செவ்வாய், 20 நவம்பர், 2012

இலங்கைச் சிக்கல் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்:கலைஞர்

இலங்கைச் சிக்கல் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்: கருணாநிதி

(்டள். ிழ் ி்கு ிம்ிள் ீது வடி்‌கை எடம் ாறு பே்டம்! வி பேிாக ல் த் மை ன் னைக் ்டம்!)

First Published : 20 November 2012 02:53 AM IST
இலங்கைப் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார்.
டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், எதிர்காலத்தை ஒளியமயமாக்கவும் டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் ஐ.நா. மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  தீர்மானங்கள் தொடர்பாக ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்கும் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் இலங்கைப் பிரச்னையை அரசியலாக்குவதாக நாராயணசாமி கூறினாரா என்று தெரியவில்லை. ஆனால் அதைப்போல யார் சொன்னாலும் அது அபத்தமானது.
இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளோம். டெசோ மாநாடு மீண்டும் தேவைப்பட்டால் அடுத்தடுத்து நடத்தப்படும்.
அன்னிய முதலீடு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றார் கருணாநிதி.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் ஐ.நா.வில் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐ.நா.வின் மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பு நாடுகளாக உள்ள 47 நாடுகளில் பணியாற்றும் இந்தியாவுக்கான தூதர்களையும் நேரில் சந்தித்து டெசோ சார்பில் தீர்மானங்கள் கொடுக்கப்படும். அந்தத் தீர்மானங்களை ஆதரித்து ஐ.நா.வின் மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களிடம் வலியுறுத்தப்படும்.
இலங்கை இறுதி யுத்தத்தின்போது, ஐ.நா. அதிகாரிகள் வெளியேறிய செய்தி இப்போது வெளியாகியுள்ளது. ஐ.நா. அதிகாரிகளையே வெளியேற வேண்டிய அளவுக்கு அவர்களை அச்சுறுத்திய சிங்கள அரசையும், அதன் அதிபர் ராஜபட்சவையும் டெசோ வன்மையாகக் கண்டிக்கிறது.
இனப் படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசு மீது சுதந்திரமான விசாரணை நடத்திட பல நாடுகள் கொண்ட குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கு வேண்டுகோள் விடுத்து பிரித்தானிய தமிழர் பேரவை சார்பில் லண்டனில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி. 
டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை ஐ.நா.மன்றத்தில் அளித்து வந்த மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பாலுவுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
க.அன்பழகன்,  கி.வீரமணி, மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக