திங்கள், 11 மார்ச், 2013

ஆயுதப்படைச் சட்டம் திரும்பப்பெறும்வரை உண்ணாநோன்பு தொடரும்









"ஆயுதப்படை ச் சட்டம்  திரும்பப்பெறும்வரை உண்ணாநோன்பு  தொடரும்



புதுதில்லி:""மணிப்பூரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறும் வரை, உண்ணாவிரதத்தை கைவிட மாட்டேன்,'' என, கடந்த, 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் ஷர்மிளா, திட்டவட்டமாக கூறியுள்ளார்.மணிப்பூரில், பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காக, பாதுகாப்பு படையினருக்கு, சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. கடந்த, 2000ல், மணிப்பூரில், அசாம் ரைபிள் படைப் பிரிவினரால் பொதுமக்கள், 12 பேர், கொல்லப்பட்டனர்.இதை எதிர்த்தும், சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெறக் கோரியும், மணிப்பூரைச் சேர்ந்த ஷர்மிளா, சாகும் வரை உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 12 ஆண்டுகளாக, திட உணவு எதுவும், இவர் சாப்பிடுவது இல்லை.மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு, திரவ உணவு செலுத்தப்படுகிறது. இவருக்கு எதிராக, தற்கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, கடந்த வாரம், டில்லி கோர்ட்டில் ஆஜரான ஷர்மிளா, "இதுபோன்ற வழக்குகள் மூலம், என் போராட்டத்தை தடுக்க முடியாது' என்றார்.

நேற்று, அவர் கூறியதாவது:பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தால், மணிப்பூர் மக்கள், தினமும் பயத்திலேயே உயிர் வாழ வேண்டியுள்ளது. இந்த சட்டத்தை, மத்திய அரசு வாபஸ் பெறும் வரை, என் போராட்டம் தொடரும்; அதில், எந்த மாற்றமும் இல்லை.இது தொடர்பாக, என் சார்பாக எந்தவித சமரச முயற்சியும் மேற்கொள்ளவில்லை. என் போராட்டத்துக்கு மாணவர்கள் அளிக்கும் ஆதரவு, பெரும் பலமாக உள்ளது. என்னுடன் சேர்ந்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும்படி, யாரையும் நான் வற்புறுத்தவில்லை.அதற்கு பதிலாக, என் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும், ஆக்கப்பூர்வமான ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே, என் விருப்பம். மணிப்பூர் விவகாரம் குறித்து விசாரித்த, நீதிபதி வர்மா கமிஷன், சிறப்பு அதிகார சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என, வலியுறுத்தியது.நானும், இதே கருத்தை வலியுறுத்தி தான், உண்ணாவிரதம் இருக்கிறேன். ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள தலைவர்கள், மணிப்பூர் விவகாரத்தில், தாங்கள் எடுத்த முடிவு தவறானது என்பதை உணர வேண்டும்.ராணுவத்தை, அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நான், தற்கொலை செய்யப் போவதாக, பொய்யான தகவல்களை கூறி வருகின்றனர். தற்கொலை செய்ய முடிவு செய்திருந்தால், அதை எப்போதோ செய்திருப்பேன். இத்தனை நாள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு, ஷர்மிளா கூறினார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக