கொழும்பு, நவ.2- விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் எஸ்.பி. தமிழ்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த திறப்பு விழா நிகழ்ச்சியின் விடியோவுடன் கூடிய செய்தி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.சிலை திறப்பு விழாவில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஏராளமான இலங்கைத் தமிழர்களும் உள்ளூர் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகேயுள்ள லாகூர்நெவில் என்னும் இடத்தில் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. இன்று தமிழ்செல்வனின் 3-வது ஆண்டு நினைவு தினம். 2007 நவம்பர் மாதம் இலங்கை ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.தமிழ்செல்வன் சிலை பிரான்ஸில் திறக்கப்படுவதை தடுக்க அங்குள்ள தனது தூதரகம் மூலம் இலங்கை அரசு முயற்சி மேற்கொண்டதாக ஏற்கெனவே செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழ்செல்வன் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
கருத்துகள்
சிங்கள அரசின் கல்நெஞ்சக் கூக்குரலுக்குச் செவி மடுக்காமல் தம் நாட்டு மக்கள் விடுதலைக்காகப் பாடுபட்டு இந்தியத்தி்ன் வஞ்சகத்தால் சிங்களத்தின் படுகொலைக்கு ஆளான வீரத்திருமகன் தமிழ்ச் செல்வன் திருவுருவப்படிமத்தை நிறுவிய பிரான்சு வாழ் தமிழ் மக்களுக்கும் உதவிய அருள் உள்ளங்களுக்கும் பிரான்சு மக்களுக்கும் தலைவர்களுக்கும் அரசிற்கும் பாராட்டுகள். நிலைபுகழ் கொண்டு சிலையென நிற்கும் வீரத் திருமகனாரின் எண்ணங்கள் மக்கள் உள்ளங்களில் விடுதலை மணம் வீசட்டும்!மனித நேயம் மலரட்டும்! தமிழ் ஈழம் தழைக்கட்டும்!
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 4:09:00 PM
11/2/2010 4:09:00 PM
தமிழர்கள் உரிமை போராட்டம் விடுதலை பெறும் வரை ஓயாது.
By தமிழரசு
11/2/2010 4:01:00 PM
11/2/2010 4:01:00 PM
no one can destroy the tamil rule.
By balamurugan
11/2/2010 3:49:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/2/2010 3:49:00 PM