வெள்ளி, 31 டிசம்பர், 2010

amnesty international. aust.stand on EEzham thamizh

யார் பொறுப்பேற்றாலும்  நாடு கடத்தப்படுபவர்கள் உயிரிழப்பிற்கும் கொடுமைகளுக்கும் அது தீர்வாகுமா? எனவே, இப்பொழுதுள்ள சூழலிலேயே காக்க வேண்டிய பொறுப்பை ஆசுதிரேலிய அரசும் பன்னாட்டு மன்னிப்பு அவையும் ஏற்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழத் தமிழர்களை ஆஸி. நாடு கடத்தக் கூடாது: சர்வதேச மன்னிப்பு சபை

First Published : 31 Dec 2010 02:51:07 PM IST

Last Updated : 31 Dec 2010 03:22:29 PM IST

கொழும்பு, டிச.31- ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரியுள்ள ஈழத் தமிழர்களை அந்நாட்டு அரசு நாடு கடத்தக் கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை (ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்) வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஈழத் தமிழர்கள் 10 பேருக்கு ஆஸி. அரசு அடைக்கலம் அளித்தது. ஆனால், இலங்கை புலனாய்வுத்துறையின் வலியுறுத்தலின் பேரில் அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஈடுபட்டு வருவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அவ்வாறு ஈழத் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டால் இலங்கையில் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஸ்திரேலிய அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐநா சபையின் அகதிகளுக்கான பிரகடனத்தின்படி, அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களை மீண்டும் அவர்களது நாட்டுக்கு கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்புவது இல்லை என்ற மரபை சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக் காட்டியுள்ளதாகவும் இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

confusiont in priority to tamil medium : தமிழ் வழி நியமன முன்னுரிமை அறிவிப்பில் குழப்பம்

அரசாணைக்கிணங்கத் தமிழ்வழி படித்தோர் என்பது குறிப்பிட்ட பணிக்கான கல்வித் தகுதியில் தமிழ்வழி பயின்றிருக்க வேண்டும் என்பதுதான். எனவே, குழு ௨ இன் அடிப்படைக் கல்வித் தகுதி பட்ட வகுப்பாக உள்ளமையால் பட்ட வகுப்பில் தமிழில்  தேறியிருக்க வேண்டும். ஆனால், அரசு  இதனை மாற்ற வேண்டும். குறிப்பிட்ட கல்வித் தகுதியில் தமிழ் வழி பயின்றோர் இல்லாத பொழுது அதற்குக் குறைந்த கல்விநிலையில் தமிழ் வழி பயின்றோருக்கும் முன்னுரிமை தர வேண்டும். மேலும்  இதனை ௮௦ விழுக்காடாக உயர்த்துவதே நீதியாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தமிழ் வழியில் படித்தோருக்கு வேலைவாய்ப்பு: நியமன முன்னுரிமை அறிவிப்பில் குழப்பம்

