மீண்டும் என் பெயரைப் பயன்படுத்தும் கோழை வந்துவிட்டார். பகல் ௧.௩௫ மணிக்கு என் பெயரில் பதிந்த நண்பரே! உங்கள் கருததை அச்சமின்றி உங்கள் பெயரிலேயே தெரிவியுங்கள். அச்சம் இரு்நதது எனில் புனை பெயர் வைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் உங்கள் வீட்டிற்கு ஏன் காவல்துறை வர வேண்டும் என விரும்புகிறீர்கள்?
எச்சரிக்கையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 14 Dec 2010 12:00:00 AM IST
Last Updated : 14 Dec 2010 05:24:31 AM IST

சென்னை, டிச. 13: இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழ் மக்களும், சிங்களர்களும் வசிப்பதால், அந்த நாட்டு தேசிய கீதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபட்ச மாற்றியுள்ளார் என்றும், இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதுதொடர்பான தீர்மானம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையானால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புண்பட்டு இருக்கின்ற ஈழத் தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே, இந்தச் செயலை கண்டிக்கின்றேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.அரசியல் தலைவர்கள் கண்டனம்: தமிழில் தேசிய கீதம் பாட இலங்கை அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: ராஜபட்ச தலைமையிலான இலங்கை இனவாத அரசு, இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்றும், தமிழில் பாடக் கூடாது என்றும் அறிவித்துள்ளது. இது சிங்கள, தமிழ் மக்களிடையேயான நல்லிணக்கத்தை மேலும் பாதிக்கும் வகையில் உள்ளது. ராஜபட்ச அரசின் ஜனநாயக விரோத செயல்களை கண்டித்து அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டும்.மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் இசைக்க தடை விதிப்பது என்ற இலங்கை அரசின் முடிவு கவலை அளிக்கிறது. இலங்கையில் போர் முடிந்து ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. இலங்கை அரசு, தமிழர் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி, தமிழர்கள் வாழும் பகுதிக்கு மாநில சுயாட்சி அளிக்க வேண்டும் என்றும், மொழி, கலாசாரம், வாழ்வாதாரம் போன்ற அம்சங்களில் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தமிழில் தேசிய கீதம் பாட தடை என்ற முடிவு, இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அவநம்பிக்கையை உருவாக்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசை இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: ஒரு நாட்டில் இரு தேசிய கீதங்களா என்று ராஜபட்ச கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே நாட்டில் இரு தேசிய இனங்கள் வாழும் வரலாற்று உண்மையை ராஜபட்ச மூடி மறைக்க முயல்கிறார். தமிழர்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோவதைத் தடுக்கவும் இந்திய அரசு உள்ளிட்ட சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்.நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான்: இலங்கையில் தமிழர்கள் என்ற உரிமையுடனும், உணர்வுடனும் இனி எவரும் வாழ முடியாது என்பதை இலங்கை அரசு தொடர்ந்து உலகுக்கு நிருபித்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதிதான் இலங்கையின் தேசிய கீதத்தைத் தமிழில் பாட விதிக்கப்பட்டுள்ள தடையாகும். ஏற்கெனவே தமிழர்களின் மண்ணை தமிழர்களிடம் இருந்து பறித்து, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்றிய சிங்களர்கள், இனி தமிழர்களை அங்கு வாழக் கூட அனுமதிக்கப் போவதில்லை என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு.புதிய தமிழக கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி: "சிங்கள மொழிக்கும், சிங்களர்களுக்கும் தமிழ் மொழியும், தமிழர்களும் நிகரானவர்கள்' என்ற அந்தஸ்தில் இருந்து தமிழ் மொழியினுடைய எல்லா விதமான அடையாளங்களையும் அழிக்கும் வகையில் இப்போது சிங்கள மொழி மட்டுமே தேசியகீத மொழியாக அறிவித்திருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கருத்துகள்


By Raja
12/14/2010 7:52:00 PM
12/14/2010 7:52:00 PM


By ரவி
12/14/2010 1:39:00 PM
12/14/2010 1:39:00 PM


By இலக்குவனார் திருவள்ளுவன்
12/14/2010 1:35:00 PM
12/14/2010 1:35:00 PM


By ஸ்ரீதரன் - ஸ்ரீ லங்கா
12/14/2010 12:02:00 PM
12/14/2010 12:02:00 PM


By Abdul Rahman - Dubai
12/14/2010 10:48:00 AM
12/14/2010 10:48:00 AM


By சிபிகுமாரன்
12/14/2010 10:36:00 AM
12/14/2010 10:36:00 AM


By தமிழ்வாசகன்
12/14/2010 9:20:00 AM
12/14/2010 9:20:00 AM


By vijay
12/14/2010 8:23:00 AM
12/14/2010 8:23:00 AM


By முஹம்மது
12/14/2010 7:55:00 AM
12/14/2010 7:55:00 AM


By Raj
12/14/2010 7:37:00 AM
12/14/2010 7:37:00 AM


By ’சர்வசித்தன்’
12/14/2010 7:13:00 AM
12/14/2010 7:13:00 AM


By Raj
12/14/2010 6:41:00 AM
12/14/2010 6:41:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
12/14/2010 5:29:00 AM
12/14/2010 5:29:00 AM


By Ilakkuvanar Thiruvalluvan
12/14/2010 5:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *v
12/14/2010 5:18:00 AM