செவ்வாய், 14 டிசம்பர், 2010

Thamizh announcements in flights : விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவேண்டும்: குமரி அனந்தன்

நீண்டநாள் கோரிக்கை.பாதுகாப்புக் காரணங்களுக்காகவாவது தமிழில் அறிவிப்புகள் வேண்டும் என்றும் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இந்தியக் கூட்டரசு என்பது தமிழர்க்கும் உரியது என்ற எண்ணம் மத்திய அரசிற்கும் வந்தால்தான் தமிழ் அனைத்து இடங்களிலும் சம உரிமை பெறும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடவேண்டும்: குமரி அனந்தன்

First Published : 14 Dec 2010 01:22:00 AM IST


சென்னை, டிச. 13: விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடவேண்டும் என தமிழ்நாடு பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் வேண்டுகோளை ஏற்று, மும்பையிலிருந்து புறப்படும் விமானங்களில் மராத்திய மொழியில் அறிவிப்புகள் வெளியிடவும், மராத்திய மொழி ஏடுகள் கொடுக்கவும், திரைப்படமும் காட்டவும் தனியார் விமான நிறுவனம் ஒன்று ஒப்புதல் அளித்துள்ளது.இதுபோல் விமானங்களில் தமிழிலும் அறிவிப்புகள் வெளியிடவேண்டும். லண்டன் செல்லும் தனியார் விமானங்களில் தமிழிலும் அறிவிப்புகள் வெளியிடும்போது, ஏன் உள்நாட்டு விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடக் கூடாது?மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக குலாம் நபி ஆசாத் இருந்தபோதே, இதுதொடர்பான கோரிக்கையை அவரிடம் முன்வைத்தேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக