சென்னை, நவ. 4: சென்னை அண்ணா நகரில் கடத்தப்பட்ட சிறுவன் கீர்த்திவாசனை பணம் கொடுத்து மீட்டது காவல்துறைக்கு ஏற்பட்ட அவமானம் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்றும், ஊழல் குறித்துபேச ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.அதற்கு பதிலளிக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர் கருணாநிதி. சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தை அமைத்த போது, அதனை எதிர்கொள்ளாமல் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி தனி நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை மனு போட்டு, அனைத்தும்தள்ளுபடியான நிலையில், இந்திரா காந்தியிடம் சரணாகதி அடைந்து, சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கை திரும்பப் பெறச் செய்தவர் கருணாநிதி. பால் கமிஷன் அறிக்கை வெளியானபோதும் சென்னை மாநகராட்சி தேர்தல் வன்முறை நிகழ்வுகளிலும் உயர் நீதிமன்றத்திடம் கண்டனச் சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு, வழக்குகளை துணிச்சலுடன்நீதிமன்றத்தில் சந்தித்து வெற்றி பெற்ற என்னைப் பற்றியோ, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தோ பேச அருகதை இல்லை.கோடநாடு எஸ்டேட் வழக்கில் ஒன்றும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறுதாவூரை பொறுத்தவரை எனக்கும், அந்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கருணாநிதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையமே தெரிவித்துள்ளது.கட்டாய மதமாற்ற சட்டம் அதிமுக ஆட்சியிலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில்தான் சிறுபான்மையினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். வக்ஃப் வாரிய நிலங்கள் தி.மு.க.வினரால் அபகரிக்கப்படுகின்றன. சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டுக்காக அதிமுக ஆட்சியில் கமிஷன் அமைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. ரவுடிகளின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் தொடர்புடைய அழகிரியை மத்திய அமைச்சர் ஆக்கிய பெருமை கருணாநிதியையே சாரும். கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்ட குற்றவாளியை, வேளாண்மைத் துறை அமைச்சர் வீராபாண்டி ஆறுமுகம் தேசிய கொடி மற்றும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட காரில் சிறைக்குச் சென்று சந்தித்துள்ளார்.நான் அரசு காரில் செல்லவில்லை, சொந்த காரில் தான் சென்றேன் என்று அவர் கூறியுள்ளார். அமைச்சர் சென்ற வாகனத்தில் காணப்பட்ட எண் டி.என் 30 ஏஏ 9559 என்றும், அது இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் இந்த வாகன எண் 2007-ஆம் ஆண்டே சேலம் மாநகராட்சி ஆணையர் சார்பில் ரூ. 8 ஆயிரம் கொடுத்து பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பதிவு செய்யப்படாத எண்ணை கொண்டுள்ள ஒரு வாகனத்தில் அமைச்சர் பயணம் செய்துள்ளார். எந்த வாகனத்திற்கும் ஒதுக்கப்படாத எண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்துவதற்குக் கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த எண்ணை தாங்கிய வாகனம் விபத்தில் சிக்கினால் எவ்வித இழப்பீடையும் பெற முடியாது. நீதிபதி போல பேசும் கருணாநிதியால் வீரபாண்டி ஆறுமுகம் மீது நடவடிக்கை எடுக்க முடியுமாகடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் நீதி, நேர்மை, நாணயம், ஜனநாயகம் எல்லாம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், பதுக்கல் ஆகியவை கொடிகட்டி பறக்கின்றன.சென்னை அண்ணா நகரில் கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் கீர்த்திவாசனை மீட்க கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக காவல் துறை ஆணையரே பேட்டி அளித்து இருக்கிறார். பணம் கொடுத்து கடத்தப்பட்டவரை காவல் துறை மீட்டது இதுவே முதல் முறை. இது தமிழகக் காவல் துறைக்கு ஏற்பட்ட மிகப் பெரிய அவமானமாகும். அமைதிப் பூங்காவாக விளங்கிய தமிழ்நாடு அமளிக்காடாக மாறிவிட்டது என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள்


By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2010 3:15:00 AM
11/5/2010 3:15:00 AM


By rajesh
11/5/2010 2:46:00 AM
11/5/2010 2:46:00 AM


By RAMA NATHA SWAMY
11/5/2010 2:45:00 AM
11/5/2010 2:45:00 AM


By Rajasji
11/5/2010 2:44:00 AM
11/5/2010 2:44:00 AM


By Rajasji
11/5/2010 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English 11/5/2010 2:42:00 AM