சனி, 16 மார்ச், 2013

அலை பேசியால் புற்றுநோய்!







அலை பேசியால் புற்றுநோய்!

காது, மூக்கு ,தொண்டைக்கான சிறப்பு மருத்துவர், சையது சபீர் அகமது:
வரமாய் அமைய வேண்டிய, அறிவியல் தொழில்நுட்ப கருவிகள், இன்றைய இளைஞர்களின் முறையற்ற செயல்பாடுகளால், சாபமாக மாறுகின்றன. மொபைல் போன், "ஹெட்செட்' மூலம், அளவுக்கு அதிகமாக பேசுவது, பாட்டு கேட்பதால், புற்றுநோய் உருவாகிறது.மொபைலால் புற்றுநோய் வந்துள்ளது என, யாரும் ஆதார பூர்வமாக அறிவிக்கவில்லை. ஏனெனில், மொபைலின் ஆதிக்கம், இளைஞர்களிடம் தான் அதிகம் உள்ளது. அதுவும் கடந்த, 10 ஆண்டுகளாக தான் உள்ளது. குறைந்த வயது மற்றும் குறுகிய காலம் என்பதால், மொபைலால் ஏற்படும் புற்றுநோயை நிரூபிக்க முடியவில்லை.
மொபைலால் புற்றுநோய் உருவாகும் என, ஆதாரத்தோடு நிரூபிக்கும் நேரத்தில், புற்றுநோயின் தாக்கம், இளைஞர்கள் உட்பட அனைவரிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும்.

"ஐயனைசிங் ரேடியேஷன்' நேரடியாக புற்றுநோயை ஏற்படுத்தும் என்பது அறிவியல் கூற்று. மொபைலின், "நான் ஐயனைசிங்' கதிர் வீச்சு, புற்றுநோயை நேரடியாக உருவாக்காமல், "வெஸ்டிபுலர் ஸ்வானோமா' எனும் கட்டி மூலம், புற்றுநோயை உருவாக்கும்.காதுகள், வெறும் கேட்கும் திறனை மட்டும் கொடுப்பதில்லை; உடலின் சமநிலையை பராமரிக்கும் பணியை, காதில் உள்ள, "வெஸ்டிபுலர்' நரம்புகள் மூலம் செய்கிறது. பஸ், ரயில் போன்ற, இரைச்சலான பயணங்களில், நிம்மதி மற்றும் பொழுதுபோக்குக்காக, மொபைல் போன், "ஹெட்செட்' மூலம் பாட்டு கேட்பதால், காதில், வெஸ்டிபுலர் கட்டிகள் உண்டாகி புற்று நோய் உருவாகிறது.நிம்மதி, பொழுதுபோக்கு, தூக்கம் வர, அசதி நீங்க, புத்துணர்ச்சி பெற என, பல தேவைகளுக்காக, தொடர்ந்து பல மணி நேரம் பாட்டு கேட்பதால், அவர்கள் பெறும் இன்பத்தை விட, புற்றுநோய் மூலம், பல துன்பங்கள் காத்துள்ளன. குறிப்பாக, மொபைலில், குறைவான சார்ஜில் பாட்டு கேட்பது, இரட்டிப்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மொபைலில் குறைந்த நேரங்களை செலவிட்டால், ஆபத்தை தவிர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக