இவர் விடுதலைப்புலிகளுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் வஞ்சகம்-துரோகம் செய்தவர். இப்பொழுது ஆ.இராசாவிற்கு வஞ்சகம் புரிகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய தொடர் ஓட்டம் ஒன்றில் எந்த முதலுதவியும் இல்லாமல் அதில் பங்கேற்ற ஒருவர் இறந்ததற்கே இவரைக் கொலைக்குற்றவாளியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் தவறான வழிகாட்டிப் பலரைச் சிக்க வைக்கும் இவரது போக்கு நின்றிருக்கும். தமிழ் மைய கட்டாய நன்கொடைகளுக்காகவும் இவரைச் சிறையில் அடைக்க வேண்டும். சிறுபான்மையர் போர்வையில் சிறு நரிகள் தப்பிப்பதற்கு உடன்படக்கூடாது. - இவ்வாறும்
ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, டிச. 16: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றமற்றவர் என்று தாம் எப்போதும் கூறவில்லை என தமிழ் மையம் அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர் கூறியுள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் இரண்டாவது முறையாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வீடு, உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தினர்.சென்னையில் பத்திரிகையாளர் ஒருவருடைய வீட்டிலும், சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் ஜெகத் கஸ்பர் தலைமையிலான தமிழ் மையம் அலுவலகத்திலும் நேற்று சோதனை நடந்தது. இந்தச் சோதனைகள் குறித்து ஜகத் கஸ்பர் பத்திரிகையாளர்களிடம் இன்று விளக்கமளித்தார். பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அதன் விவரம்ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்றோ ராசா குற்றமற்றவர் என்றோ நான் கூறவில்லை. அதைக் கூறுவதற்கான உரிமையோ அதிகாரமோ எனக்கு இல்லை. ஊழல் நடந்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கும் நிலையில், அதுபற்றி முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமே தவிர, விசாரணைக்கு முன்பாகவே ராசாவை குற்றவாளியைப் போல சித்தரிக்கும் ஊடகங்களின் போக்கைத்தான் நான் எதிர்த்தேன். சிறுபான்மையினருக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான சில சக்திகளின் சதியின் காரணமாகவே என்போன்றோர் குறி வைக்கப்பட்டிருக்கின்றனர். எனினும் சிபிஐ அமைப்பினர் நடத்திய சோதனைக்கு நான் முழு ஒத்துழைப்பு வழங்கினோம். அவர்களும் எங்களை மரியாதையுடன் நடத்தினார்கள்.தமிழ் மையம் அமைப்பு சென்னை மாரத்தான், சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றிருக்கிறது. அதன் ஒரு இயக்குனராக கனிமொழி எம்.பி. இருக்கிறார். அவருக்கும் தமிழ்மையம் அமைப்புக்கும் இடையிலான உறவு மதிப்பு மிக்கது. மற்றபடி 2ஜி விவகாரத்துக்கும் எங்கள் அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 2ஜி ஊழல் மூலம் கிடைத்த நிதி தமிழ் மையம் வழியாகத் திருப்பி விடப்பட்டது என்று கூறப்படுவதில் உண்மை இல்லை.தமிழ்மையம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கான நிதி நன்கொடைகள் மூலமாகவே பெறப்படுகிறது. ரூ.1 கோடியை அடிப்படை உருவாக்க நிதியாகக் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது சுமார் ரூ.40 லட்சம் செயல்பாட்டு நிதியாக கையிருப்பு உள்ளது. எந்தவிதமான அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி நாங்கள் நிதி திரட்டவில்லை. எங்களது கணக்கு வழக்குகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. பத்திரிகையாளர்கள் விரும்பினால், அவற்றை எப்போது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள்


By Shai
12/16/2010 8:20:00 PM
12/16/2010 8:20:00 PM


By SAM
12/16/2010 7:55:00 PM
12/16/2010 7:55:00 PM


By M.Natrayan
12/16/2010 7:44:00 PM
12/16/2010 7:44:00 PM


By GOVIDACHARRY
12/16/2010 7:35:00 PM
12/16/2010 7:35:00 PM


By முகேஷ் பாண்டியன்
12/16/2010 7:08:00 PM
12/16/2010 7:08:00 PM


By Tamilian
12/16/2010 7:05:00 PM
12/16/2010 7:05:00 PM


By JOY
12/16/2010 6:22:00 PM
12/16/2010 6:22:00 PM


By AlanMada
12/16/2010 5:55:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/16/2010 5:55:00 PM