சேலம். நவ. 4: அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொறுப்பு இளைஞர் காங்கிரசுக்கு உள்ளதாக மாநிலத் தலைவர் யுவராஜா தெரிவித்தார்.மத்திய அரசின் சாதனைகளை விளக்கி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ள நடைபயணம் வியாழக்கிழமை ஆத்தூர் வந்து சேர்ந்தது. இதில் பங்கேற்ற மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா செய்தியாளர்களிடம் கூறியது:தமிழக அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் மத்திய அரசின் பங்கும் உள்ளது. ஆனால் தமிழக அரசு அதனை வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலும் அரசு செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இவ்வாறு சொல்லும்போது தவறுகளைச் சரி செய்து கொள்ள வேண்டும்.கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தாக்கல் செய்த சொத்துக் கணக்குடன், தற்போதைய நிலவரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் உடனடியாக வெளியிட வேண்டும்.இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டும் திட்டத்தில் பெயர் மாற்றம் செய்து எழுதி வருவது கண்டிக்கத்தக்கது. மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் தனிப்பட்ட ஒருவரின் பெயரை விளம்பரப்படுத்தக் கூடாது.தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டண நிர்ணயம் செய்தது பாராட்டுக்குரியது. அதே சமயம் தனியாரை விட அதிக வசதிகளுடன் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தினால் இந்த பிரச்சினை வெகு எளிதாகத் தீரும் என்றார் அவர்.
கருத்துகள்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/5/2010 3:39:00 AM
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் 5 வாசகர் கருத்துகளில் இக்கருத்தையும் மேலும் 3 கருத்துகளையும் ஒரே நாளில் தெரிவு செய்த தினமணிக்குப் பாராட்டும் நன்றியும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 1:22:00 PM
11/5/2010 1:22:00 PM


By Jim Tolstoy
11/5/2010 9:04:00 AM
11/5/2010 9:04:00 AM


By Onion Miranda
11/5/2010 9:02:00 AM
11/5/2010 9:02:00 AM


By John Christopher
11/5/2010 8:44:00 AM
11/5/2010 8:44:00 AM


By Aishath Adam
11/5/2010 8:38:00 AM
11/5/2010 8:38:00 AM