புதன், 21 நவம்பர், 2012

கசாப் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாரா?

கசாப் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டாரா?

First Published : 21 November 2012 01:32 PM IST
இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி அஜ்மல் கசாப், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அண்மையில் மும்பை ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு இருப்பது டெங்கு காய்ச்சல் அல்ல, சாதாரண காய்ச்சல் தான் என்று பரிசோதனை அறிக்கை அளித்தனர்.
இதனிடையே, அஜ்மல் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியிருக்கக் கூடும் என்றும், அதனாலேயே அவசர அவசரமாக அவர் தூக்கில் இடப்பட்டார் என்று அதிகாரிகள் கூறுவதாகவும் சமூக இணையதளங்களில் பலர் விமரிசித்து  வருகின்றனர்.
கசாப் தூக்கில் இடப்படும் செய்தி யாருக்கும் தெரியாமல் ரகசியம் காக்கப்பட்டதாகக் கூறும் அதிகாரிகளின் பேச்சு நம்பத் தகுந்ததாக இல்லை என்று கூறும் சிலர், கசாப்பை தூக்கில் இட்டதாகக் கூறுவது கண் துடைப்பு என்ற ரீதியில் கருத்து தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக