ஆதாரத்தை வெளியிட்டால் நடவடிக்கை எடுப்போம் என்றுதான் முதல்வர் கூறியிருப்பார். நீங்கள் சவாலைச் சந்திக்கத் தயார் எனச செய்தி வெளியிட்டுள்ளீர்களே. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, டிச. 17: ""பணம் பெற்றுக்கொண்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் அதை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.மத்திய அமைச்சர் பதவியைப் பெறுவதற்காக தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் ரூ. 600 கோடி கொடுத்ததாக நீரா ராடியாவுடனான உரையாடலில் கூறப்படுகிறது. இதுகுறித்த செய்திகளும் பத்திரிகைகளில் வெளியாகின. இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி கேள்வி-பதில் வடிவில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:பதினைந்து நாள்களுக்கு முன்பு ஒரு சில நாளேடுகளில் இதுபோன்றதொரு செய்தி வந்தது. அதைப் பார்த்த நான், அதைக் கூடவா நம்புபவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி அந்தச் செய்தியை மறுக்க வேண்டுமென்று தோன்றவில்லை.ஆனால், இந்தச் செய்தி சில பத்திரிகைகளில் வெளிவந்து அவை ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எழுகின்றன. இதனால், அது நம்புவதற்குரிய ஒன்றாக ஆகிவிடுமோ என்பதால் அதை மறுத்திட விரும்புகிறேன்.அமைச்சர் பதவிக்காக தன் பேரனிடம் அதுவும் ரூ. 600 கோடி அவரது பாட்டி வாங்கினார் என்று சில பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதை நிரூபிக்கத் தயாரா? இதுபோன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளை ஒரு சில பத்திரிகையாளர்கள் திரித்து வெளியிட்டோ அல்லது அதற்காக கூடிப்பேசி சதித் திட்டம் வகுத்தோ திராவிட இயக்கத்தை சேதப்படுத்த எண்ணுகிறார்களா?உண்மையிலேயே தயாநிதி மாறன் அமைச்சர் பதவிக்காக ரூ. 600 கோடி பணம் கொடுத்த செய்தியை நிரூபிக்கத் தயாரா? அப்படியிருந்தால் அந்தச் செய்தியை உறுதிப்படுத்தி வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்' என்று அறிவித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக