புதன், 21 நவம்பர், 2012

கருத்து வெளியிடடமைக்குக் கைது செய்தது முறையற்ற செயல் - Bal Thackeray post

தாக்கரே பற்றி கருத்து வெளியிட்டதற்காக மன்னிப்பு : ிணைில் வெளிவந்த பெண்கள் பேட்டி

மும்பை: "பால் தாக்கரே குறித்து, "பேஸ்புக்'கில், கருத்து வெளியிட்டதற்காக, மன்னிப்பு கோருகிறோம்; தாக்கரே, மிகச் சிறந்த மனிதர். ஆனால், கருத்து வெளியிட்ட குற்றத்திற்காக, எங்களை கைது செய்தது, நியாயமற்ற நடவடிக்கை' என, கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த, இரண்டு இளம் பெண்களும் கூறினர்.சிவசேனா தலைவர் பால் தாக்கரே, 17ம் தேதி, காலமானார். அடுத்த நாள், அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன. இதற்காக, மும்பை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, மும்பையைச் சேர்ந்த, ரேணு, ஷகீன் தாதா என்ற, இரண்டு இளம் பெண்கள், சமூக வலைத் தளமான, "பேஸ்புக்'கில் கருத்து தெரிவித்திருந்தனர்.அதில், அவர்கள் கூறியிருந்ததாவது:
உலகில், தினமும், ஏராளமானோர் இறக்கின்றனர். அவர்களின் மறைவுக்காக, கடைகள் அடைக்கப்படுவது இல்லை. தாக்கரே மறைவுக்கு மட்டும், ஏன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.மரியாதை என்பது, தானாக கிடைக்க வேண்டும்; கட்டாயப்படுத்தி பெறக் கூடாது. தாக்கரே மீது உள்ள, மரியாதை காரணமாக, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டதாக கூறுவது, தவறு; பயம் காரணமாகவே, கடைகளை அடைத்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்த விவகாரம், மகாராஷ்டிராவில், பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிவசேனா கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு பெண்களையும், நேற்று முன்தினம், மும்பை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தியது உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும், அதிகபட்சமாக, மூன்று ஆண்டு வரை, சிறைத் தண்டனை கிடைக்கும்.கைதான இரண்டு பேரையும், 14 நாட்கள், காவலில் வைக்க உத்தரவிட்ட, மும்பை கோர்ட், பின், அவர்களுக்கு ஜாமின் அளித்தது. ஜாமினில் வெளிவந்தாலும், இரண்டு பேரும், இன்னும் பீதி விலகாத நிலையில் தான் உள்ளனர். முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில், இரண்டு பேரும், பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:தாக்கரே மறைவுக்காக, கடைகள் அடைக்கப்பட்டது குறித்து, நாங்கள் தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெறுகிறோம். இதற்காக, மன்னிப்பு கோருகிறோம். தாக்கரே மிகச் சிறந்த தலைவர் தான்; இதில், எந்த சந்தேகமும் இல்லை.வலைத் தளத்தில் தெரிவித்த கருத்துக்காக; எங்களை கைது செய்தது, நியாயமற்ற நடவடிக்கை. மூன்று நாட்களாக, பெரும், மன உளைச்சலிலும், பீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஷாகீன் கூறுகையில், ""இனிமேல், "பேஸ்புக்'உள்ளிட்ட, சமூக வலைத் தளங்களின் பக்கமே, தலை வைத்து படுக்க மாட்டேன்,''என்றார். ரேணு கூறுகையில், ""பேஸ்புக்கில், இனிமேல் கருத்துக்களை தெரிவிக்கும்போது, பலமுறை யோசித்து தான், தெரிவிப்பேன்,''என்றார்.இந்த இரண்டு பெண்களில், ஒருவரின் உறவினர், மும்பையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையின் மீது, சில மர்ம நபர்கள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, "சமூக வலைத் தளத்தில் தெரிவித்த கருத்துக்காக, பெண்களை கைது செய்தது சரியான நடவடிக்கை அல்ல' என, சமூக ஆர்வலர்கள் பலரும், கருத்து தெரிவித்து உள்ளனர்.

Bal Thackeray post: Shaheen Dhada, Renu Shrinivas 'rights hurt'

Shaheen Dhada
Eminent lawyer Abha Singh today filed a complaint before Maharashtra State Commission for Women, alleging human rights violation in the arrest of two girls who wrote comments on Facebook in regard to shutdown in the city for the funeral of Shiv Sena Chief Bal Thackeray.
Describing the arrest of Shaheen Dhada and Renu Shrinivas as gross violation of human rights, Singh, the wife of IPS officer-turned-lawyer Y P Singh, demanded that the State Women's Commission should visit the concerned police station, inspect the case diaries and inquire into the matter.
"The manner in which the girls were arrested clearly indicates that there has been gross violation of human rights as well as Supreme Court directives for affecting arrests," said Singh who lodged complaint with the Women's Commission in suburban Bandra.
Normally, in serious cases such as dacoity, murder, robbery and rape, an accused can be arrested if he is likely to abscond or evade the process of law or if he indulges in violent behaviour or is a habitual offender. "But none of these conditions are applicable to this case," she said.
According to Singh, the girls had not committed any offence at all and it appears that the police had acted under the pressure of local politicians.
"The liberty of the two girls was seriously breached just because they were invoking their fundamental rights guaranteed by article 19 of the Constitution," she said.
Singh alleged that the two girls were brought to the local police station at Palghar before sunrise without showing their arrests.
In keeping with section 46(4) of CrPc, a female accused can be arrested only after sunrise and not before. In this case, the rule was violated and they should not have been brought to the police station in the night, the lawyer said.
Singh further alleged that the girls were first booked under section 195 IPC (giving or procuring false evidence with intent to secure a conviction of an offence) and later this section was changed to 505 (2) IPC (statements creating or promoting enmity, hatred or ill-will between classes).
Singh also demanded dismissal of the police officers involved in registering this case.
She further said that she had lodged a complaint with the Women's Commission despite police ordering a probe as she was afraid that investigations would not be transparent and would never conclude.
Singh said if the State Commission for Women did not respond to her complaint then she would move an appropriate court seeking judicial intervention to get justice for the two girls.

....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக