ராமேஸ்வரம், நவ.2: சர்வதேச கடல் எல்லை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்.இப்பகுதியில் சுமார் 600 இயந்திரப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இலங்கை கடற்படையினர் தாக்கியதால் மீனவர்கள் அனைவரும் ஒரு மீன்கூடப் பிடிக்காமல் திரும்பியதால் படகு உரிமையாளர்கள் அனைவருக்கும் ரூ 5,000 முதல் ரூ 10,000 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக கடலோர மீனவர்கள் சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்தார்.கோடிக்கணக்கான ரூபாயில் அந்நியச் செலாவணியை மீனவர்கள் பெற்றுத்தந்தாலும், அவர்களை அரசு பாதுகாப்பதில்லை என போஸ் குற்றம்சாட்டினார்.
கருத்துகள்

கண்டன அறிக்கை விட வேண்டும். வீர மரணம் அடையச் செய்து சிவஉலகப் பதவியோ வைகு்ண்ட உலகப் பதவியோ கிடைக்க இருந்த வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் ஏனோதானோ என்று சுட்டதற்கு - இப்படி வேண்டும் என்றால் கொலைக்கூட்டணிக் கட்சியினர் எண்ணுவார்களே தவிர, இந்தியக் குடிமக்கள் உயிரைப் பறிக்கும் உடலுக்கு ஊறு ஏறபடுத்தும் சிங்களத்திற்கு எதிராகச் சிறு அசைவைக் கூட ஏற்படுத்த மாட்டார்கள். சிங்கள அரசின் இறையாண்மையைக் கட்டிக்காப்பதுதானே நம் கடமை. எனவே, இப்படிச் சுட்டிக்காட்டுவதைக்கூட மடமையாக எண்ணுவார்கள்.ஆதலின், தமிழர் நலனில் கருத்து செலுத்தும் ஆட்சியே மத்தியில் அமைய வேண்டும்.
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/2/2010 4:24:00 PM
11/2/2010 4:24:00 PM


By Aishath Adam
11/2/2010 4:12:00 PM
11/2/2010 4:12:00 PM


By Aishath Adam
11/2/2010 4:06:00 PM
11/2/2010 4:06:00 PM


By Onion Miranda
11/2/2010 3:56:00 PM
11/2/2010 3:56:00 PM


By anandan
11/2/2010 3:55:00 PM
11/2/2010 3:55:00 PM


By Jim Tolstoy
11/2/2010 3:53:00 PM
11/2/2010 3:53:00 PM


By John Christopher
11/2/2010 3:47:00 PM
11/2/2010 3:47:00 PM


By indian
11/2/2010 2:21:00 PM
11/2/2010 2:21:00 PM


By Puravi
11/2/2010 2:16:00 PM
11/2/2010 2:16:00 PM


By Karthik
11/2/2010 12:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்11/2/2010 12:58:00 PM