புதன், 3 நவம்பர், 2010

காங்கிரûஸ பலப்படுத்துவோம்: சோனியா முழக்கம்

புதுதில்லி, நவ. 2: மத்தியிலும் மாநிலங்களிலும் நம்முடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகளை மதிப்போம், அதேவேளையில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த பாடுபடுவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறினார்.அகில இந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டம் தில்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமையேற்று சோனியா பேசியதாவது:மத்தியிலும் மாநிலத்திலும் பல்வேறு கட்சிகளுடன் நாம் கூட்டணி வைத்துள்ளோம். நமது கூட்டணிக் கட்சிகளை எப்போதும் மதிக்கிறோம். அதற்காக நமது கட்சியை வளர்க்கக் கூடாது என்று அர்த்தமல்ல. கட்சியைப் பலப்படுத்த எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.அரசியல் லட்சியங்களை துறக்க முடியாதுமத்தியில் இப்போது நாம் கூட்டணி ஆட்சி நடத்துகிறோம் என்பதற்காக தொடர்ந்து கூட்டணி ஆட்சியிலேயே இருப்போம் என்று கருதி நமது கட்சியைப் பலப்படுத்தும் பணிகளை கைவிட்டுவிடாதீர்கள். கூட்டணி கட்சிகளுக்காக நமது அரசியல் லட்சியங்களை ஒருபோதும் துறந்துவிட முடியாது.அடுத்த இரு ஆண்டுகளில் 10 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க நீங்கள் ஒற்றுமையுடன் தயாராக வேண்டும்.இந்த தேர்தல்கள் நமக்கு முக்கியமான பலப்பரீட்சையாக இருக்கும். எனவே இந்த பலப்பரீட்சையில் வெற்றி பெற கட்சியின் அடித்தளத்திலிருந்து செயல்பட வேண்டும். ÷காங்கிரஸ் கட்சி இதற்கு முன் எத்தனையோ ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்துள்ளது. நமது பலம் பலமுறை சோதிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் காங்கிரஸ் கட்சி மட்டும்தான் நாடு முழுவதும் மாவட்டம், வட்டம், கிராமம் என எல்லா இடங்களிலும் காலூன்றி உள்ளது என்று பெருமையோடு குறிப்பிட்டார் சோனியா.தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் துணை இருந்தால்தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி வேகமாக வளர்ந்து வந்தாலும் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் ஆட்சியைப் பிடிப்பது கடினம் என்றே கருதப்படுகிறது. ஆனால் கெüரவமான தொகுதிகளை திரிணமூல் தர வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு. நமக்கு உரிய மரியாதை கொடுப்பவர்களுடன்தான் கூட்டணி என்று கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஏற்கெனவே திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதுபோல் தமிழகத்தில் காங்கிரஸ் எந்த திராவிடக் கட்சியோடு (திமுக, அதிமுக) கூட்டணி சேருகிறதோ அந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு அதிகம்.இந்த இரு மாநிலங்களிலும் கூட்டணியோடுதானே தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று மெத்தனமாகச் செயல்படாமல் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த பாடுபடுமாறு கட்சித் தொண்டர்களுக்கு சோனியா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருச்சியில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா பேசும்போது, கூட்டணி கட்சிகளை மதிப்போம், இருப்பினும் நமது காங்கிரஸ் கட்சியின் தனித்தன்மையை காக்கவும், கட்சியை வளர்க்கவும் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.எனவே இம்முறை ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடனே காங்கிரஸ் கூட்டணி சேரும் என்று தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.
கருத்துகள்

ஊழல், தேசிய இன நலன்களை அழித்தல், தமிழ் மீனவர்களைச் சிங்களர்கள் மூலம் ஒழித்தல், முதலான பணிகள் இன்னும் கொஞ்சம் உள்ளமையால் காங்.ஐ வளப்படுத்துங்கள் என்கிறாரா? நாடு உருப்பட காங். உருண்டோட வேண்டும் நாட்டை விட்டு. 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 3:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக