தேர்வுக்குழு கூடினால் சட்ட முன்வடிவை ஏற்பார்கள் என்ற ஐயம் வரும். எனவே, அந்த முன்வடிவைத் திரும்ப் பெற வேண்டும். அப்பொழுதுதான் முதல்வர் அறிவிப்பு பொருளுடையதாக இருக்கும்.இல்லையேல் முரண்பாடான மழுப்பலாகத் தோன்றும். எனினும் கட்டண வரம்பு போன்றவற்றில் அரசு உரிமை செலுத்தும் வகையில் ஒருமைப் பல்ககைலக்கழகங்கள் உருவாவதால் தீமை இல்லை . இது குறித்த விரிவான கருத்தாடல்கள் நிகழ்ந்து சரியான முடிவு எடுக்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 14 Dec 2010 12:00:00 AM IST
சென்னை, டிச. 13: கல்லூரிகளை ஒருமைப் பல்கலைக்கழகங்களாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட விளக்கம்:தமிழகத்தில் உல்ள இரண்டு கல்லூரிகளை தனியார் சுயநிதி ஒருமைப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு தமிழக உயர் கல்வித் துறையின் சார்பில் முயன்று வருவதாகக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இதே கருத்தை, பாமக நிறுவனர் ராமதாஸýம் தனது அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார். ஒருமைப் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன்வரைவு தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டு விட்டது. தேர்வுக் குழுவில் எந்த முடிவும் எடுக்கப்பட்டு விடவில்லை. தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை (டிச.14) கூடுவதாக இருந்தது. மழையின் காரணமாக அது ரத்து செய்யப்பட்டு விட்டது.மேலும், அந்தச் சட்ட முன்வடிவை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியிலும் உயர் கல்வித் துறை ஈடுபடவில்லை. இதற்கிடையே, ஒரு சில ஆசிரியர் சங்கங்கள் பேரவையின் தேர்வுக் குழு 14-ம் தேதி கூடி எங்கே, முடிவெடுத்து விடப் போகிறார்களோ என நினைத்துக் கொண்டு முன்கூட்டியே போராட்டத்தை அறிவித்து நடத்துகிறார்கள்.பேரவையில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் பாதிக்கும் எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்காது என நான் ஏற்கெனவே கொடுத்த உறுதி மொழிக்கு மாறாக எந்தவிதமான நடவடிக்கையையும் இந்த அரசோ, உயர் கல்வித் துறையோ எடுக்காது.எனவே, ஒருமைப் பல்கலைக்கழகங்களாக்கும் முயற்சியில் இந்த அரசின் உயர் கல்வித் துறை ஈடுபட்டு இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் நடத்தத் தேவையில்லை என்று முதல்வர் கருணாநிதி தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக