திங்கள், 13 டிசம்பர், 2010

national anthem in singha only : சிங்கள மொழியில் மட்டுமே இலங்கையின் தேசிய கீதம்?

மொழித்திணிப்பிற்கு இந்தியம் வழிகாட்டுகிறது என்பதற்கு இதுவொரு சான்று. ஈழம் தமிழர்களுக்கு மட்டுமே உரிய நாடு. அங்கே தமிழில் மட்டுமே  நாட்டுப்பாடல் இருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் உரிய நாடு. எனவே, அங்கே தமிழிலும் நாட்டுப்பாடல் இருக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


சிங்கள மொழியில் மட்டுமே
இலங்கையின் தேசிய கீதம்?


கொழும்பு, டிச.12- இலங்கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும் என்ற முடிவை அந்நாட்டு அமைச்சரவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவரை தமிழிலும் பாடப்பட்டுவந்த அந்நாட்டு தேசிய கீதம் இனி அரசு நிகழ்ச்சிகளில் பாடப்படாது என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.அதிபர் ராஜபட்சவின் அறிவுரையின் பேரில் இலங்கை அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

தமிழீழ விடுதலை இயக்கம் 30 வருடங்களின் முன் தோன்றியது இது போன்ற செயல்களினால் தான் என்பதை இன்றைய தலைமுரைனர் தெரிந்துகொள்வீராக , யுத்தம் முடிந்துவிட்டது என்று நினைத்தோம், ஆனால் இவர்களே முடிய விடமாடார்கள் போலிருக்கிறது. இவர்கள் தமிழன்களையும் அரவணைத்து நியாயமாக நடத்தாவிட்டால் இந்த அமைதி நீண்ட நாட்கள் நீடிக்காது என்பது மட்டும் நிச்சயம்.
By ராஜேஷ்
12/12/2010 9:11:00 PM
கனடாவில் தேசிய கீதம் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.
By kumar
12/12/2010 8:45:00 PM
ஒரு நாட்டின் தேசிய கீதம் பல மொழிகளில் புழங்குவது தான் அதின் சிறப்புத்தன்மை. சமூகங்களை தொடர்ந்தும் பாதிக்கும் சாத்தியத்தின் அடக்குமுறை வடிவங்கள் தொடர்கின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இதய சுத்தியுடன் செயல்பட்டால் நாடு சுபீட்சமடையும்.
By வசந்தகுமார்.
12/12/2010 8:00:00 PM
நன்றி கெட்டவர்கள்! இட்டாலியன் மொழியில் பாட மாட்டார்களா! இதற்குத் தானா இத்தனை இலட்சம் தமிழர்களை வன்முறையில் கோரக் கொலை செய்தது! இதற்குத் தானா தமிழையும், தமிழனையும், தமிழகத்தையும் விற்று தன்னிகரற்ற கோடீஸ்வரத் தமிழினத் தலைவராக பவனி வந்தவரையே, தமிழினத் துரோகியாக்கினர்! ... ... நன்றி கெட்டவர்கள்!!
By அண்ணாத்தம்பி
12/12/2010 7:30:00 PM
இதில் என்ன தப்பு? அவர்கள் நாட்டில் அவர்கள் மொழியில் இருப்பது தவறொன்றும் இல்லையே.
By ரமணன்
12/12/2010 5:21:00 PM
இதில் என்ன தப்பு? அவர்கள் நாட்டில் அவர்கள் மொழியில் இருப்பது தவறொன்றும் இல்லையே.
By ரமணன்
12/12/2010 5:21:00 PM
இங்க மட்டும் தேசிய கீதம் எதுல பாடுறோம்? சிந்திக்கலாமா? வேண்டாமா ? தேசிய குற்றம் ஆயிடுமோ!
By Rav
12/12/2010 4:19:00 PM
இந்தியாவின் தேசிய கீதம் என்ன தமிழிலா இருக்கிறது?
By Inbaa
12/12/2010 3:24:00 PM
ஒரு நாட்டின் தேசிய கீதம் ஒரு மொழியில் இருந்து வருவது தான் வழக்கம். இது வரை தமிழிலும் இருந்து வந்தது தனிச் சிறப்பு. ஏனோ அதுவும் மாறப் போகிறது . நல்லது. எல்லைகளற்ற ஈழம் தனக்கென ஒரு தேசிய கீதத்தை உருவாக்கிக் கொள்ளட்டும்
By பூபதி
12/12/2010 3:20:00 PM
இலங்கை தமிழர்களின் நாடு இல்லை என்பதற்கு இதுவே சான்று தமிழர்கள் தனிநாடு கேட்பதில் தப்பில்லை .விரைவில் தனிநாடு கிடைக்க வாழ்த்துக்கள்
By சே.ரே.பட்டணம்.mani
12/12/2010 3:08:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக