திங்கள், 19 நவம்பர், 2012

சிறீரங்கத்தில் பிராமணாளும் கிருட்டிண அய்யரும் ஒழிந்ன!

சிறீரங்கத்தில் பிராமணாளும் ஒழிந்தது கிருட்டிண அய்யரும் ஒழிந்தது!

(பிறரும் பின்பற்றட்டும்)

 

14.11.12
சிறீரங்கத்தில் ஒரு திருப்பம்! பிராமணாளும்ஒழிந்தது கிருஷ்ண அய்யரும் ஒழிந்தது!திராவிடர் கழகத்திற்கு அடுத்த கட்ட வெற்றி!

பிராமணாள் என்றும், அய்யர் என்றும் இடம்பெற்றிருந்த பழைய நிலை!
சிறீரங்கத்தில் பிராமணாள் என்று உணவு விடுதி விளம்பரத்தில் எழுதி வைத் திருந்த வருணாசிரம ஆதிக்க உணர்வை எதிர்த்து திராவிடர் கழகம் மேற்கொண்ட நட வடிக்கையால் அந்த உணவு விடுதி அந்த இடத்தில் மூடப்பட்ட துடன் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் பிராமணாள் என்பதும் கிருஷ்ண அய்யர் என்பதில் உள்ள அய்யரும் நீக்கப்பட்டு விட்டன.
திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த அடுத்த கட்ட வெற்றியாகும் இது.

பிராமணாளும், அய்யரும் நீக்கப்பட்ட நிலையில் இப்போது…
சிறீரங்கம் ரங்கநகர் சாலையில் கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே (ஓட்டல்) என்ற பெயரில் மணி கண்டன் என்ற பார்ப்பனர் நடத்தி வந்தார். திடீ ரென்று பிராமணாள் என்ற சொல்லை விளம்பரப் பலகையில் புகுத்தினார். அந்த உணவு விடுதியின் பெயர்ப் பலகையில் உள்ள பிராமணாள் என்ற பெயரை அகற்றுமாறு திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்த உணவு விடுதியின் உரிமையாளர் மணிகண்டன் பார்ப்பனரிடம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் திருவரங்கம் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் முக்கிய கவனத்திற்கு என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் திருவரங்கத்தில் ஜாதி ஒழிப்புப் பொதுக்கூட்டம் நடத்த கழகம் சார்பில் அனுமதி கோரியிருந்தது;
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்தது. மூன்று முறை தொடர்ந்து காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்து அனுமதி பெற்று 4.11.2012 அன்று திருவானைக்காவலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது.
போராட்டம் அறிவிப்பு
அப்பொதுக் கூட்டத்தில் பிராமணாள் ஓட் டல் பெயரை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் அகற்றுகின்றவரை போராட்ட நடவடிக்கையைக் கழகம் மேற்கொள்ளும். மேலும் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி இப்போராட்டத் திற்கான அறிவிப்பினை வெளியிடுவேன் என்று தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் திருவானைக் காவல் பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.
நள்ளிரவில் அகற்றம்
இந்நிலையில் அந்த உணவு விடுதி கட்டடத்தின் உரிமையாளர் (பாவை டவர்ஸ்) ராஜா, மணி கண்டன் பார்ப்பனரிடம் கடையை உடனடியாக காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து (6.11.2012) நள்ளிரவு திடீரென்று கிருஷ்ணய்யர் பிராமணாள் கபே உணவு விடுதியை மணிகண்டன் முழுமையாக கடையை இழுத்து மூடி காலி செய்தார். பிராமணாள் கபே பெயர்ப் பலகையும் அகற்றி எடுத்துச் சென்றார். இப்பொழுது வேறு ஒரு இடத்தில் அவரே உணவு விடுதியைத் திறந்துள்ளார். பெயர்ப் பலகையில் இடம் பெற்றிருந்த பிராமணாள் என்ற பெயரும், கிருஷ்ண அய்யர் என்ற பெயரில் இருந்த அய்யரும் நீக்கப்பட்டு விட்டன. திராவிடர் கழகத் திற்குக் கிடைத்த சிறப்பான வெற்றியாகும் இது.
————————”விடுதலை” 14-11-2012
(பார்வையிட்டவர்கள் 21 பேர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக