திங்கள், 1 நவம்பர், 2010

பாவம்! அரசியல் தெரியாமல் அரசிரயல் கட்சி நடத்த வந்து விட்டாரே! இதற்கு முன்பு எல்லாம காங்.  ஆட்சியாக இரு்நதபொழுது என்ன நடந்தது? கருநாடகத்தில் மாற்றுக் கட்சி ஆட்சி அல்லவா நடை பெறுகிறது?  அதனால் ஒன்றும் கேடில்லை எனில் அது தமிழ்நாட்டிற்ககும்  பொருந்துமே!  மத்தியில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது? கொலைகாரக்காங. உடன் கூட்டணி வைத்துப் பணம் புரட்ட எண்ணினால்  நேரடியாகச் சொல்லி விட வேண்டியததானே!  அறிவார்ந்த (?) செய்திகளைச்
 சொல்லி எங்களைச் சிரிப்பில் ஆழ்த்தத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்க திராவிட கட்சிகள் தியாகம் செய்யணும்'
மண்ணச்சநல்லூர் : ""காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்ய, திராவிடக் கட்சிகள் தியாகம் செய்ய வேண்டும்,'' என இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி அருகே இருங்களூரில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. வரும் சட்டசபை தேர்தலில் பாரி நற்பணி மன்றம், இந்திய ஜனநாயக கட்சி, பார்க்கவ குல முன்னேற்ற சங்கம் மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

அதன் பின், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சமுத்து, நிருபர்களிடம் கூறியதாவது:வரும் சட்டசபை தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சி தனித்துப் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளது. 10 தொகுதிக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்; மீதமுள்ள தொகுதிக்கும் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவர்.ஒருவேளை கூட்டணி அமைந்தாலும், அறிவிக்கப்பட்டுள்ள 10 சட்டசபை தொகுதி வேட்பாளர் இடங்களை விட்டுத்தர மாட்டோம். அகில இந்திய அளவில் எங்கள் கட்சி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகளில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் வேட்பாளர் நிறுத்தப்படுவர்.இந்தியாவை 100 குடும்பங்கள் தான் ஆட்சி செய்து வருகின்றன. மன்னராட்சி போல் நடைபெறுவதால் இந்தியாவில் ஜனநாயகம் இல்லை. இலவச திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை தொழிலில் முதலீடு செய்து, இளைஞர்கள் உழைத்து முன்னேற வழி செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி தமிழகத்தை ஆள வேண்டும். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்துக்கு ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது.  மத்தியிலும், தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டால், மூன்று மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்னை தீரும். எனவே, திராவிட கட்சிகள், காங்கிரஸ் ஆட்சி அமைய தியாக மனப்பான்மையுடன் விட்டுத்தர வேண்டும்.இவ்வாறு பச்சமுத்து பேசினார்.

ஐ.ஜே.கே., மாநில தலைவர் கோவை தம்பி, மாநில பொருளாளர் ராஜன், மாநில இளைஞரணி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு செயலர் வெங்கடேசன், கொள்கை பரப்பு செயலர் நடராஜன், தலைமை நிலைய செயலர் ரங்கபாஷ்யம், மாவட்ட தலைவர் தங்கவேலு, பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சத்தியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக