புதன், 21 நவம்பர், 2012

செயலலிதா மீதான தேர்தல் வழக்கு நீக்கம்

செயலலிதா மீதான தேர்தல் வழக்கு நீக்கம்

First Published : 21 November 2012 01:20 PM IST
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்து, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படியும், 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவது கூடாது என்ற சட்ட முறையை அவர் மீறியதாகவும் திமுகவின் தரப்பில் குப்புசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்குக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதை அடுத்து தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும், தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்யும் படியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்.
இதில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக