவர்களே உஙகள் கருத்துக்கு நன்றி அது 100 க்கு 100% உண்மை.

By தஞ்சை ராஜு
5/10/2010 5:55:00 P
++++++++++++++++++++++++++++++
எல்லார் குடும்பங்களிலும வஞ்சகச் சாவும் சிலருக்கு ஊனமும் அனைவர்க்கும உடைமை இழப்பும் நேர்ந்த அவலததிற்குக்காரணமானவர்களை யார் தண்டிப்பது? அடிமைத் தளையில் இருந்து மீட்க உதவாமல் அமைதியாகவும் இராமல் பழிச் சொல் கூறும் பாவிகளைக் கடவுளே மன்னிக்காதீர்!கொத்துக் குண்டுகளால் கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்ற அவலம் இன்னும் உள்ளத்தில் தைத்துக் கொண்டிருக்க மண்ணின் மைந்தர்களை மானம் காத்த வீரர்களை வாழ்த்தி போற்றாமல் வசை பாடுபவர்களை இறைவா, செங்கற் சூளையில் போடு! திருந்தினால் மன்னித்து விடு! மொழி அழிப்பும் இன அழிப்பும் நிலப்பறிப்பும் நடந்தும் பாராட்டுபவர்களைப் படைத்தவனே, வெட்கப்பட்டு வேதனைப்பட்டு மடியச் செய்! வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/11/2010 3:03:00 AM

இலங்கை இப்பொழுது நிலைமை நன்றாக உள்ளதாக மனமறிந்து பொய்யை அவிழ்த்துவிடுபவர்கள் தமிழ்ஈழத்தில் 1 மண்டலம் இருக்கட்டும். பின் சொல்வதற்கு வாய்ப்பிருந்தால் ஏதும் சொல்லட்டும்! தனியாட்சி செலுத்திய மூத்த இனம் அடிமைப்பட்டுக் கிடப்பது மட்டும் அல்ல உலக நாடுகளின் வஞ்சனையால் அழிக்கப்பட்டும் வருகின்றது. அதைப் பற்றிய உணர்வின்றி கூலிக்கு மாரடிப்போர் எதை எதையோ எழுதுகிறார்கள். இன்றைய நிலை எப்படி இருந்தாலும் நேற்றைய வஞ்சகத்திற்கு என்ன தண்டனை? எல்லார் குடும்பங்களிலும வஞ்சகச் சாவும் சிலருக்கு ஊனமும் அனைவர்க்கும உடைமை இழப்பும் நேர்ந்த அவலததிற்குக்காரணமானவர்களை யார் தண்டிப்பது? அடிமைத் தளையில் இருந்து மீட்க உதவாமல் அமைதியாகவும் இராமல் பழிச் சொல் கூறும் பாவிகளைக் கடவுளே மன்னிக்காதீர்!கொத்துக் குணணடுகளால் கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்ற அவலம் இன்னும் உள்ளத்தில் தைத்துக் கொண்டிருக்க மண்ணின் மைந்தர்களை மானம் காத்த வீரர்களை வாழ்த்தி போற்றாமல் வசை பாடுபவர்களை இறைவா, செங்கற் சூளையில் போடு! திருந்தினால் மன்னித்து விடு! மொழி அழிப்பும் இன அழிப்பும் நிலப்பறிப்பும் நடந்தும் பாராட்டுபவர்களைப் படைத்தவனே, வெட்கப்பட்டு வ

By Ilakkuvanar Thiruvalluvan
5/11/2010 3:01:00 AM

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ...ராஜீவ் காந்திய Ex-புருஷன் அப்படின்னு நெனச்சு புட்டாங்க சோனியா !!!

By Kadhar Sattai
5/11/2010 2:41:00 AM

Even now she can go to srilanka means there is no problem for her in srilanka.These people making noise and drama to create a picture that srilanka is not safe.Indeed noe it is better than LTTE period. Lot of srilankan people accept that. These refugees donot want to lose their status in foreign countries.

By prabu
5/11/2010 1:46:00 AM

donot say srilankan people are suffering in Srilanka. From europe lot of people now very well contact with their family in srilanka.Some of them even buy properties there now. This is real.These foreign living refugees want to extend their stay to earn money .So they never back to srilanka.Only to visit.Why these drama for equal right while all the population wants to stay out side and poor innocent stay there.Can ilakkuvanar ,Koopu,Usananthan have guts to ask the all the foreign refugees to come back and fight for their rights in a properway?They cannot never.They will talk,curse india and do nothing.

By navi
5/11/2010 1:41:00 AM

These refugees have no work.Sitting and making comments against India is the only work for usu,koopu,illakku etc.,You rich foreign refugees have enough money earned from all illegal things .Then why again ask treatment in INDIA.Goto Denmark orCanada where her own son is there.Even though INdia acts on Humanity these people donot know the regulation to enter into a country.Because they always famous with fake passport and Kallathonis. First stop advesecomment abpout our elder leader Kalainger and others.There is no right to crtisize our leaders.If you want comment in your country news paper about your srilankan leaders. Donot make cheaprate politics with this oldlady. India have bengali,hindi people.They also have problems in those countries they migrated.You stupid srilankan tamils always think that only yask for INdia is to kill prabakaran. We have other things to do.smuggling,kidnapping,killing,stock scandal,using human bombs,training to other terroristfor money,getting other

By Rajaprabakaran
5/11/2010 1:33:00 AM

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாள் மலேசியாவிலிருந்து இன்று மாலை இலங்கை வந்தடைந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையதளத்திற்கு தெரிவித்தார். பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் இந்தியா அவருக்கான அனுமதியை வழங்கவில்லை. இந் நிலையில் மலேசியா ஒரு மாதம் தங்குமிடம் வீசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது. எனினும் பார்வதி அம்மாள் இன்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார். _

By முத்தமிழ்
5/11/2010 1:03:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக