திங்கள், 11 மார்ச், 2013

உனக்கும் பெப்பே ! உன் அப்பனுக்கும் பெப்பே! மறுத்தது இலங்கை

உனக்கும் பெப்பே ! உன் அப்பனுக்கும்  பெப்பே!

இந்தியாவின்   அறிவுரையை மறுத்தது இலங்கை

First Published : 11 March 2013 03:57 AM IST

ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு இந்தியா அளித்த ஆலோசனையை இலங்கை நிராகரித்து விட்டது.
இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்தும், போர்க் குற்றங்கள் குறித்தும் சுதந்திரமான, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது. தீர்மானத்தின் நகல்கள் கடந்த 7ஆம் தேதி பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. இது குறித்து அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்மானம் நிறைவேற வழிகாணுமாறு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை தெரிவித்தது. ஆனால், இந்த யோசனையை இலங்கை திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.
இது தொடர்பாக, அமெரிக்கப் பிரதிநிதி எய்லீன் டானஹு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கையைச் சேர்ந்த ரவிநாதா ஆர்யசின்ஹா பேசியது: அமெரிக்காவுடன் பேச்சு நடத்த எங்கள் நாடு உத்தேசிக்கவில்லை. அமெரிக்கத் தீர்மானத்தின் சாராம்சத்தை இலங்கை முற்றிலுமாக நிராகரிக்கிறது. கடந்த ஆண்டு (2012) மார்ச் மாதம் அமெரிக்க ஆதரவுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அத்தீர்மானத்தில், சாதகமான ஓர் அம்சம் இருந்தது. இலங்கை அரசின் ஒப்புதலின் பேரில் மட்டுமே மனித உரிமைகளுக்கான ஆணையர் அலுவலகம் ஆலோசனை வழங்க வேண்டும் என்பதே அது. இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது குறித்து அறிக்கை தருமாறு மனித உரிமை கவுன்சில் மேற்கண்ட அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டது. ஆனால், இதற்கு மாறாக மனித உரிமைகளுக்கான ஆணையர் நவி பிள்ளை செயல்பட்டுள்ளார். அவர் மனித உரிமை கவுன்சிலுக்கு அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தும் தன்னிச்சையாகவும், தேவையின்றித் தலையிடுவதாகவும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் உள்ளன.
இலங்கையில் போர்ப் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தும் செயல்திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு நவி பிள்ளை உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை.
தவறுகளைக் கொண்ட தீர்மானம்: நவி பிள்ளை அளித்த பாரபட்சமான அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா இப்போது கொண்டுவந்துள்ள வரைவுத் தீர்மானம் கோருகிறது. இது, கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கருத்தில் கொள்ளாததோடு, அதிலிருந்து முற்றிலுமாக விலகிச் சென்றுள்ளது.
ஒரு நாட்டுக்கு ஐ.நா. பார்வையாளர்கள் வருகை புரிவது என்பது சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்புதல் அல்லது அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபை மற்றும் மனித உரிமை கவுன்சில் இயற்றிய தீர்மானங்களுக்கு மாறாக அமெரிக்காவின் இப்போதைய தீர்மானம் அமைந்துள்ளது. பல்வேறு மனித உரிமைகள் விவகாரத்தில், ஐ.நா. பார்வையாளர்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி இலங்கைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் கூறுகிறது.
தீர்மானம் என்ற பெயரில், சில நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவமானப்படுத்தி அவற்றை தனிமைப்படுத்துவது தேவையற்றது. குறிப்பாக, இலங்கை 30 ஆண்டு காலப் போருக்குப் பின் மறுசீரமைப்புப் பணிகளில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ள நிலையில், இந்த அணுகுமுறை தேவையில்லை என்றார் ரவிநாதா ஆர்யசின்ஹா.
வஞ்சகச் சுவாமியின்   ஒழிப்பு  முயற்சி தோல்வி
இதனிடையே, போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை கோருவதை வலியுறுத்த வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முயற்சி மேற்கொண்டார்.
ஆனால், சுவாமி மற்றும் இலங்கைப் பிரதிநிதிகள் ஆகியோரின் முயற்சிகள் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(5)

subramanya swamy is not related to this he is a traiter of bloody rajapakshe kick out s s swamy ettappa son
..சு.சாமி எப்போதுமே இலங்கைத் தமிழ் விரோதி . அதை அவர் மறுத்தது இல்லை .இப்போதும் அதை தொடர்கிறார். இதில் நாம் ஏமாறவில்லை. ஆனால் உலகத் தமிழர் தலைவர் ,தோணி கவிந்தாலும் அதில் பயனிப்பவரை காப்போம் ,அவரை கரை சேர்ப்போம் என்று கூறி பல லக்ஷம் தமிழர்களும்[ இளங் குமரன் பாலகுமாரன படுகொலைக்கு உள்பட]கொன்று குவித்து ராஜபக்சே கொலைவெறியை கண்டிக்காமல் [ தான் பதவியில் இருந்தபோது ]ஒன்றும் நடக்கவில்லை இன்றுவரை காங்கிரஸின் அடிவருடியாக இருப்பவரை என்ன சொல்ல !அந்த காங்க்றேச்ஸ் ஆட்சி அவர் கொடுத்த பிச்சை அல்லவா /
பிளஸ் எங்க தமிழ் ஈனத்தை காப்பாத்துங்க எங்க ஈனம் அழிநதுபோகுது. இயேசுஅப்பா இன்னும் ஏன் மெளனம் ? இரத்தத்துக்கு பழி வாங்குவேன் என்றிரே..... இப்படிக்கு, தேவனை நம்பியிருக்கும் தமிழன்
தமிழனுக்கு எந்த ஒரு தேவனும் ......உம் தேவையில்லை. எங்கு இருந்து வருகிறது இந்த இனவெறி.. தமிழனுக்காக நிற்க நினைத்தால் மனிதனாக நில், நரகரீகமாக நிற்காதே....
வணக்கம், சிங்களவர்கள் எப்போதுமே அடாவடிதனத்துடனே செயல்படுவார்கள். நம் மத்ய அரசின் கூற்றின் படியே வைத்து கொண்டிருந்தால், ராணுவ மற்றும் ஆயுத உதவியோ செய்திருக்க கூடாது. இலங்கையில் தமிழ் இனத்தவர்களுக்கு பதிலாக ஒரு சிங் இனத்தவர் அழிக்கபட்டிருந்தால் இந்த பதில்தான், நம் மத்திய அரசின் பதிலாக இருக்குமா. . ? இந்தியர்களாகிய நாம் யோசித்து பார்க்கவேண்டும். நம்மவர்கள் நிலையினால் மற்ற ஐ.நா உறுப்பினர்களும் பின்வாங்குவார்கள். இந்த பிரேரனையும் பலனிக்க போவதில்லை. இவர்களை நம்பி தமிழக மாணவர்களும் பாதிக்க உள்ளனர். இவ்வளவு போராட்டத்திற்கு பிறகும் மத்திய அரசு அசைவாதக தெரியவில்லை. அவர்களே முடிவெடுக்க வேண்டும். 

ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் : அமெரிக்காவுடன் பேச்சு நடத்த இலங்கை மறுப்பு - இந்தியாவின் ஆலோசனையை நிராகரித்தது
புதுடெல்லி, மார்ச். 11-

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த இறுதி கட்டப் போரில் மிகப் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. போர்க் குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

இதுகுறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் ஏற்கத்தக்க தீர்மானம் நிறைவேற்ற வழி காணுமாறு இலங்கைக்கு இந்தியா ஆலோசனை தெரிவித்தது. இந்தியாவின் இந்த ஆலோசனையை இலங்கை அரசு நிராகரித்துவிட்டது.

இது தொடர்பாக அமெரிக்க பிரதிநிதி எய்லீன் டானஹு ஏற்பாடு செய்த கூட்டத்தில் இலங்கையை சேர்ந்த ரவிநாதா ஆர்ய சின்ஹா பேசியதாவது:-

அமெரிக்காவுடன் பேச்சு நடத்த எங்கள் நாடு உத்தேசிக்கவில்லை. அமெரிக்க தீர்மானத்தின் சாராம்சத்தை இலங்கை முற்றிலுமாக நிராகரித்தது. ஒரு நாட்டுக்கு ஐ.நா. பார்வையாளர்கள் வருவது அந்த நாட்டின் ஒப்புதல் அல்லது அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்சபை மற்றும் மனித உரிமை கவுன்சில் இயற்றிய தீர்மானங்களுக்கு மாறாக அமெரிக்காவின் தீர்மானம் உள்ளது.

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நா. பார்வையாளர்கள் எந்த கட்டுப்பாடும் இன்றி இலங்கைக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா தீர்மானம் கூறுகிறது. தீர்மானம் என்ற பெயரில் சில நாடுகளின் பெயர்களை குறிப்பிட்டு அவமானப்படுத்தி அவற்றை தனிமைப்படுத்துவது தேவையற்றது.

30 ஆண்டு கால போருக்கு பிறகு இலங்கை மறு சீரமைப்பு பணிகளில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியுள்ள நிலையில் இந்த அணுகுமுறை தேவையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மனித உரிமை கண்காணிப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக மனித உரிமை கண்காணிப்பு குழுவின் தெற்கு ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியதாவது:-

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது பாதுகாப்பான பகுதி என்று ஏமாற்றி அதில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்களை ராணுவம் குண்டு வீசி கொன்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட ஆவணப் படங்களை தயாரித்து வைத்துள்ளோம்.

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை பல நாடுகள் ஆதரிக்க முன் வந்துள்ளன. இந்த தீர்மானத்தை இந்தியாவும் ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக