சொல்கிறார்கள்
படித்தவர்கள் விவசாயத்திற்குவர வேண்டும்!' விவசாயம் செய்ய
முடியவில்லை என கூறி, நகரத்திற்கு இடம் பெயர்பவர்கள் மத்தியில்,
விவசாயத்தில் லாபம் பார்க்கும், வினோதா, முருகானந்தம்: கரூர் அருகே உள்ள,
தட்டாம்புதூர் தான், எங்கள் சொந்த ஊர். பெற்றோர், விவசாயம் பார்த்து,
எங்களை படிக்க வைத்தனர். நாங்கள் படித்து, நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும்
என விரும்பினர். பெற்றோருக்கு உதவியாக, கல்லூரி செல்வதற்கு முன்பும்,
சென்று வந்த பின்பும் தோட்டத்தில் வேலை செய்வோம்.என் அக்கா, வினோதா
எம்.பி.ஏ., முடித்ததும், வேலைக்கு செல்லலாம் என முடிவு செய்தார். சம்பளம்,
10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறினர். அக்கா அந்த வேலைக்குச் செல்லவில்லை.
அதைவிட, விவசாயத்தில் அதிகமாக சம்பாதிக்கிறேன் என, சவால்
விட்டார்.கல்லூரிக்குச் சென்று கொண்டே நானும், அக்காவிற்கு உதவியாக
இருந்தேன். படிப்பை முடித்தவுடன், முழுநேர விவசாயத்தில் இறங்கினேன்.
"விவசாயத்தில் ஜெயித்துக் காட்டுகிறோம் பாருங்கள்' என்று கூறி, நாங்கள்
இருவரும் கடுமையாக உழைத்தோம்; முதல் இரண்டு ஆண்டு, லாபம் கிடைக்கவில்லை.
ஊர்க்காரர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். அதைப்பற்றி கவலைப்படாமல்,
திட்டமிட்டு பயிர் செய்தோம். முருங்கை, தர்பூசணி, கடலை என பயிரிட்டோம்.
முடிந்தவரை இயற் கை உரங்களை மட்டுமே பயன்படுத்து வோம்.காலை, 6:00 மணிக்கு,
தோட்டத்திற்குள் சென்றால், மதியம், 12:00 மணிக்குத் தான், வெளியே வருவோம்.
கடுமையாக உழைத்ததால், 2 ஏக்கரில், 60 டன் தர்பூசணியை, 70 நாளில் எடுத்தோம்.
முருங்கையும் நல்ல லாபம் தந்தது. கடந்த ஆண்டு மட்டும், 7 லட்ச ரூபாய்
சம்பாதித்தோம்.கிண்டல் செய்தவர்கள் எல்லாம், இப்போது, ஆச்சரியப்பட்டு
நிற்கின்றனர். தற்போது, மலைவேம்பு நடவு செய்து வருகிறோம். அது மிகுந்த
லாபம் தரும். "விவசாயத்தை கை விடாதீர்கள்; முறையாக செய்தால், அதை விட,
லாபம் தரும் தொழில் ஏதும் இல்லை' என, பிரசாரம் செய்கிறோம்.
வாழ்த்துகள்.... உங்கள் உறுதி கண்டு தலைவணங்குகின்றேன்.
பதிலளிநீக்குஇதுமாதிரி கட்டுரைகளில் தண்ணீர் வசதி எந்த அளவு தேவை, எத்தனை ஏக்கரில் பயிர் செய்தீர்கள், உங்களுடைய தொடர்பு இமெயில், கைபேசி எண் போன்ற விவரங்கள் தந்தால், எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
பதிலளிநீக்கு