First Published : 31 Dec 2010 01:57:29 AM IST


சென்னை, டிச.30: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணையில், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நேரடி நியமனங்களில் 20 சதவீத இட முன்னுரிமை என்ற அரசாணை குறித்து போதிய விளக்கம் அளிக்கப்படாதது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த அரசாணை குறித்த அரசின் விளக்கத்துக்காக காத்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. குறிப்பிட்டுள்ளது. எனவே, இதுகுறித்து தமிழக அரசு உரிய அறிவுறுத்தல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் நேரடி நியமனங்களில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுதொடர்பான அரசாணை தமிழக அரசால் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 எழுத்துத் தேர்வு அறிவிப்பாணையில், தமிழ் வழியில் படித்தோருக்கான 20 சதவீத வேலைவாய்ப்பு முன்னுரிமை குறித்து அரசின் விளக்கத்துக்கு காத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ் வழியில் படித்தோர் என்பது, எந்தப் படிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெளிவுப்படுத்தவில்லை. தமிழ் வழிப் படிப்பு என்பது பிளஸ் 2 வரையா அல்லது இளநிலைப் படிப்பு வரையா என்பது குறித்து விரிவான அறிவிப்பு இல்லாததால், மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.எனவே இதுபற்றி போதிய விளக்கத்தையும், 20 சதவீத இடங்களில் எத்தனை பணியிடங்கள் கிடைக்கும் என்பதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கிட வேண்டும்.தமிழக மாணவர்களைப் பொறுத்தவரையில் பிளஸ் 2 வரையில் தமிழ் வழியிலும், இளநிலைப் படிப்பை ஆங்கில வழியிலும்தான் பெரும்பாலானோர் படித்துள்ளனர். அறிவியல் பாடம் பெரும்பாலும் ஆங்கில வழி மூலமே கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ் வழிப் படிப்பு எதுவரை என்ற அளவுகோலில், பிளஸ் 2 வரை என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் ஏராளமான மாணவர்கள் பயன் பெறுவர் என்று மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.800 பணியிடங்கள்: சுமார் 4,300 பணியிடங்களில் அரசு வேலைவாய்ப்பு நேரடி நியமனங்களில் 20 சதவீத முன்னுரிமை அரசாணையின்படி, சுமார் 800 பணியிடங்களுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே நாளில் யு.பி.எஸ்.சி. - டி.என்.பி.எஸ்.சி தேர்வு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி வணிக வரி ஆணையர், உதவி வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருவாய்த் துறை உதவியாளர் உள்ளிட்ட 4,300-க்கும் அதிகமான காலி பணியிடங்களுக்கான குரூப்-2 எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.இத்தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2011 ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 2011 பிப்ரவரி 12-ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு குறித்த தேர்வு அட்டவணையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்நிலைத் தேர்வு ஜூன் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வும், யு.பி.எஸ்.சி.யின் முதல்நிலைத் தேர்வும் ஒரே தேதியில் நடைபெற உள்ளன. டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு அறிவிப்பு, யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

meetting for changing the name of aadhi draavidar: 'ஆதிதிராவிடர்' பெயரை மாற்றக் கலந்தாய்வுக்கூட்டம்

எசு.சி. என்பது பட்டியலிட்ட வகுப்பினர் என்றுதான் பொருள்படும். நாம்தான் தேவையின்றி மாறி மாறி அழைத்துக் கொண்டு வருகிறோம். ஆதித்திராவிடர்கள் எனச் சொல்வது தவறென உணர்ந்து ஆதித்தமிழர்கள் எனச் சொல்வாரும் உண்டு. மக்கள் வழக்கில்  இவ்வாறு கூறலாம். ஆனால், அரசு பட்டியல் வகுப்பினர் என அரசியல் யாப்பிற்கு இணங்கக் குறிப்பிடுவதே முறையாகும். அதே நேரம பெயரில் ஒன்றும் இல்லை; வாழ்க்கை முறையில்தான் சிறப்பு உள்ளது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் குழந்தைகள் (அரிசனம்)  எனக் காந்தியடிகளால் அழைக்கப்பட்டபொழுதும் தீண்டாமை இருந்தது. இப்பொழுதும் முழு முன்னேற்றம் இல்லை. அவர்களின் நிலை மாறினால் எப்படி அழைத்தாலும்   ஒன்றும்  இல்லை என்னும் நிலைக்கு வந்து விடுவர். எனவே, பட்டியல் வகுப்பினர் நிலையை உயர்த்துவதில் அரசு கருத்து செலுத்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


'ஆதிதிராவிடர்' பெயரை மாற்ற ஆலோசனைக் கூட்டம்

First Published : 30 Dec 2010 12:46:35 PM IST


சென்னை, டிச.30: ஆங்கிலத்தில் ஷெட்யூல்டு கேஸ்ட் என்ற சொல்லுக்கு தற்போது ஆதிதிராவிடர் என்று பயன்படுத்துவதை மாற்றி வேறு ஒரு சிறந்த மாற்றுப் பெயரை தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் குழுவின் துணைத் தலைவரான ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் தமிழரசி, உறுப்பினர்களான சட்டத்துறைத் செயலர் தீனதயாளன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முதன்மைச் செயலர் விஷ்வநாத் ஷெகாவ்கர், ஆதிதிராவிட நலத்துறை ஆணையர் சிவசங்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

எஸ் .சி. என்றால் யார் சொன்னது ஆதி திராவிடர் என எஸ் சி என்றால் தாழ்த்தபட்டடவர்கள் என அர்த்தம்
By pmuruga
12/30/2010 6:02:00 PM
உண்மை திராவிடர்கள் என்று பெயர் வைக்கலாம்
By senthilkumar
12/30/2010 4:59:00 PM
பெயர் எல்லாம் மற்ற வேண்டாம் அவகளுக்கு உரியதை கிடக்க வழிய செய்யவும் மினிஸ்டர் அண்ட் FAMILY மட்டும் முன்னேறினால் போதாது.
By KANDASAMY
12/30/2010 4:39:00 PM
முதுகுடிகள்-ன்னு வைங்க..
By சுதேசி
12/30/2010 1:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


top 5 readers opinions:முதன்மை 5 வாசகர் கருத்துகள்

விழிப்புணர்விற்காகவும் நீதிக்காகவும் கேரளச் சார்பில் நடந்து கொள்ளும் தொடர்வண்டித்துறையின் ஓர வஞ்சனையை வெளிப்படுத்திய தினமலருக்குப் பாராட்டுகள். வெறும் அஞ்சல் மூலம் நடவடிக்கை எடுத்துத் தூங்காமல் அரசே உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 30 டிசம்பர், 2010


நம்நாடு சமயச் சார்பற்ற நாடாக நடந்து கொள்ளாமல் பல்சமயச் சார்பு நாடாக நடந்து கொள்கிறது. எனவே, சமயத்தவர்க்கான சலுகைகள் மூலம் ஆட்சி நடத்த விரும்புகிறது. கட்டாய சமய மாற்றத் தடைச் சட்டம் தேவையே. அதே நேரம் ஒருவர் தான் தமிழர் சமயத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பதற்கும் சமயச்சார்பற்றவர் எனக் குறிப்பதற்கும் இவ்விரு வகையினருக்கும் முன்னுரிமை கொடுப்பதற்கும் அரசு முன்வரவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அதிமுக அரசுதான் ரத்து செய்தது ஜெயலலிதா அறிக்கை

First Published : 29 Dec 2010 12:17:59 PM IST

Last Updated : 29 Dec 2010 12:20:57 PM IST

சென்னை, டிச. 29: கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தை அதிமுக அரசுதான் ரத்து செய்தது என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை :திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதி 2006ல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தான் தமிழ் நாடு கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் நீக்கம் செய்யப்பட்டது என்ற ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.  இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தவறான செய்தி குறித்து சிறுபான்மை இன மக்கள் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சில நிகழ்வுகளை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு உள்ளேன். 1991 - 1996 மற்றும் 2001- 2006 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது அனைத்து சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளையும் பாதுகாத்து, அவர்களது நலன்களை பேணி மேம்படுத்தி சாதனைகள் புரிந்து வந்ததை அனைவரும் நன்கு அறிவர்.தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.  இது குறித்து நானும் பல முறை மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன்.  நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டமன்றத்தின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும்  மீண்டும் உயிர் பெறாது.  இது தான் சட்ட நிலைப்பாடு.சட்டமன்றத்திற்கு கொண்டு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை.  இது 1985-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  இது குறித்து ஏற்கெனவே நான் முதலமைச்சராக இருந்த போது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்து இருக்கிறேன்.2006-ல் கருணாநிதி மைனாரிட்டி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டப்பேரவையில் கொண்டு வந்து அதனை அவரது அரசு தான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி நான் தான் கொன்றேன் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006-இலேயே தெளிவுபடுத்தி இருந்தேன்.  அதையே மீண்டும் கூறுகிறேன்.ஆகவே, இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்தது எனது தலைமையிலான அதிமுக அரசு தான் என்பதை தெளிவுபட தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துகள்

இப்படி ஒரு முட்டாள்தனமான அறிக்கையை வெளியிட ஜெயலலிதாவிற்கு மூளை இல்லை.... இதை ஒரு அறிக்கையை என்று பிரசுரிக்க தினமணிக்குமா அறிவில்லை......
By குமரி அருள்
12/29/2010 6:27:00 PM
கட்டாய மத மாற்ற சட்டம், கொண்டுவரப்பட்டபோது, அதை ஊடகங்கள் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டதாக செய்திகள் வெளியிட்டன. மக்கள் குழம்பி விட கூடாது என்று அரசு அதை திரும்ப பெற்று விட்டது. நடந்தது இது தான்
By balamurugan
12/29/2010 6:21:00 PM
சிறந்த நிர்வாகத் திறமை உள்ளவர்; எதையும் தைரியமாக செய்பவர் என்ற பெயர் இருந்தாலும், தடாலடியான, பின் விளைவுகளை பார்க்காமல் எடுத்த நடவடிக்கைகள்தான் எதிகட்சிக்கு சாதகமானதாக போய்விட்டது என்பதே உண்மை. அதற்க்கு உதாரணங்கள் - மத மாற்றத் தடைச் சட்டம். உயிர்பலி தடை சட்டம் கொண்டு வந்தது, அரசு வேலைக்கான ஆட்கள் தேர்வை நிறுத்தி வைத்தது. லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை ஒரே சமயத்தில் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இதில் முதல் இரண்டிற்கான சட்டம் மிக அதிகமான எதிர்ப்பால் ரத்து செய்யப்பட்டது. அரசுப் பணிக்கான நியமனம் கடைசிவரை செய்யப்படவில்லை. ஊழியர்கள் பணி நீக்கம் என்பது அந்த உழியர்களை மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களையும் பாதிப்படைய வைத்தது. அதுமட்டுமல்ல உழைக்கும் வர்க்கம் அனைவருமே பாதிப்புக்கு உள்ளானார்கள், இப்போதும் உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள். என்ன சொல்ல..?
By ராமராசு
12/29/2010 5:35:00 PM
M.Karunanidhi is known for cheating and corruption in his entire long history of political career. Current claims by Karuna pointed out by JJ is a testimony how MK is cheating public by mere lies. By the way, A.Raja is not yet arrested though causing 1.76Lakh crores of loss, because MK is still protecting him in gratitude for the getting his share of the loot
By moh
12/29/2010 5:28:00 PM
மகாத்மா காந்தி சொல்கிறார் - “எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” – ஹரிஜன், மார்ச் 13, 1937. “என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது” - ஹரிஜன், நவம்பர் 5, 1935.
By AR.K
12/29/2010 5:11:00 PM
எந்த மதத்தில் சலுஹைகள் கிடைக்கிறதோ அந்த மதத்துக்கு சீக்ரம் மாறி, சலுஹைகளை அனுபவிப்போம்.
By Indian
12/29/2010 5:07:00 PM
ஜெயலலிதா RSS ஐ விட மோசமானவர் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை
By உண்மை தமிழன்
12/29/2010 5:01:00 PM
An Act which was passed by Assembly can be cancelled by Assembly only. Even if it is annulled through Ordinance, same has to be ratified by Assembly, though the effective date may be the date of Ordinance and not the date of ratification by Assembly. An Ordinance, if not ratified within 6 months by Assembly will lose its purpose and become ineffective. Thus, both Jayalalitha and Karunanidhi are correct in their own style of explanations.
By K. Rajan
12/29/2010 4:57:00 PM
Jeyalalitha introduced ANTI-CONVERSION bill in TN assembly and forcefully implemented it in TN against the mass protest of TN public. Then during the 2004-2005 Parliament elections, She was rooted out in TN. TN awarded her Zero seats to ADMK. Immediately after the results, she told to the media that she will accept the defeat and rollback the ANTI-Conversion law. His highness Kanchipuram Priest told in front of the media that "Jeyalalitha doesnt have guts to go with ANTI-CONVERSION LAW which she implemented it". I hope Jeyalalitha has forgotten these events or she thinks that we people from TN has forgotten these events. Election is comming very soon, we TN public will again teach a lesson to Madam Jeyalalitha. After that she will never forgot those events in her lifetime and will never speak like this.
By Davis
12/29/2010 4:31:00 PM
It is unfair that Dinamani has posted this news in Front page. Infact dinamani should write an article on Jeyalalitha's statement and condemn her in front page.Because ANTI-CONVERSION law was brought by Jeyalalitha in her tenure when many peoples protested against this law across the state. How can Jeyalalitha proudly say that she revoked ANTI-CONVERSION law when she herself forcefully implemented it in Tamilnadu. Isnt it a Knowledge corruption done by Jeyalalitha?. It is the duty of dinamani to post a neutral article on her statement otherwise the best news paper in TN " dinamani " will be termed as BIASED. I read dinamani daily, but this news should have article in dinamani condemning jeyalalitha's statement. As always, i hope dinamani meets the expectation of 8 crore tamils of TN. Thanks.
By edward
12/29/2010 4:25:00 PM
"கட்டாய மத மாற்ற தடை சட்டம் மீண்டும் கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் இந்தியாவை ஹிந்து நாடா அறிவிக வேண்டும்."
By manish
12/29/2010 3:39:00 PM
Jayalalitha's statement is true and should be appreciable. It is the mistake of DMK's leader to fool the peoples and wishing that he will become a hero among the minorities. Hindu's are divided and don't bother about the community but give importance to their own caste. PMK leader Ramadass also said the Forcefull conversion of community change is unlawfull. DMK should see the future in broad vision and try to avoid the near by vote banking which is very unlawfull and not going to yield any rich potentials for the country.
By Sundaran
12/29/2010 3:22:00 PM
What is wrong in her statement? She did this for the sake of poors who are forced to join in other community by way of blackmail and money. This law prevents that activities only. This law is not for the peoples who are willing try to convert themselves to other communities. Karunanithi is always looking for his vote bank without a common vision about the country and future. Jayalalitha is right in this aspect.
By saravanan
12/29/2010 3:17:00 PM
முதலில் அந்த கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை கொண்டுவந்தது யார் ? அவர்களது உள்நோக்கம் என்ன ? என்பதையும் ஜெயலலிதா தெளிவுபடுத்துவது நல்லது.
By ராம்
12/29/2010 1:41:00 PM
உன்னை பத்தி தெரியாதா? நீதானே சிறுபான்மையினரை நசுக்கினாய். உன் திரு வாயால் தானே பல ஆயிரம் உயிரை மத துவேசத்தில் பலிவாங்கிய, பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில ராமர் கோயில் கட்டாமல் எங்கு கட்டுவது என திரு வாய் மலர்ந்தருளினாய். உன்னை பத்தி நடுநிலை ஹிந்து சகோதரர்களும், சிறுபான்மை முஸ்லிம்,கிறிஸ்டியன் சகோதரர் களும் மிக நன்கு அறிந்தவர்கள். சாதிக்- Jeddah
By SADIK
12/29/2010 1:34:00 PM
It is well known that MS.Jayalalitha had introduced the non-conversion law and there was a lot of protest from all sections of people and particularl media was against it and she has no other way except to with draw it by a special ordinance. I can not understand her statement that she had done it for the protection of minority community. She can not fool the common people by giving such statement. She should fair in all her statement in future and contest election and come to power with thje advantage of Spectrum case.
By M.Thangarajan
12/29/2010 1:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

தமிழ்ப் பெண்களுக்கு இலங்கை அரசு கொடுமை

தெய்வமும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! சான்றோரும்  உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்! பெண்டிரும் உண்டுகொல்! பெண்டிரும் உண்டுகொல்! எனப் புதிய கண்ணகி உலக மக்களைக் கேள்விகேட்டு உண்மையை உணர்த்த வேண்டும். இத்தனை அட்டூழியங்கள் நடந்துமஅதற்குத் துணை நிற்கும்  இந்தியாவில் வாழ்வதற்காக வருங்காலம் நம்மைப் பழிக்கும். உலகில் மனித நேயம் சிறிதேனும்  இருக்கிறதென்றால்  இன அடிப்படையில் தமிழ்ப் பெண்களுக்குக் கொடுமைகள்  இழைப்பவர்களுக்குக் கொடுந் தண்டனை கிடைக்க வேண்டும். இனியேனும்  தமிழ்ப் பெண்கள் நலமாக வளமாக மனம் மகிழ்வாக வாழ வகை செய்ய  வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ்ப் பெண்களுக்கு இலங்கை அரசு கொடுமை: 
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு

First Published : 29 Dec 2010 03:18:48 PM IST

Last Updated : 29 Dec 2010 04:21:20 PM IST

கொழும்பு, டிச.29- இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து கொடுமைகளை செய்து வருகிறது என்றும், இதுதொடர்பான விவரங்களை மனித உரிமை அமைப்புகளுக்கு உரிய ஆதாரங்களுடன் சமர்பிப்போம் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து அவர் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காலங்காலமாக இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவந்துள்ள இன அழிப்பு முயற்சிகளை மிகக் கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் தமிழ்ப் பெண்கள், சிறுவர், முதியோர் ஆகியோரே. இலங்கை படைகள் சென்ற ஆண்டு நடத்திய போரின்போது அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொண்ட குண்டு வீச்சுக்கள், கொலைகளின் போது கூடுதலாகப் பாதிப்புக்குள்ளானவர்களும் இவர்களே. அண்மைக்காலமாக ஊடகங்கள் வழியாக ஈழப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரக் கொடுமைகள், சித்ரவதைகள், படுகொலைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இக்காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளெல்லாம் கொடூரமான கதையொன்றின் சிறுபகுதி மட்டுமே. இளம்பெண்கள் எத்தனையோ பேர் இலங்கை அரசின் பிடியில் சிக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு தினமும் உள்ளாகின்றனர். ஊடகவியலாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, உசாலினி மற்றும் பலரது கொடூரம்மிக்க அனுபவங்கள் இலங்கை அரசின் கைகளில் தமிழ்ப் பெண்கள் வயது வேறுபாடின்றிக் கொடுமைக்குள்ளாவதைத் தெளிவாக்குகிறது. எமது அமைச்சகமானது பெண்கள் சிறுவர் முதியோர்களுக்கு எதிராக இலங்கை அரசால் இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச அளவில் இயங்கும் பெண்களுக்கான இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு ஆவணங்கள் மூலமாகவும்; நேரடித் தொடர்புகள் ஊடாகவும் கொண்டு வந்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் பெண்கள் அமைச்சகம், நிழல் அமைச்சகம் போன்றவற்றுடனும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பாலாம்பிகை முருகதாஸ் அந்த அறிக்கையில் தெரிவி்த்துள்ளார்.
கருத்துகள்

"மனித உரிமை அமைப்பு"??? அப்படியென்றால் என்ன??? ஒரு கிலோ எவ்வளவு???
By Abdul Rahman - Dubai
12/29/2010 4:50:00 PM
நன்றி தாயே
By தி.prabakaran
12/29/2010 4:27:00 PM