ஞாயிறு, 10 மார்ச், 2013

ஏரியை அழித்தால் நரகம்!

ஏரியை அழித்தால் நரகம்!






திருவண்ணாமலை பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்பொருள் துறையின் கல்வெட்டு ஆய்வுத்துறை தென்சரக துணை கண்காணிப்பாளர் கே.கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்கள் பேரா.ஆர்.சேகர், வெ.நெடுஞ்செழியன், கல்வெட்டு படியாளர் எஸ்.அழகேசன், ஆய்வு மாணவர் தேவேந்திரன் ஆகியோர் நடத்திய ஆய்வில், பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் ஆகிய கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்றுப் பின்னணி கொண்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அச்சோழர்கால கல்வெட்டில் உள்ள எச்சரிக்கை வாசகம் குறித்த செய்தி இது...
ஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ளது. ""ஏரியை அழிப்பவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியைக் காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்'' என அக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து, ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையாவும், ஆர். சேகரும், ""தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்தக் கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை'' என்று கூறியுள்ளனர். 25-8-2009-இல் வெளியான நாளிதழ் செய்தி இது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக