புதுதில்லி, நவ. 2: தமிழகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அழிந்துவிட்டதாக ஏளனம் செய்தனர், ஆனால் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார்.÷படுதோல்வியைச் சந்தித்து வந்த உத்தரப் பிரதேசத்தில், கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 22 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதுபோல் தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸில் 14 லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ÷தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பற்றி குறிப்பிடும்போது தமிழகத்தையும் உத்தரப் பிரதேசத்தையும் சுட்டிக்காட்டினார்.தில்லி தல்கதோரா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேடையில் பின்வரிசையில் ராகுல் காந்தி அமர்ந்திருந்தார். சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர் பேசி முடிந்த பின்னர், ராகுல் காந்தி பேச வேண்டும் என்று கட்சியினர் அன்புக் கட்டளையிட்டனர். முதலில் தயங்கிய ராகுல், பின்னர் கட்டளையை ஏற்றுப் பேசினார்.÷இந்த மேடையில் பேசுவதற்கு நான் தயாராக வரவில்லை. ஆனால் என்னைப் பேசச் சொல்லி வலையில் சிக்க வைத்துவிட்டீர்கள் என்று கூறி, பலத்த ஆரவாரத்துக்கு இடையே அவர் பேச்சைத் தொடங்கினார்.÷காங்கிரஸ் கட்சி நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்திலும் தமிழகத்திலும் காங்கிரஸ் அழிந்துவிட்டது என்றுதான் கருதினார்கள். ஆனால் உயிர்த் துடிப்போடு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.ஏழைகள் முன்னேற்றம் அடையும்போதுதான் இந்தியா முன்னேறும். ஏழை மக்களால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும். ஏழைகளை நாம் முன்னுக்கு கொண்டு வர வேண்டுமானால் பிரதமர் மன்மோகன் சிங் போல் செயல்பட வேண்டும். இந்தியாவின் இன்றைய பொருளாதார முன்னேற்றத்துக்கு மன்மோகன் சிங்கே முக்கிய காரணம் என்றார் ராகுல்.மன்மோகன் சிங்கின் நிர்வாகத்தை ராகுல் பாராட்டினார்.ஏழை, நலிவுற்ற மக்களின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.÷இரண்டு இந்தியா உள்ளது. ஒன்று பணக்கார இந்தியா மற்றொன்று ஏழை இந்தியா. இந்த இரண்டு இந்தியாவையும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஒன்றிணைக்க முடியும். நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களுடன் கலந்துரையாடியதில் ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டேன். ஏழை மக்களால்தான் இந்தியாவை முன்னேற்ற முடியும். ஏழைகளின் முன்னேற்றதுக்குப் பாடுபட வேண்டும். ஏழைகள் முன்னேற வேண்டுமானால் பிரதமரின் பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.காங்கிரஸ் கட்சி மட்டுமே ஏழைகளுக்காக பாடுபடும் தேசியக் கட்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று பிராந்தியம் சார்ந்ததாகவோ அல்லது ஜாதி, மதம் சார்ந்ததாகவோ உள்ளது என்றார் அவர்.இளைஞர்கள் காங்கிரஸ் மற்றும் மாணவர் காங்கிரஸ் அமைப்புகளுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகளை சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பாராட்டினர்.÷கட்சியை வளர்க்க ராகுல் காந்தி எடுத்துவரும் முயற்சிகளை கட்சித் தலைவர்கள் பலர் பாராட்டிப் பேசினர்.
கருத்துகள்
உண்மைதான். பண ஆசையும் அதிகார ஆசையும் இருக்கும்வரை எத்தனைக் கோடித் தமிழர்களைக் கொன்றொழித்தாலும் காங். கின் பக்கம் சிலர் இருக்கத்தான் செய்வார்கள். உ.பி.யி்ல் தனித்துப் போட்டியிட்டது போல் இங்கும் தனிததுப் போட்டியிடட்டும். ஆனால் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுது காங.கின் சாயம் வெளுக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/3/2010 3:27:00 AM
11/3/2010 3:27:00 AM
ஏழைகள் முன்னேற்றம்...ஏழைகள் முன்னேற்றம்....... பல தலை முறைகளாக உன் பாட்டன் முப்பாட்டன் காலத்திலேருந்து இப்பிடிதாண்டா எங்களை ஏமாத்திகிட்டே இருக்கீங்க!
By Solomon
11/3/2010 3:27:00 AM
11/3/2010 3:27:00 AM
ப்ன்டுஅப்ப்ப்பொஇய் ஹ்க்ல்கிஃநெர்ட்யுஇஒப்[] அட்ஃபசச்ட்ஃப்க்ஹ்ஜ்ஜ்க்ல்ல்;ழ்௯ச்வ்ப்ன்ம்,ச்ட்க்டெடுவ்௯ஹ்ஃப்க்ஃப்ட்க்ஹ்க்ஹ்ஜ்க்க்ல்க்;க்ஜ்ஹ்ஹ்
By ismail
11/3/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *11/3/2010 2:56:00 AM