வியாழன், 22 நவம்பர், 2012

கல்விக் கடன் கிடைக்காததால் பொறியியல் மாணவர் நஞ்சு அருந்தித் தற்கொலை

கல்விக் கடன் கிடைக்காததால்   பொறியியல் மாணவர்  நஞ்சு அருந்தித் தற்கொலை
 
கல்விக் கடன் கிடைக்காததால் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
குன்னத்தூர், நவ. 22-

குன்னத்தூர் 3-வது வார்டில் உள்ள தேவம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 22). கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். கல்விக்கடன் பெறுவதற்காக குன்னத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பித்தார்.

மனுவை பரிசீலனை செய்து கடன் தருவதாக வங்கியின் மானேஜர் கூறியதாக தெரிகிறது. ஆனால் மாணவருக்கு இதுவரை வங்கிக் கடன் வழங்கப்படவில்லை. எனவே சண்முகசுந்தரம் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை கட்டமுடியவில்லை.

கட்டணம் செலுத்தாததால் கல்லூரி நிர்வாகம் மாணவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மனமுடைந்த சண்முகசுந்தரம் நேற்று மதியம் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். மிகவும் மனவேதனையில் காணப்பட்ட அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டார். மயங்கி விழுந்த சண்முகசுந்தரத்தை குன்னத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகசுந்தரம் பரிதாபமாக இறந்தார். குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1 கருத்து:

  1. கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
    கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம். (பாண்டியன்பரிசு இயல் 56)
    பாரதிதாசன் கவிதைகள்

    பதிலளிநீக்கு