மத்திய அரசிற்குப் பாராட்டுகள். கண் துடைப்பாக அல்லாமல் அனைத்து மொழிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கட்சி வேறுபாடின்றிப் போராடிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராட்டுகள். இது குறித்து மடல் எழுதிய முதல்வருக்கும் பாராட்டுகள். உடனே அவர் தமிழகத் தேர்வாணையத்திலும் தமிழுக்கு முதன்மை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் தமிழ் வழிக் கல்வி அமைய ஆவன செய்ய வேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக