ஞாயிறு, 12 டிசம்பர், 2010

profit for public sectors : அரசுத் துறை நிறுவனங்கள் இலாபம் ரூ.1,05,906 கோடி

இவ்வளவு  ஆதாயம் கிட்டும் பொழுது எரிபொருள்கள் விலைகளைக் குறைத்தால்தான் என்ன ? குடியா முழுகும்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


அரசுத் துறை நிறுவனங்கள் 
லாபம் ரூ.1,05,906 கோடி

புது தில்லி, டிச.11: மத்திய அரசு நிறுவனங்கள் ஈட்டிய லாபம்  ரூ.1,05,906 கோடியாகும். இதில் 66 சதவீத லாபம் பெட்ரோல், நிலக்கரி, மின்சாரம், இயற்கை எரிவாயு நிறுவனங்கள் மூலம் கிடைப்பதாக மத்திய தணிக்கைத் துறை (சிஏஜி) தெரிவித்துள்ளது.2009-10-ம் நிதி ஆண்டில் மொத்தம் உள்ள 189 அரசு நிறுவனங்கள் ஈட்டிய லாபத் தொகை  ரூ.1,05,906 கோடியாகும். இதில் பெட்ரோல் உள்ளிட்ட எரிசக்தித் துறை நிறுவனங்களின் லாபம் மட்டும்  69,445 கோடியாகும். இதில் 118 நிறுவனங்கள் ஈவுத் தொகை அளித்தன. இவை அளித்த மொத்த ஈவுத் தொகை  33,804 கோடி.37 அரசு நிறுவனங்கள் அரசு வகுத்துள்ள விதிகளை பூர்த்தி செய்யாததால் ஈவுத் தொகை வழங்க முடியவில்லை. இதனால் ஈவுத் தொகையில்  ரூ.1,672 கோடி பற்றாக்குறை நிலவியது.    மொத்தம் உள்ள 308 அரசு நிறுவனங்களை தணிக்கை செய்ததில் 98 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது. இதில் 68 நிறுவனங்கள் மறு சீரமைப்பு செய்ய இயலாத அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளன.  இவற்றால் ஏற்பட்ட நஷ்ட தொகை  ரூ.72,798 கோடியாகும். 34 அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட  ரூ.29,904 கோடி கடன் தொகை திரும்ப கிடைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவாக உள்ளதாக சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. பங்குச் சந்தையில் பட்டியலிட்ட 17 நிறுவனங்களின் இயக்குநர் குழுமத்தில் சுதந்திரமாக இயங்கும் இயக்குநர்கள் இடம்பெறவில்லை. இவை பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) வகுத்தளித்த விதிகளை நிறைவேற்றவில்லை என்றும் சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக