பலமுறை மததிய அமைச்சர்களும் அதிகாரிகளும் சிங்கள அரசிற்கும் சிங்களப் படைக்கும் ஆதரவாகத்தான் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இனி இதற்கு ஒரே தீர்வு இராமேசுவரத்தைச் சிங்களத்துடன் சேர்ப்பதுதான் என்று சொன்னாலும் சொல்வார்கள். இறையாண்மை என்னும் பெயரில் தமிழர்களைக் கொல்லும் போக்கு நிற்க முதலில் தமிழ்மக்கள் தங்கள் தமிழர்களாக எண்ண வேண்டும். தமிழக அரசு தன்னைத் தமிழ்நாட்டிற்கான அரசு என எண்ணிச் செயல்பட வேண்டும். இனி இதுபோன்று நேர்ந்தால் தமிழகக் காவல்படையை அனுப்பித் தமிழக அரசே தமிழ் மீனவர்களைக் காப்பாற்றும் என அறிவிக்க வேண்டும். இதற்கு மாறான சூழல்கள் இருக்கும்வரை தமிழ் மீனவர்களின் கதி இதுதான். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 12 Dec 2010 04:13:38 PM IST
Last Updated : 12 Dec 2010 04:19:12 PM IST
ராமேஸ்வரம், டிச.12- கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.அந்த மீனவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள். நேற்று மாலை, தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கடுமையாகத் தாக்கினர். மேலும், சுமார் 50 படகுகளை சேதப்படுத்தினர்.அத்துடன், தமிழக மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் அள்ளிச் சென்றனர். பல மீனவர்களின் செல்போன்களையும் அவர்கள் பறித்துச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.இலங்கை கடற்படையினரின் இத்தாக்குதலால் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
இலங்கை அரசு சீனாவுடன் சேர்ந்து வல்லரசாகிவிட்டத்தால் நாங்கள் இலங்கை அரசை எதிரகொள்ளமுடியாது தவிக்கின்ரூம் மீனவர்கள் உங்களை நீங்கள் காப்பாற்றுங்கள் இந்திய அரசை மன்னியுங்கள்
By lOGES
12/12/2010 10:24:00 PM
12/12/2010 10:24:00 PM
அடுத்து கருணாநிதி குடும்பத்தாரை கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க சொல்லுங்கள் , ராஜபட்சேவை பங்குதாரர் ஆக்கி பாதுகாப்பு பெற்றுத்தருவார் , அவர் குடும்பத்திற்கு மட்டும் .
By mpm
12/12/2010 10:24:00 PM
12/12/2010 10:24:00 PM
மீனவர்கள் தங்களைப் காப்பாற்றும் பொறுப்பு அவர்களுடையது . இந்திய அரசு பொறுப்பல்ல இந்திய அரசு இலங்கை அரசை எதிர்க்காது
By Raj
12/12/2010 10:13:00 PM
12/12/2010 10:13:00 PM
தரமான முறையில் நியாயமாக சொல்லப்படும் கருத்துகளை நீங்களே வெளியிடுவதில்லேயே .எங்கேயும் கருத்து சுதந்திரம் இல்லை.
By இராவணன்.K
12/12/2010 9:31:00 PM
12/12/2010 9:31:00 PM
i request all fellow tamilians to think ( irrespective of parties ) & put vote in the coming elections. this is happening for last 30 years & no government sincerely take action & so for more than 500 Tamilnadu fishermen killed ( even pakistani navy didn't kill single fisherman.
By M.S.Kumar
12/12/2010 9:27:00 PM
12/12/2010 9:27:00 PM
நம் மீனவர்களை காப்பாற்ற வேண்டிய இந்திய இராணுவம் பூப்பறிக்க சென்று இருப்பதால், சகலவித இராணுவ வாகனங்களையும், இராணுவத்தின் ஆயுதங்களையும், யுத்த தளவாடங்கள் அனைத்தையும் நம் மீனவர்கள் வசம் ஒப்படைக்குமாறு முப்படைத் தளபதியை கேட்டுக் கொள்கிறோம்! . . . . . . தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்வார்கள், நம் மீனவர்கள்! Yes, We Can! ... ஆம், நம்மால் முடியும்! நான் சொல்வது சரிதானே, மீனவ நண்பன் வைகோ அவர்களே!
By நல்லரசு
12/12/2010 8:02:00 PM
12/12/2010 8:02:00 PM
கருணா உடனே ஒரு கடிதம் எழுதுவர் , மன்மோகன் ஒரு பதில் கடிதம் எழுதுவர் ,
By NAGARAJ
12/12/2010 7:20:00 PM
12/12/2010 7:20:00 PM
AS USUAL KARUNANIDHI WILL SURELY WRITE ANOTHER LETTER TO PM
By RAMASAMY
12/12/2010 7:14:00 PM
12/12/2010 7:14:00 PM
ராஜபக்ஷ இந்திய நாட்டு வுதவியுடன் தமிழ் மக்களை கொன்றான்.இப்போது தமிழ் மீனவர்கழகிய இந்தியர்களையும் கொல்கிரான்.யார் க்யட்பது ?
By எ.கே
12/12/2010 5:07:00 PM
12/12/2010 5:07:00 PM
Weldone MS Krisna, Sivashankar Menon and Rajapakshe group. Pongada thuppukedda thamizangala
By anandan
12/12/2010 4:53:00 PM
12/12/2010 4:53:00 PM
வாழ்க இந்திய அரசு....... :(((((((((
By soundar
12/12/2010 4:21:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *12/12/2010 4:21:00 PM