புதன், 21 நவம்பர், 2012

கசாப் தூக்கு: எழுத்தாளர் சோ, பழநெடுமாறன் கருத்து

கசாப் தூக்கு: எழுத்தாளர் சோ, பழநெடுமாறன் கருத்து
கசாப் தூக்கு: எழுத்தாளர் சோ, பழநெடுமாறன் கருத்து
மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டான். இதுகுறித்து எழுத்தாளர் சோ கூறியதாவது:-

தீவிரவாதி கசாப் தூக்கிலிடப்பட்டது சரிதான். இது அவசியம் என்று நினைப்பவன் நான். சில கொடூர குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றங்களுக்கு சரியான தண்டனை கொடுக்காத சமூகம் கட்டுப்பாடு இழந்து நிற்கும்.

என்னை பொறுத்தவரை கசாப்புக்கு அளித்த தூக்கு தண்டனை சரியான முடிவுதான். இந்த தூக்கு தண்டனை ரகசியமாக வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக நான் கருதவில்லை. இதில் ரகசியம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறு சோ கூறினார்.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறியதாவது:-

ஐ.நா தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் கொண்டு வர உள்ள இந்த நேரத்தில் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனித உயிரை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது. அவசர அவசரமாக கசாப்பை தூக்கில் போட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது மனித நேயத்துக்கு எதிரான செயல்.

காந்தி பிறந்த நம் நாட்டில் மரண தண்டனையை இன்னும் வைத்திருப்பது அவமான செயல். மும்பை குண்டு வெடிப்பு மிக கொடூரமானது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட இந்த செயலை கண்டிக்கிறேன். அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர மரண தண்டனை விதிக்க கூடாது.

மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்பட உள்ளது. இந்தியா பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ளவர்கள் யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக