ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இதோ ஒரு விடிவெள்ளி


வெல்லும் வெல்லும் தமிழ் ஈழம் வெல்லும்! வெல்லும்!
சொல்லும் சொல்லும் காலமதைச் சொல்லும் சொல்லும்!
செல்லும் செல்லும் துன்பம் யாவும் உடன் செல்லும் செல்லும்!
நாடுகடந்த தமிழீழ அரசின் பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துகள்! உட்பகை, கூடா நட்பு  இன்றித் துணிவும் தூய்மையும் கொண்டு முயல்க! வெல்க! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி மக்கள் எனப் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆதிக் குடிமக்களான தமிழ் மக்கள் பல கோடி ஆண்டுகளாய் பரம்பரை பரம்பரையாய் தமிழ் ஈழத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வட இந்தியாவில் உள்ள லாலா நாட்டு (வங்காளத்திற்கும் ஓரிஸா விற்கும் இடைப்பட்ட நாடு)
அரசனாய் இருந்த சிங்கபாகு தன் சொந்த மகனாலும் அவனது 700 கூட்டாளி களாலும் தனது நாட்டுக் குடிமக்கள் அனுபவித்த அளவு கடந்த துன்ப வேதனைகளிலிருந்து தன் நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மகன் என்ற காரணத்தால் அவனைக் கொல்ல விரும்பாமல் தன் மகன் விஜயனையும் கூட்டாளிகளையும் ஒரு கப்பலில் ஏற்றி நாடு கடத்தினான். அந்தக் கொடிய பாதகர்கள் கடலில் அலைந்து திரிந்து இறுதியில் இலங்கையில் தம்பபண்ணையில் கரையிறங்கி இலங்கையின் நடுப் பகுதியான காட்டு மலைப்பகுதியில் வாழ்ந்த நாகரிக முன்னேற்றம் குறைந்த இயக்கர், நாகர், வேடர் போன்றோருடன் சேர்ந்து வாழ்ந்தார்கள். பின் இந்தியாவில்; இருந்து பெண்களை வரவழைத்து திருமணங் கள் செய்து பல்கிப் பெருகி தென்னிலங்கையில் பெரும்பான்மையோராக மாறி ஆட்சி நடத்தினார்கள். ஆனால் இலங்கையின் சமவெளிப் பகுதிகளான வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மிகவும் நாகரிக முன்னேற்றம் கொண்ட சமூகமாய் வலிமையான ஆட்சி நடத்தினார்கள். ஐரோப்பியர்களால் வெற்றி  கொள்ளப்படும் வரை தமிழ் மன்னர்கள் சங்கிலியனாலும், பண்டார வன்னியனாலுமே தமிழர்கள் கடைசி யாக ஆளப்பட்டார்கள்.
400 வருடங்களாக இலங்கையை ஆண்ட ஐரோப்பியர் இறுதியில் தாம் தமது முகாமைத்துவ வசதிக்காக ஒன்றாக்கி வைத்திருந்த இலங்கையின் இரு பகுதிகளையும் ஒரே ஜனநாயக நாடு என்ற போர்வையில் சுதந்திர அரசை பெரும்பான்மைச் சிங்களவர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். இந்த அநீதியை எதிர்த்து சிங்களவர்களிடமிருந்து தமது இறைமையுள்ள அரசை மீட்டெடுக்க 60  ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் ஜனநாயக அகிம்சை வழியிலும் அது ஆயுதமுனையில் மனிதாபிமானமற்ற முறையில் ஒடுக்கப் பட்ட போது ஆயுதப் போராட்ட வழியிலும் போராடி வந்தனர்.
ஆனால் 23 உலக வல்லாதிக்க நாடுகளின் முழு உதவியோடு லட்சக்கணக்கான உயிர் அழிவோடும் பலகோடிக்கணக்கான சொத்து அழிவுகளோடும்  அத்தனை மனித உரிமைகளையும் அடியோடு புதைத்து விட்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், நச்சுக் குண்டுகள், கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தை சிங்கள அரசு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. கடந்த 460 ஆண்டுகளில்  காணாத மிகப் பெரும் பின்னடைவைத் தமிழினம் அடைந்துள்ளது. ஷஷம்” என்றால் சிறை வாசம் ஷஷஆம்|| என்றால் வனவாசம் இல்லை இல்லை வானவர் வாசம் என்ற நிலைக்கு வந்து விட்டோம். மொத்த இலங்கையையும் ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றும் தனது திட்டத்தில் மகிந்தாவின் கொடிய அரசு வெற்றி கண்டு ரொக்கட் வேகத்தில் முன்னேறுகிறது. தமிழருக்கு இது ஒரு மிக இருண்ட காலமே. தமிழரின் விருப்பைக்  கருத்துகளைத் தானும் வாய் திறந்து சொல்வதற்கேனும் அங்கு ஒருதலைமை இல்லாத  இருக்க முடியாத  சூழலில், உள்ளத்தால் இருளில் மூழ்கி இருந்த தமிழினத்திற்கு உதயத்திற்கு முன் பிரகாசிக்கும் விடி வெள்ளியாக, இதோ இருக்கிறேன் வழிகாட்டவென்று தோன்றியதுதான் நாடு கடந்த தமிழீழ அரசு.
ஈழத்தில் தமிழருக்கான அரசு ஒன்று உதயமாகும் வரை தமிழ் மக்களுக்கு வழி காட்ட  ஒளி தரும் விடி வெள்ளியான இந்தத் தமிழீழ அரசு அவர்களை உரிய முறையில் வழிகாட்டி வழிநடத்தி கரை சேர்க்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை. தமிழருக்கான அரசுரிமை உடனடியாகச் சாத்தியமாகாத ஒன்றாக இருக்கலாம். அடுத்த தலைமுறைக்குக் கூட விடப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் அது கிடைத்தே தீரும். அந்த வகையில் தான் தூரநோக்கோடு லாவகமாகச் சர்வதேச அரங்கில் காய் களை நகர்த்தி மெல்ல மெல்ல ஆனால் உறுதி தளராமல் பயணிக்க வேண்டும்.  தொடக்கத்திலேயே பல சோதனைகளையும் சவால்களையும் சந்திக்க நேர்ந்துள்ளது உண்மையாக இருக்கலாம்.
ஆனாலும் அது அத்தனை சவால்களையும் தாண்டி வீறு நடை போட்டு வெற்றிக் கொடியை நிலை நாட்டத்தான் போகின்றது என்பது வெள்ளிடை மலையே. அத்தனைக்கும் முகம் கொடுத்து அசையாத மலைபோல தளராமல்; தொடர்வண்டியை முன்னின்று இழுத்துச்செல்லும் இயந்திரம் போல திரு விஸ்வ நாதன்  உருத்திரகுமாரன் அவர்கள் அதன்  தலைமை அமைச்சர்  பதவியில் அமர்ந்துள்ளார். அவருக்கு கனடாத் தமிழர் இணையம் தனது வாழ்த்துக்களையும் பேராதரவையும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது. அத்தோடு அவைத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட திரு பொன் பாலராஜ னுக்கும் துணை அவைத்தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட செல்வி சுகன்யா ஆறுமுகம் புத்திர சிஹாமணிக்கும் கூட எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவர்களதும் தெரிவு செய்யப்பட விருக்கும் அமைச்சர்களினதும் மற்றும் சகல உறுப்பினர்களதும் கடைமைகள் பணிகள் பரந்து விரிந்து கிடக்கின்றன. அவர்கள் எல்லோரும் மிகுந்த பொறுப்போடும் கடமை தியாக உணர்வோடும் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும்.
மனம் தளராமல் சலிப்பின்றி இலட்சியத்தை நோக்கி வீறுநடை போடவேண்டு மென்பதே கனடாத் தமிழர் இணையத்தின் வேண்டுதலும் விருப்பமுமாகும். சோதனையின்றிச் சாதனை இல்லை. சோதனைகளையும் அறைகூவல்களையும் வெற்றிக்கான படிக்கற்களாகக் கொள்ள வேண்டும். வெற்றி உறுதி.
வாழ்க நாடு கடந்த தமிழ் ஈழ அரசு!   வெல்க ஈழத் தமிழர் போராட்டம்!!
வின் மகாலிங்கம்
தலைவர்
கனடாத் தமிழர் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக