புதன், 13 மார்ச், 2013

சிந்தனை தேவை!


 





சிந்தனை தேவை!

வலது மூளையின் செயல்களான, சுயசிந்தனை மற்றும் கற்பனை திறனின் அவசியத்தை கூறும், மருத்துவர் பரமேஸ்வரி: இன்றைய கல்வி முறை, தேர்வுக்காக புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற வைக்க மட்டுமே உதவும். மாணவர்களை சார்ந்தும், சமூகத்தை சார்ந்தும் சிந்திப்பது இல்லை. வாழ்க்கைக்கு உதவும் கல்வியாக இல்லை.
பயன்பாட்டில் உள்ள, "மெக்காலே' கல்வி முறை, வெறும் மனப்பாடம் செய்து மனதில் பதிய வைக்கும், இடது மூளைக்கான வேலையை மட்டுமே செய்கிறது. இதனால், குழந்தைகள் சுய சிந்தனை இல்லாமல், "ஏதோ படித்தோம், வேலை செய்தோம்' என்ற சிந்தனையில் உள்ளனர்.
அதனால், குழந்தைகளின் வலது மூளையை தூண்டும் விதமாக, அவர்களே சுயமாக சிந்திப்பதும், கற்பனை திறனை மேம்படுத்துவதும் அவசியம். கற்பதை நன்கு புரிந்து செயல்படும்படி, வலது மற்றும் இடது மூளை என, இரண்டையும் பயன்படுத்தும் புதிய கல்வி முறை தேவை.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், தகவல் தொழில் நுட்பத் துறை பேராசிரியராக இருந்த போது, "அபாகஸ்' பயிற்சி தந்தனர். அதை நன்கு கற்று, பல நாடுகளுக்கு பயிற்சி தர சென்ற போது, அங்குள்ள கல்வி முறை பற்றி அறிய முடிந்தது.
அங்கு குழந்தைகள், வெறும் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரமாக இல்லாமல், கற்பனை திறன் மற்றும் சுயசிந்தனையோடு இருந்தனர். இதற்கு அவர்கள் வலது மூளையை அதிகம் பயன்படுத்தியதே காரணம்.
நம் குழந்தைகளுக்கு, நாமும் இது போன்ற பயிற்சி அளிக்கலாம் என்ற சிந்தனையில், பண்டைய வேதக் கணித பயிற்சி தருகிறேன். மூளைக்கான செல்கள் விரிவடைய அபாகஸ் பயிற்சி தருவதால், "கால்குலேட்டர்' கருவியை விட, வேகமாக கணக்கு போடுகின்றனர்.
நினைவாற்றல் மற்றும் சிந்தனையை தூண்டவும், மூளையின் சக்தியை அதிகரிக்கவும், பிறருடன் எப்படி தொடர்பு கொள் வது என்பதுமான, மொத்தம் ஆறு பயிற்சி களை கற்று தருகிறேன். இந்த பயிற்சியின் மூலம், குழந்தைகளின் கற்பனை மற்றும் சிந்திக்கும் திறன் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக