வெள்ளி, 23 நவம்பர், 2012

வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்

வீரபாண்டி ஆறுமுகம் காலமானார்

First Published : 23 November 2012 11:28 AM IST
முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.
1937ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பிறந்தவர். திமுகவில் கடந்த 1957ல் இணைந்தார். பூலாவரி பஞ்சாயத்து தலைவராக 1958-76 களில் இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையினை அங்கிருந்து துவக்கிய அவர், வீரபாண்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக 70-76ல் இருந்தார். பின்னர் சேலம் மத்திய கோஆப்பரேடிவ் வங்கி தலைவராக 1973-76ல் இருந்தார்.
தமிழக சட்ட மன்றத்துக்கு 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் திமுக வட்டாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். தமிழக அமைச்சரவையில் 89-90 ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். பின்னர் விவசாயத்துறையில் வேளாண் அமைச்சர் பொறுப்பை 1990-91, 96-2001, 2006-2011 காலகட்டங்களில் வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மி பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார்.
கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலால் சிரமப்பட்டு வந்தார். ஒரு வாரமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.இவருக்கு 3 மகன்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்
சென்னை, நவ.23-

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஒருவார காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு வயது 75.

இவரது மறைவையொட்டி திமுக 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1957-ஆம் ஆண்டு உறுப்பினராக திமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், தொடர்ந்து அந்த கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1958-முதல் 1970 வரை பூலாவாரி ஊராட்சி மன்ற தலைவராகவும், 1970 ஆம் ஆண்டு வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்தார்.

1962 முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 84 வரை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் சங்ககிரியில் போட்டியில் தோல்வியடைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக