விழுப் புரம், மே 16: ஒரு குறிப்பிட்ட மொழியை படித்தால்தான் வேலை கிடைக்கும் என்று கருத்து நிலவுகிறது. ஒருவர் வேலை செய்ய வேண்டிய இடத்தை முடிவு செய்தபிறகு அதற்கு தகுந்தபடி மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று தமிழர் எழுச்சிப் பெருநாள் பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை இரா. பாவாணன் தெரிவித்தார்.இ லங்கை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தமிழர் எழுச்சிப் பெருநாள் விழாவாக விழுப்புரத்தில், பெரியார் சிலை அருகில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் மண் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பேழைக்கு அஞ்சலி செலுத்தினார் பாவாணன்.பின் னர் அவர் பேசியது: இந்தி படித்தால் வேலைகிடைக்கும் என்றால், ரூ. 100 கூலிக்கு பிகாரிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் தமிழகம் வந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.தற்போது கொரியா படித்தால் வேலை, அரபு படித்தால் வேலை என்று விளம்பரங்கள் வருகின்றன. யார் எந்த நாட்டுக்கு போக விரும்புகிறார்களோ அவர்கள் அந்த மொழியை படிக்கட்டும்.நம் முன்னோர்கள் யவனத்துக்கும், கிரேக்கத்துக்கும் சென்று வெற்றிகரமாக வணிகம் செய்து வந்தார்களே அவர்கள் என்ன அந்த மொழியையா படித்தார்கள்.தி ருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணையில் திரைப்படங்கள் அதிகம் எடுப்பார்கள். இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த உணவின் மிச்சங்களை சாப்பிட அங்கு நாய்கள் அதிகம் குவிந்தன. அவை பல்கிப் பெருகிவிட்டன.இத னால் சுற்றுலாப் பயணிகளுக்கு பெரும் தொல்லையாக இருந்ததால், அவற்றை சுட்டுக் கொல்ல, மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து, 40 நாய்களை சுட்டுக் கொன்றது.அப்போது பெங்களூரிலிருந்து வந்திருந்த பயணி ஒருவர் புளுகிராஸ் உறுப்பினர், அவர் அந்த காட்சியை படம்பிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டார். இப்போது மாவட்ட நிர்வாகம் அச்சத்தில் உள்ளது.நாய்களுக் குக் கூட குரல் கொடுக்க ஒருவர் உள்ளார், ஒரு அமைப்பு உள்ளது, ஆனால் லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டதை கேட்க நாதியில்லாமல் போனதே என்றார்.முன்னதாக தமிழிளைஞர் கூட்டமைப்பு பா. ஜோதிநரசிம்மன், குமார் ஆகியோரின் குறுநாடகங்கள் நடைபெற்றன. எழில். இளங்கோ வரவேற்றார்.
கருத்துக்கள்
சாலியன் வாலாபாக் படுகொலை பற்றி இன்றைக்கும் அழுது கண்டித்துக் கொ்ணடிருக்கும் இந்தியா தன் முழு வல்லாண்மைஒத்துழைப்புடன் எரி குண்டுகள், கொத்துக் குண்டுகள், வேதியல் குண்டுகள், ஏவுகணைகள், படைத்தலைவர்கள், படைக்கலன்கள் அளித்து நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட மண்ணின் மைந்தர்களையும் நூறாயிரம் அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றொழித்து இனப்படுகொலை செய்த பெருந்துயர நாள் இன்று. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்! வாழ்விழந்தவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதி யளிப்போம்! உலகின் முதல் இனம் தன் தாய்நிலத்தில் அழிக்கப்படும் கொடுமைக்கு முடிவுகட்டுவோம்!
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/17/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்5/17/2010 2:57:00 AM