செவ்வாய், 20 நவம்பர், 2012

தமிழில் படித்தால் கிடைக்குமா வேலை? - இராணி இதழில் என்கருத்துரை job priority to tamil medium students?



தமிழ் வழிக்கல்வி  தொடர்பாக என் கருத்தைக் கே ட்டு வெளியிட்ட  இராணி இதழுக்கு நன்றி.


அண்ணன் பேராசிரியர்  முனைவர் மறைலை அவர்கள் அமெ ரிக்காவில் தமிழ் கற்பித்த நினைவு மேலோங்க  ‌ அமெ ரிக்காவில் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த பே ராசிரியர் என இடம் பெ ற்றுள்ளது என எண்ணுகிறேன். நான் தமிழ் நாட்டிற்கு வந்த சில சப்பானியர்களுக்கும் இங்கு பயிலும் அயல் மாநில மாணாக்கர்களுக்கும் நடை முறை வாழ்க்கைக்கும் பணி வாழ்க்கைக்கும் தேவையான  சிறிதளவு தமிழ‌ை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதனை எண்ணிய   பாராட்டிற்குரிய செய்தியாளர் திரு இரா.சின்னதுரை  அவ்வாறு குறிப்பிட்டு விட்டார் போலும். எனினும் தமிழ் வழிக்கல்வி பயில்கின்றவர்களுக்கு  வே லை வாய்ப்பில் முன்னுரிமை வேண்டும்  என விழை யும்  அவருக்கும்  இராணி ஆசிரியருக்கும் நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

2 கருத்துகள்:

  1. உண்மையைச் சொன்னால், 'தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை' என்பதே எனக்கு அபத்தமாகப் படுகிறது! வேற்று மொழி வழியில் ஏன் படிக்க வேண்டும் என்பதே என் கேள்வி.

    அறிஞர்கள் என்பவர்கள் எப்பொழுதுமே தங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உடையவர்கள். ஆனால் உலக மொழியியலறிஞர்கள் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் ஒரு சில கருத்தாக்கங்களுள் ஒன்று, 'தாய்மொழிவழியில் படிப்பதுதான் அறிவை வளர்க்கும்' என்பது. அப்படியிருக்க, நாம் ஏன் வேற்று மொழிவழியில் நம் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும்? கேட்டால் "உலகமே ஆங்கிலத்தில்தானே இயங்குகிறது?" என்பார்கள். ஏன், தமிழ்வழியில் படித்துக் கொண்டு ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் படித்தால் ஆங்கிலப் புலமை வராதா? தெரியாமல்தான் கேட்கிறேன், உலகில் வேறு எந்த நாட்டிலாவது ஒரு மொழியைப் பன்னிரண்டு ஆண்டுகள் படிக்கும் வழக்கம் இருக்கிறதா? அல்லது, ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்காக, பள்ளிப் படிப்பு, கல்லூரிப் படிப்பு என முழுக் கல்வியையும் அந்த மொழிவழியிலேயே படிக்கும் வழக்கம்தான் இருக்கிறதா? தனக்குத் தெரியாத ஒரு மொழியில் கல்வி கற்பதன் மூலம் அந்த மொழியைக் கற்றுக் கொண்டுவிட முடியும் என நாம் எப்படி நம்புகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை! அதாவது அறிவியல், வரலாறு, கணிதம், புவியியல் எனப் பல்வேறு துறைகள் பற்றித் தெரிந்து கொள்ளத்தானே கல்வி? அப்படியானால், நமக்குத் தெரியாத இந்தத் துறைகள் பற்றி நாம் தெரிந்து கொள்ள நமக்குத் தெரிந்த ஒரு மொழியின் வழியாகத்தானே இவற்றைப் பயில வேண்டும்? மாறாக, நாம் தற்பொழுது கற்றுக் கொண்டிருக்கிற ஒரு மொழியின் வாயிலாகவே இவற்றையும் படித்தால் நாம் எப்படி அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்? தெரியாத ஒரு மொழியின் வாயிலாகத் தெரியாத தகவல்களை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? சுருக்கமாகச் சொன்னால், தெரிந்த ஒருவர் மூலமாகத்தான் தெரியாத ஒருவரை அறிமுகப்படுத்திக் கொள்ள முடியும். தெரியாத ஒருவரைப் பற்றித் தெரிந்து கொள்ள, தெரியாத இன்னொருவர் மூலமாக அணுக முடியுமா? அப்படிப்பட்ட கல்வி முறையைத்தான் நாம் தற்பொழுது கடைப்பிடித்து வருகிறோம்! இந்தியாவைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்பேர்ப்பட்ட ஒரு அறிவாளித்தனமான கல்வி முறை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

    எனவே, தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோருவதே தவறு! தமிழ்வழி தவிர (அதாவது தாய்மொழிவழி தவிர) வேறு மொழிவழியில் கல்வி முறையே இருக்கக் கூடாது என்பதே சரி! மொழியியலாளர்கள் அதற்குத்தான் பாடுபட வேண்டும்! அதுதான் மொழியியலாளர்களின் கடமை என்பது என் பணிவன்பான கருத்து!

    ஏதேனும் தவறாகச் சொல்லியிருப்பின் ஐயா அவர்கள் மன்னிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்விமட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் தமிழன்பர்கள் அனைவரின் கருத்தும். ஆனால், இப்பொழுது இரு வழி்க் கல்வி இருக்கும் பொழுது தமிழ் வழி பயின்றவர்கள் புறக்கணிக்கப்படுவதால் அவர்களுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது. இந்த நோக்கில் செய்தியைப் படியுங்கள்.

    பதிலளிநீக்கு