திங்கள், 19 நவம்பர், 2012

உலகின் ஏழை அதிபராக உருகுவே நாட்டின் சோசு முசிகா

இப்படியும் ஒரு ிதை; உலகின் ஏழை அதிபராக உருகுவே நாட்டின்  ோசு முசிகா அறிவிப்பு
(ிழ் நெ ிபடி இரில் ம் ாணம் ரே ிகு செர்.)


மாண்டிவீடியோ: உலகிலேயே மிகவும் ஏழ்மையான அதிபர் என்ற பெருமையினை உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா (77) பெற்றுள்ளார். லத்தீன் அமெரிக்‌க நாடான உருகுவே நாட்டின் அதிபராக ‌இடது முன்னணி கட்சியின் ஜோஸ்முஜிகா உள்ளார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அதிபராக பதவி ஏற்றார். அப்போது இவரது ‌சொத்து மதிப்பு 1800 டாலராக இருந்தது. தலைநகர் மாண்டிவீடியோவில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வசித்து வரும் முஜிகா , இப்பண்‌ணையில் பெருமளவு விவசாய வேலைகளை இவரே செய்து வருகிறார். மற்ற நேரங்களில் அதிபராக அரசுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். தனக்கு சொந்தமான பழைய மாடல் காரில் சென்று காய்கறிகளை வாங்கி வருகிறார். மேலும் அதிபராக தனக்கு கிடைக்கும் மாத வருமானத்தில் 90 சதவீதத்தினை அறக்கட்டளைக்கு வழங்கி தனது அன்றாட செலவிற்கு 450 பவுண்ட் மட்டுமே ‌எடுத்துக்கொள்கிறார்.
இதுகுறித்து பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு ஜோஸ் முஜிகா அளித்த பேட்டியில், என்னை மிகவும் ஏழையான அதிபர் என ஊடகங்கள் தான் கூறுகின்றன.கடினமாக உழைத்து முன்னேறதுடிப்பவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகத்தான்,அதற்காக மேலும் மேலும் உழைப்பார்கள். அவர்கள் தான் ஏழை.ஆனால் நான் அப்படி நினைக்கவி்ல்லை. நான் ஏழை என்று என்னை நானே தாழ்த்திக்கொள்ளவும் விரும்பவில்லை என்கிறார் அழுத்தமாக.
தனக்கு ஏழ‌்மை வாழ்க்கையை கற்று கொடுத்தது சிறை தான்எனவும் கூறுகிறார்.தற்போது இவரது சமகாலத்து உலக தலைவர்கள் அரசு செலவில் அடிக்கடி வெளிநாடு பறக்கின்றனர். .இவரை பார்த்து பாடம் கற்றுக்கொள்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக