இவ்வறிப்பு
குறித்து மகிழ ஒன்றும் இல்லை. காரணம் கலைஞர் மத்திய அரசில் பங்கேற்பதிலிருந்து
நடத்தும் நாடகங்கள்தாம். இதற்குக் காரணங்கள் இரண்டாக இருக்கலாம். ஒன்று, முன்புபோல் மத்திய அரசு
தீர்மானத்தை ஆதரிப்பதாக அறிவிப்பதாக இருந்து அதை அறிந்து எச்சரிப்பதுபோல் வீர உரை
பேசுவது. இந்தியா ஆதரிப்பது என்ற போர்வையில் தீர்மானத்தை முன்புபோல் நீர்க்கச்
செய்யும் என்பது அறிந்ததுதான். அது குறித்து எதுவும் கவலைப்படப் போவதில்லை. இரண்டு, வழக்குகளில் இருந்து தம் குடும்பத்தைக்
காப்பாற்றுவதற்காக விடப்படும் மிரட்டலாக இருக்கலாம். இரண்டும் இல்லை என்றால் சில மணி நேர உண்ணா நோன்பு நாடகத்தை நடத்தப்பட
வேண்டிய கட்டாயச் சூழலையும் மத்திய அரசின் இன அழிப்புப் பங்கேற்பையும்
வெளிப்படையாகக் கூறித் தமிழ் மக்களிடம்
தாம் வாய்மூடி இருந்து கட்சியின் வாயையும் கட்டிப்போட்டதற்கு மன்னிப்பு
கேட்பதுதான். என்ன செய்வது? இரண்டாம் முசிபூராக இருந்தவர் இரண்டாம் மன்மோகனாக மாறிவிட்டாரே!
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக்
காப்போம்!/
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக