நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்ற விருக்கும் முதல்வருக்குப் பாராட்டுகள். வெளிநாடுகளில் பணியாற்றும் தமிழர்கள என்று இல்லாமல் அயல்வாழ்தமிழர்கள் நலன்கள் அனைத்தையும் பேணுவதாக இந்த வாரியம் அமைய வேண்டும். எனவே, துதிபாடிகளுக்கு இடம் தராமல், தமிழ்நலனில் கருத்து செலுத்தும் தமிழ் உணர்வாளர்களை மட்டுமே பொறுப்பாளர்களாக அமர்த்தல் வேண்டும். இல்லையேல் குடும்பத்தினருக்கும் அண்டிப் பிழைப்பவர்க்கும் சில வசதிகள் செய்து கொடுக்கும் வாரியமாக மட்டுமே இது திகழும். முதல்வர் நினைத்தால்
முடியாதது ஒன்றும் இல்லையே! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
முடியாதது ஒன்றும் இல்லையே! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தாம்பரம், டிச. 11: வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.சென்னை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' விருது வழங்கப்பட்டது.விழாவில் அவர் பேசியது:இந்த விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொகிதீன் என்னை பெரியார் வழியில் நடந்த பெரும் தொண்டர், அண்ணாவின் அருமைத் தம்பி என்றெல்லாம் பாராட்டி விட்டு, காயிதே மில்லத் அடியொற்றி நடந்தவன் என்ற வாசகத்தை விட்டுவிட்டது மன்னிக்க முடியாத குற்றம்.தாய்மொழியான உருது மொழியில் பயிலவும், தேர்வு எழுதவும் அரசு உதவ வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்குப் பாடநூல் தயாரித்தல், தேர்வு நடத்துதல் குறித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.மதம், சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைத்துள்ளார். அதை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது.தாம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்ட சிறுகடைக்காரர்களுக்கு மாற்று இடம் வழங்குவதுபற்றி பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவருடன் கலந்து பேசி தாம்பரம் நகராட்சி மூலம் கடைகள் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் கருணாநதி.துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, ""பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கியதன் மூலம் பொறியியல் கல்லூரியில் 4,660 மாணவர்களும், மருத்துக் கல்லூரியில் 129 மாணவர்களும் பயன் அடைந்துள்ளனர்'' என்றார்.மத்திய இணை அமைச்சர் இ.அகமது, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக