புதன், 19 மே, 2010

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முதல் கூட்டம்


கொழும்பு, மே 18- அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முதல் கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் வி. ருத்திரகுமாரன் பேசிய விபரங்கள் இலங்கைத் தமிழ் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் இணையதளத்தில் வெளியாகியுள்ள அவரது உரை:

"தமிழ் ஈழ விடுதலைப் பயிருக்கு தம் உயிர்களை எருவாக்கிய எமது மாவீரர்களுக்கும் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு பலியான பொது மக்களுக்கும் முதற்கண் எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இம் முதலமர்வு நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி ஜோன்சன் அவர்களது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் சட்டமா அதிபராக விளங்கிய ராம்சே கிளர்க் அவர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சக தெரிவு செய்யப்பட்ட அரசவை பிரதிநிதிகளே! புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களே! எமது தமிழீழத் தாயகத்தில் வாழ்ந்து வரும் எமதருமை உறவுகளே! தமிழ்நாட்டு சகோதரர்களே! உலகத் தமிழ் மக்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய நாளில் உலகின் அடுத்த சுதந்திரநாட்டை அமைக்கவிருக்கும் தென்சூடானிய மக்களின் அரசியல் தலைமையான எஸ்பிஎல்எம் அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதியும் எம்முடன் இணைந்து கொண்டமையிட்டு நாம் மகிழ்வடைகிறோம்.

அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் தென்சூடானிய மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகிப்பதற்கான பொதுசனவாக்கெடுப்பு முழுமையான வெற்றிபெற நாம் வாழ்த்துவதோடு, அமையப்போகும் புதிய நாடான சுதந்திர, ஜனநாயக, வளம் நிறைந்த தென் சூடான் எமக்கு ஒரு முன்னுதாரணமான அமையும் என நாம் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் புதிய அணுகுமுறைக்கு ஊடாக தன்னை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம்.

கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் உரிமைகளுக்காகவும் தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் எழுப்பப்பட்ட சனநாயகக்குரல்களும் கோரிக்கைகளும் இராணுவ அடக்குமுறையின் கீழும், சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டும், ஏவிவிடப்பட்ட இனவன்முறைகளினூடாகவும் ஒடுக்கப்பட்டநிலையில், தங்களினை தற்காத்துக் கொள்வதற்காக இலங்கைத்தீவின் ஆள்புல எல்லைகளுக்கு அப்பால் சிதறியோடி, உலகின் பலதிக்குகளிலும் ஏதிலிகளாக குடியேறி, இன்று பரந்து வாழுகின்ற சுமார் ஒரு மில்லியன் ஈழத்தமிழர்களின் சார்பாக நாம் இங்கு ஒன்றிணைந்துள்ளோம்.

இந்த தேசிய அரசிலமைப்பு மையத்தில், 223 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேம்ஸ் மடிசன், அலெக்ஸ்சான்டர் கமில்டன் உட்பட்ட சுதந்திர அமெரிக்க நாட்டின் மூதாதையர் புதியதொரு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக இங்கு கூடியிருந்தனர். இவர்களின் ஒன்றுகூடல் அமெரிக்காவின் அரசியலமைப்பைப் பிரசவித்தது.

நாமும் நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நமது முதலமர்வுக்காக இங்கு கூடியிருப்பது மிகவும் பொருத்தப்பாடுடையது. நாம் இங்கு கூடியிருப்பதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கே.

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனமும் இந்த பிலடெல்பியா நகரிலேயே நிகழ்ந்தது. நாமும் நமது சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்வதற்கான பயணத்தைத்தான் மேற்கொண்டுள்ளோம்.

ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்றைய தினம் மிகமுக்கியமான நாளாக அமைகின்றது. கடந்த வருடம் இதே நாளில் எமது தாயகத்தின் முல்லைத்தீவுக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுநிலப்பரப்பினுள் சுமார் 300,0000 திற்கும் அதிகமான அப்பாவித் தமிழ்மக்கள் கொடுரமான மரணப்பொறிக்குள் தள்ளப்பட்டனர்.

நாகரிக உலகின் நியமங்களினையும், பண்பாடுகளினையும்,அரசியல் விழுமியங்களினையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கையின் சிங்கள தேசியவாத அரசும் அதன் இராணுவமும் இனப்படுகொலையினை நிகழ்த்திய நாள் இது.

21ம்நூற்றாண்டின் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடுரமான குற்றம் தன் கண்முன்னே நிகழ்வதனை தடுப்பதற்கும் மக்களினைக் காப்பாற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளினை முன்னெடுக்காமல் சர்வதேச சமூகம் செயலற்று மௌனித்து நின்ற நாள் இது.

சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களினைக் காவு கொண்டும், பலபத்தாயிரம் மக்களினை குற்றுயிராக காயப்படுத்தியும், மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினை ஏதிலிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப்படுத்திய நாள்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் எமது மக்கள் மீதான போரை இலங்கை அரசு தீவிரப்படுத்திய போது அனைத்துலக தொண்டர் நிறுவனங்களை இப் பகுதியனை விட்டு வெளியேற்றி விட்டுத்தான் இத்தனை கொடுமைகளையும் புரிந்தது.

எமது மக்களுக்கான உணவு, உறையுள்,மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டன. எமது மக்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டுகளும் எறிகணைகளும் வீசப்பட்டன. 99% க்கும் கூடுதலாக சிங்கள இனத்தவர்களைக் கொண்ட இலங்கையின் ஆயுதப்படைகளால் தயவு தாட்சண்யமின்றி எமது மக்கள் கொல்லப்பட்டனர். மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன.

இது ஈழத் தமிழ் தேசத்துக்கு எதிராக இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையின் பாற்படட்தேயாகும்.

முன்னாள் யூகோஸ்லாவியாவின் இனஅழிப்பு தொடர்பான விசாரனை மன்று, “இனஅழிப்புத் தொடர்பான நோக்கம் புறக்கணிப்புக்களின் தீவிரத்தன்மைகளின் உடாக வெளிப்படும்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது.

இவ்விடத்தில் இலங்கை அரசு 1971 ஆம் ஆண்டு இடம் பெற்ற சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியினை அடக்குவதற்குப் பிரயோகித்த முறைகளை தமிழ் தேசத்துக்கு பிரயோகித்த முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியமானதாகும். சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்க விமானக்குண்டுகள், எறிகணைகள் வீசப்படவில்லை. மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்படவில்லை. உணவும் மருந்தும் போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களின் நிறுவனங்கள் அழிக்கப்படவில்லை.

இந்த வேறுபாடு, புறக்கணிக்கும் அணுகுமுறை இலங்கை அரசின் இன அழிப்புக்கான நோக்கத்தை வெளிப்படுத்தப் போதுமானது

இத்தகைய இன அழிப்பு அபாயத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஈழத் தமிழர் தேசம் தனக்கென ஒரு சுதந்திர நாட்டை இன அழிப்புக்கு எதிரான ஈடு செய்பரிகாரமாக அமைத்துக் கொள்வதற்கான கோரிக்கையினை எழுப்புவதற்கு சர்வதேச சட்டங்களில், குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிரான பிரகடனத்தின் 8 சரத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திலும் 7வது அத்தியாயத்திலும் இடம் உண்டு.

இலங்கை அரசும் அதன் ஆட்சியாளர்களும் தமிழ்மக்களின் போராட்டவலுவினை தனது இராணுவ மேலாதிக்கத்தின் வலுக்கொண்டு சிதைத்தது விட்டதாகவும் தமிழ்மக்களின் விடுதலைத்தீயினை அணைத்துவிட்டதாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ஆனால் எமது இந்த அமர்வானது தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படமுடியாதது என்ற செய்தியை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. நாடு கடந்த தேசமாக நாம் இங்கு கூடி நிற்பது தமிழரின் ஒற்றுமை உடைந்து போகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

நாம் எமக்கிடையே மேற்கொண்ட ஜனநாயக செயன்முறையின் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அம் மக்கள் பிரதிநிதிகள் இவ் அமர்வில் கூடியியிருப்பது தமிழர்கள் தமது இலக்குகளை ஜனநாயகவழியில், சாத்வீக முறையில், வெளிப்படைத்தன்மையும் பன்முகத்தன்மையும் கொண்டு முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளனர் என்ற செய்தியனை வெளிப்படுத்தி நிற்கிறது.

ஒரு இனத்தின் அபிலாசையினையோ அல்லது உரிமைக்குரலினையோ வன்முறைகொண்டோ அதிகாரத்தின் பலம்கொண்டோ அடக்கிவிடமுடியாது. அம்மக்களின் அபிலாசைகள் திருப்தியடையும் போது மட்டுமே விடுதலைக்குரலின் உக்கிரம் தணியும். உரிமைக்கான போராட்டத்தின் தீவிரம் இல்லாது போகும். அதுவரை அம்மக்களின் உரிமைக்குரலும் விடுதலைக்கான வேட்கையும் ஏதோ ஒருவடிவத்தில் எங்கோ ஒரு மூலையில் அணையாது பாதுகாக்கப்படும்.

அத்தகைய பணியினை நிறைவேற்றுவதற்கான மக்கள் அமைப்பினை உருவாக்கும் உன்னத குறிக்கோளுடனேயே புலம்பெயர்தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் நாங்கள் இங்கு இணைந்துள்ளோம். எமது இணைப்பும் நாங்கள் கட்டியெழுப்பவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்கின்ற புதுமையான நிறுவனவடிவமும் இன்றைய நவீன சிந்தனை மரபுகளுக்கும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் நாகரீகத்திற்கும் உலகந்தழுவியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மானிடவிழுமியங்களுக்கும் முன்மாதிரியாக அமையவிருக்கின்றது.

ஒரு சமூகம் தனது தேசிய விடுதலையினை வென்றெடுப்பதற்கான புதிய பாதையினை எம்மால் உருவாக்கப்படவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வுலகிற்கும் விடுதலைவேண்டிநிற்கும் ஏனைய சமூகங்களுக்கும் முன்னறிவிக்கும்.

கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான அடித்தள வேலைகளினை முன்னெடுக்கும் மிக பாரியபொறுப்பு என்னிடம் கையளிக்கப்பட்டது. நிதானத்துடனும், தேசத்தின் விடுதலையிலும் தங்களின் செழுமைமிக்க எதிர்காலத்திலும் தமிழ்மக்கள் கொண்டிருந்த அசைக்கமுடியாத பற்றுதியில் நம்பிக்கைவைத்தே நான் இப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன். எனது பணியின் பாரத்தினை பகிர்ந்து சுமப்பதற்காக பலநூற்றுக்கணக்கான விடுதலை விரும்பிகளும் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் ஆர்வலர்களும் முன்வந்தார்கள். மதியுரைக்குழு உறுப்பினர்களாக, நாடுவாரியான செற்பாட்டுக்குழுக்களின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் என்னுடன் கைகோர்த்து நின்றார்கள். அவர்களின் அளப்பரிய பங்களிப்பினை இவ்விடத்தில் பெருமனதோடு உங்கள் சார்பாக நினைவுகூருகின்றேன்.

இவ் அரசியல் முன்னெடுப்புக்கு பல தமிழ் ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தன. இவ் ஊடக நண்பர்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடனும் தோழமையுணர்வுடனும் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இலக்கின் எல்லைக்குள் நாங்கள் இன்று பிரவேசித்துவிட்டோம் என்று கூறுவதில் நிறைவு கொள்கின்றேன். இன்றிலிருந்து புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் தனக்குள் உத்வேகம் பெற்றதாக, தமிழ் மக்களின் தேசியவிடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும். அதேபோல் தமிழ் மக்களுக்காக புலம் பெயர் மக்களால் கட்டியெழுப்பப்படும். இவ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்குரிய கூட்டுப்பொறுப்பினை உணர்ந்து செயற்படும்.

சர்வதேச சமூகமே, தனிமனித உரிமைக்காகவும் சமூகங்களின் உரிமைக்காகவும் தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் விடுதலைக்காகவும குரல்கொடுக்கும் ஆர்வலர்களே, அரசுகளே!

இலங்கைத்தீவினுள் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் தங்களிடமிருநது பிரிக்கமுடியாத அரசியல் இறைமையை பிரயோகிப்பதற்காகவும் சுய நிர்ணய உரிமைக்கு முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களது உரிமைக்குரலும் தற்காப்புத்திறனும் தற்சார்பு வாழ்க்கையும் இலங்கையின் ஆட்சியாளர்களினால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட சட்டமுறை அரசு என்கின்ற ஒரு காரணத்தினைக் காட்டி தனது இனப்படுகொலையினையும் தமிழ்மக்கள் மீது நிகழ்த்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களினையும் நியாயப்படுத்த சிறிலங்காவின் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆயினும் தமிழ் மக்கள் தமது இறைமையை சிங்கள அரசிடம் கொடுக்காத காரணத்தினால் தமிழ் மக்களை பொறுத்த வரையில் சிங்கள அரசை சட்டபூர்வமான அரசாக கருத முடியாது. ஒரு விவாதத்திற்காக சட்டபூர்வமான அரசாக கருதப்பட்டாலும் தமிழ் இனத்திற்கு எதிரான இனப்படுகொலையினால் சிங்கள அரசு அந்த தகுதியை இழந்துவிட்டது.

இலங்கைத்தீவினுள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குள்ளும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் சமூகத்தினை அச்சுறுத்தும், சட்டத்திற்கு புறம்பான கொலைக்கரங்களுக்குள்ளும் சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்களால் சுதந்திரமாக தங்களது அபிலாசைகளினை எடுத்துரைக்க முடியவில்லை.

உரிமைகளுக்காகவும் மக்கள் நலன்களினை பாதுகாப்பதற்காக செயற்படும் உங்களாலும் கூட சுதந்திரமாகவும் தன்னியல்பாகவும் அம்மக்களினை அணுகுவதற்கும் அவர்களின் துயரங்களினை கேட்டறிந்து உதவுவதற்கும் இலங்கையின் அரசியற்கட்டமைப்பும் அதன் ஆட்சியாளர்களும் அனுமதிக்கவில்லை.

எமது தாயக மக்கள் சுதந்திரமாக தமது அரசில் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டுமானால் போரினால் பாதிப்படைந்த அவர்களது வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இவர்களை சூழ்ந்துள்ள சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு இல்லாதொழிக்கப்படவேண்டும். அடுத்த ஆண்டு தென் சூடானில் நடைபெற உள்ளது போன்று சர்வேச சமூகத்தின் ஏற்பாட்டுடன், ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரவினை அமைத்து வாழ விருபம்புகிறார்களா என்ற ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்படும் சூழல் உருவாக வேண்டும். அப்போது எமது தாயக மக்களுக்கு தமது சுதந்திரவேட்கையினை வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி கிடைக்கும். தற்போது எமது தாயக மக்களின் சுதந்திரவேட்கை இலங்கையின் அரசியல் சட்டங்களினாலும், கொடும் இராணுவ இயந்திரத்தாலும் அடக்கியொடுக்கப்படும் நிலையே நிலவுகிறது.

இந் நிலையிலேயே புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகம் சர்வதேச அரசியற்தளத்திலே ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளினை ஓங்கி உரத்து ஒலிப்பதற்கும், இராணுவ ஆக்கிரமிப்பிற்குள்ளும் ஏதேச்சாதிகார ஆட்சியின் கீழும் சிக்குப்பட்டுள்ள மக்களின் சுதந்திரத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாதுகாப்பு மிக்க எதிர்காலத்தினைக் கட்டியெழுப்புவதற்காகவும் இங்கு கூடியுள்ளோம்.

இன்றுவரை உலகின் நாகரீகம் மிக்க சமூகங்கள் கண்டறிந்து கட்டியெழுப்பிய உயர் அரசியல் விழுமியங்களே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்படு நியமங்களாக இருக்கும். அவற்றினடிப்படையிலேயே இவ்வமைப்பு ஈழத்தமிழர்களின் தன்னாட்சிஉரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்காக, இறைமையை பிரயோகிப்பதற்காக சலிப்பின்றி போராடும். இவ் அடிப்படையில் சகலருடனும், அரசுகள், பொதுஅமைப்புக்கள், நாடுகளின் கூட்டுக்கள் ஆகியோருடன் பொருத்தமானவகையில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்களே! சிங்கள மக்களே!

தமிழர்களது வாழ்வுரிமைக்கான போராட்டம் தவறான சிந்தனைகளினைக் கொண்ட சிஙகள தேசியவாத தலைவர்களினால் கட்டியெழுப்பப்பட்டு குவிக்கப்பட்ட அதிகாரமையத்தினால் இராணுவக்கரங்கள் கொண்டு நசிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ்மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், அது வரலாற்றின் நியதியாகும். அது சகல உயிரினங்களுக்கும் பொருத்தமான இயற்கையின் விதியாகும்.

உங்களது மக்கட்தொகைப்பெருக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரின பெரும்பான்மைகொண்ட ஆட்சியதிகாரத்தின் பலத்தினைக்கொண்டு ஏனைய இனங்களுக்கு எதிராக அரசியலமைப்பினையும் சட்டங்களினையும் நிர்வாக விதிகளினையும் உருவாக்கியுள்ளீர்கள்.

இது சக இனஙகள் தங்களது உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும் செயற்படுவதற்கும் வேண்டிய அரசியல் வெளியினை தீவினுள் இல்லாமற்செய்துள்ளது. இராணுவபலத்தினால் நீங்கள் அடைந்துள்ள மேலாதிக்க நிலை உங்கள் கண்களினை முற்றாக மறைத்துள்ளது.

வெற்றி மமதைகாரணமாக தமிழ்மக்கள் அடைந்துள்ள துயரங்களினை உங்களினால் உணரமுடியவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழ்மக்களின் வாழ்வாதாரங்களினையும் வளங்களினையும் கையகப்படுத்துவதிலும் அவர்களினைக் கையறுநிலைக்கு தள்ளுவதிலும் துரிதமாக செயற்படுகின்றீர்கள்.

தமிழ்மக்களின் தேசிய அபிலாசைகளுக்காக தம்முயிரைத்துறந்த வீரர்களின் கல்லறைகளினை சிதைத்து அழிப்பதில் பெருமகிழ்வு கொள்ளுகின்றீர்கள். தற்போது பரிணமித்துவரும் உலகின் புதிய அரசியற் பொருளாதார ஒழுங்கினுள் ஒடுக்கப்படும் சமூகங்களின் குரல்களினை வெளிக் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றாகவே எமது நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அமைகின்றது.

இலங்கைத்தீவினுள் இறைமையுடனும் தன்னாட்சியுரிமையுடனும் எங்கள் தாயக நிலத்தில் வாழுவதற்கான தேசியவிடுதலைப் போராட்டத்தின் புதிய சூழலில் நாங்கள் இருக்கின்றோம். தேசியத் தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.

இலங்கைத்தீவின் அரசியல் நிர்ப்பந்தங்களுக்குள் உங்களால் முன்னெடுக்க சாத்தியமில்லாத விடயங்களுக்காக பலம்வாய்ந்த புலம்பெயர் சமூகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கட்டமைப்புக்கு ஊடாக செயற்பட உள்ளோம்.

சமகாலத்தில் உங்களின் துயரங்களின் சுமைகளினைக் குறைப்பதற்கும் வாழ்க்கையினை மீளக்கட்டியெழுப்புவதற்கும் எங்களின் கரங்கள் உங்களினை நோக்கி களைப்பின்றி நீளும். உங்கள்மீது வன்மம் கொண்டு குற்றம் புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்.

நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல. உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்.

நாங்களும் நீங்களும் இணைந்தவர்களாக, நிலத்திலும் புலத்திலும் நாடு கடந்த அரசியல் வெளியினுள் வாழும் மக்களாக, தமிழீழ தேச மக்களாகிய நாம் இருக்கிறோம்.

தமிழீழ தேசத்தின் விடிவுக்கும் நம் எல்லோரது வளமான வாழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக நாம் வலுச் சேர்ப்போமாக!"

கருத்துக்கள்

ஒன்றுமட்டும் புரிந்துகொள்ளுங்கள். புலிகள் அழிந்தது விட்டார்கள் என்று சொல்லும் துரோக்கிகளை , கேளுங்கள் . சர் புலிகள்தன இல்லையே நீங்கள் ஒற்றுமையாக சேர்ந்து போராடுங்கள் என்று.மாட்டார்கள், ஏனெனில் சிங்களவர்களை அண்டி பிழைபதையே குறிகோளாக கொண்டவர்கள்.போராட்டம் என்று ஒன்று வந்தால் அவர்களால் ஜாலியாக வாழமுடியாது.தாங்கள் ஜாலியாக வாழ ஒரு இனம் அழிவதை பற்றி சிந்திக்கமாடார்கள்.இவர்கள் வாழும் கேவல வாழ்கையை புலிகள் கட்டுபடுதியதல்தான், எதாவது எழுதிக்கொண்டு இருப்பார்கள்.

By karigaalan
5/18/2010 10:51:00 PM

Pure Tamils're as moon; if any dog bark, against Tamils their mouth will hurt only, nothing else. Keep up the good future wotk for pure Tamils.

By Murugan-Velur
5/18/2010 10:29:00 PM

Over seas Tamil Government get a representative in United Nations. This over seas Tamil government to speak to all tamils whereever they live. Example, Srilanks, malaysia, Singapore, Malaya, maldeves, Bengalore, tamilnadu, kerala, Anthta , karnadaka, UK, USA, canada, Germany, France, Delhi, Bombay, and all around the world Tamils can contact the over seas Tamil Government if any one abouse or violent against Tamils ; it takes to the United Nations, humans right violation. Thank pure Tamils who asissted to the right path in non violent way as Mahathma Gandi.

By kaddapoman
5/18/2010 10:25:00 PM

Over seas Tamil Government get a representative in United Nations. This over seas Tamil government to speak to all tamils whereever they live. Example, Srilanks, malaysia, Singapore, Malaya, maldeves, Bengalore, tamilnadu, kerala, Anthta , karnadaka, UK, USA, canada, Germany, France, Delhi, Bombay, and all around the world Tamils can contact the over seas Tamil Government if any one abouse or violent against Tamils ; it takes to the United Nations, humans right violation. Thank pure Tamils who asissted to the right path in non violent way as Mahathma Gandi.

By kaddapoman
5/18/2010 10:25:00 PM

It is true! Tamil people's Governments destroyed since the World wat 11. One day, Tamils will have a country and a representative in United Nations. Then, no one cannot stop or bar the war crimes. Mr. Nambiar who work in UNs, mislead by the people who are the criminals who were involved in the humans' disater. The people who oppose this democtretic process attempts are not pure Tamils; they are malayalis, anthra, hindi and sinhalese. Tamils never put down other Tamils who suffer last 200 years when British Invaded Asia. The world changes in every 100 years. Time is right for the freedom of Tamils and separate Tamilnadu for Tamils. Vazhka Tamils and Tamil language.

By Iayanakar
5/18/2010 10:14:00 PM

May 18, 2010 should be of historical significance for all Thamizhs and it is a very good begning to achieve an independent Nation for Thamizhs. When Thomas Jefferson drafted the declaration of our independence in 1776, no one would have believed America would become a Super Power, back then. The formation of TransNational Government of Thamizh Ezham is the significant step after the defeat last year. Let us not repeat the mistakes of the past and UNITEDLY SUPPORT THE LEADERSHIP OF MR. V. RUDHRAKUMARAN AND HIS TEAM. UNITY IS THE ONLY WEAPON WE CAN USE IN THE PRESENT TIME AGAINST OUR ENEMIES. NO ONE CAN DENY OUR FREEDOM WHEN WE ARE IN THE RIGHT PATH FOR INDEPENDENCE. UNITY AMONG 70 MILLION THAMIZHS ARE CRUCIAL IN THESE EFFORTS.

By Raja
5/18/2010 9:52:00 PM

LONG LIVE FREEDOM. LONG LIVE LIBERITY. LONG LIVE TAMIL EELAM. LONG LIVE TAMIL.

By Paris EJILAN
5/18/2010 9:16:00 PM

இரத்தம் சிந்தாமல் அகிம்சையில்-அறிவுபூர்வமாய் தமிழர்களுக்கு சமஉரிமை வென்றிட வாழ்த்துக்கள்! - தூரத்தில் கீற்றாய் தெரியும் விடியல் மனத்திற்கு ஒரு தேம்பாய்தருகிறது!

By Ind!an
5/18/2010 8:26:00 PM

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளி வரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!

By ராஜசிம்ம பல்லவன்
5/18/2010 8:05:00 PM

கடைசியில் கருத்து கூறியிருக்கும் Rajan, எலி அவர்களின் கருத்துக்களை படித்ததில் இருந்து ஒன்று தெரிகிறது, விடுதலைப் புலிகளின் கூட்டத்தில் பல சகுனிகள் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் என்று.. மகாபாரதத்தில் துரியோதனனின் அழிவுக்கு காரணம் பஞ்ச பாண்டவர்கள் அல்ல துரியோதனனுக்கு அரசியல் ஆலோசகராக இருந்த சகுனியே.. பாவம் இது துரியோதனனுக்கே தெரியாது.. விடுதலைப் புலிக் கூட்டத்தில் பல சகுனிகள் இருந்திருக்கிறார்கள், இன்னும் இருக்கிறார்கள் என்று கூறி எனது உரையை முடிவு செய்கிறேன் நன்றி வணக்கம்... முடிவாக ஒன்று மட்டும் தமிழனாக சொல்கிறேன்.. மறுபடியும் இந்தியாவிடம் மோதி முற்றிலுமாக அழிந்து விடாதீர்கள்... Jaihind

By Anniyan
5/18/2010 7:40:00 PM

உருத்திரகுமரனின் முழு உரையையும் படித்து பார்த்தேன், இலங்கை அரசையும்,ராணுவத்தையும் தான் குற்றம் சுமத்துகிறார், ஆனால் புலிகளின் ஊடகங்கள், இருதிபோரில் இந்திய ராணுவம்,இந்திய செயற்கைக்கோள், இந்திய இரசாயன ஆயுதம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்துவுகின்றனர். ஆனால் உருத்திரகுமாரன் இந்தியாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, குற்றம் சுமத்தவில்லை.இந்த ஆள் இந்தியாவின் கைக்கூலி என்பதில் சந்தேகமேயில்லை,இந்த ஆளுக்கு தைரியமிருந்தால் இந்தியாவிற்கு எதிராக ஒரு அறிக்கை விடட்டுமே?

By Rajan
5/18/2010 7:05:00 PM

இலங்கையில் நடந்து முடிந்த போர் இலங்கை அரசின் போறல்ல இந்தியாவின் போர், தமிழர்கள் கொள்ளபடுவதர்க்கு முக்கிய காரணம் இந்தியாதான் என்று புலிகளின் ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன, ஆனால் இந்த உருத்திரகுமாரன் இந்தியாவை பற்றி எந்த குற்றசாட்டும் சொல்லாமல்,இலங்கை அரசை மட்டும் குற்றம் சாட்டுவதின் நோக்கம் புரிகிறது, இந்த ஆள் இந்தியாவின் கைக்கூலி, சோனியாவின் எடுபிடி, பணம் பண்ணுவதற்கு இவன் செய்யும் தந்திரம்.

By Eli
5/18/2010 6:46:00 PM

All tamils will be behind the good work, any financial help will be pouring from 10 crores tamil across the world. Liberate ELLAM tamils... Go on.... Never forget May 18.... Let it be the day which change the course for Tamil people

By sakthi
5/18/2010 6:25:00 PM

வாருங்கள் தமிழ் மறவர்களே உலகை வசபடுத்துவோம் : தமிழன் நாமென்று பறைசாற்றுவோம் வீறுகொண்டு பாயட்டும் புலிகூட்டம் சிதறி ஒடட்டும் நரிகூட்டம் எதிரிகள் ரத்தம் ஊற்றுபெருக்கெடுக்க தமிழீழம் மலரட்டும்:- அங்கே துரோக கூட்டங்கள் மலைகுவியலாய் மடிந்துபோகட்டும் :-அதிலே சுயநல வெறுப்புணர்சிகள் சிதைந்துபோகட்டும். நம் உணர்ச்சிகள் வெடிக்கட்டும் எரிமலையாய் எதிரிகள் ரத்தங்கள் தேங்கட்டும் நீர்நிலையாய் நம் மாவீரர் ஆத்மா சாந்தமாய் அதிலே நீந்தி குளிப்போம் இன்பமாய். வாழ்க தமிழீழமென்று வாழ்த்தொலி ஒலிக்கட்டும் விண்னை பிளந்து.

By maravan
5/18/2010 6:17:00 PM

Singalava only afford to pay 1 person to write anti Tamil comments here thus, RAVI giving solo performance here in the name of negative comments against Tamils..HA HA HA

By anpu
5/18/2010 6:15:00 PM

குலத்தளவே ஆகுமாம் குணம் அது உமக்கு நன்கே பொருந்துமையா ரவி....!!!

By Tamilan
5/18/2010 6:08:00 PM

உலக ஈழத் தமிழர்கள் புலிகளின் அழிவுக்கு இந்தியாவின் செயலே முக்கிய காரணமென்று கருதி இந்தியாவை பழி வாங்கப் போகிறார்கள் என்று வெளி வரும் செய்தியால் கோபத்தை விட மன வருத்தமே மிகுதியாக இருக்கிறது..''பழி வாங்கும்'' கொள்கைக்கு தேவையற்ற செயலை பழைய தவறிலின்று திருந்த பெற்று கொள்கையை விட்டு விலகாத வண்ணம் செயல் புரிய வேண்டும் என்று அனைத்து தமிழர்களின் கருத்தாக இருக்கிறது.. ஈழத் தமிழ் தேசத்தில் இந்திய தூதரகமும், இந்திய தேசத்தில் ஈழத்தமிழின் தூதரகமும் அமைய வேண்டும் என்பது எந்த சுய லாபத்தையும் எதிர் பார்க்காமல் அனைத்து தமிழர்களின் கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறதென்பது மறுக்க முடியாத உண்மை.. இப்படிக்கு ஈழ தேசத்தை தன் வாழ்நாளைக்குள் காணத் துடிக்கும் ஒரு திமிழன்..

By Anniyan
5/18/2010 6:00:00 PM

I THINK MR. RAVI, YOU HAD BETTER KEEP OFF WRITING BULLSHITS, BECAUSE YOU LACK FARSIGTHEDNESS. THE SRILANKAN TAMIL DISPORA ARE DETERMINED TO CARVE OUT A COUNTRY. YOU ARE GOING TO SEE THIS ONE DAY. YOU BETTER VISIT WWW.TAMILNET.COM TO KEEP YOURSELF UPDATED.

By MAANAMIGU TAMILAN
5/18/2010 5:49:00 PM

இத்தனன படு கொலைக்கனள சிங்களவன் நடத்தியும் இன்னும் புத்தி வரவில்லை முட்டாள்கள் கைக்கூலிகளுக்கு என்னும் சிங்களவனின் நிழலை தொடரும் குள்ள நரிகாளகவே உள்ளனர்

By usanthan
5/18/2010 5:47:00 PM

இப்படி உசுபேத்தி உசுப்பேத்தி மீதி உள்ள அப்பாவி மக்களை அளிக்கும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். அனைவரும் அழிந்த பிறகு நீங்கள் எப்படி எதை சொல்லி உலக மக்களை ஏமாற்றி கொள்ளை அடிப்பீர்கள்? இருக்கிற மக்களையாவது நிம்மதியா வாழ விடுங்கப்பா. இனி வரும் காலங்களிலாவது உழைத்து வாழ பழகுங்கள். ஒவ்வொரு புலம் பெயர்ந்த தமிழனும் எப்படி திம்சுகட்ட மாதிரி இருக்கிறான் பாருங்கள். ஒரு அப்பாவி தமிழனாவது இப்படி இருக்கிறானா ஈழத்தில். ஏனென்றால் இவங்கள் ஏமாற்றி ஏமாற்றி சாப்பிட்டு உடம்பை வளர்க்கிரான்கள், எங்கடா பிரச்சினை முடிந்து நம் ஈன வாழ்வில் கேடு விளையுமோ என்று ஏங்கி தினம் ஒரு அறிவிப்பு விட்டு உசுப்பேத்துரான்கள். அனைவரையும் ஒழிக்க வேண்டும்.

By tamil
5/18/2010 5:44:00 PM

"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு"....அதன் அத்தாட்சி தான் இந்த "போர்" ஜனநாயக "போர்" பிரகடனம். புலிகளுடன் ஆயுத போரின் போது, சிங்களவன் உயிரைத்தான் விட்டான் ஆனால் இனி நித்தம் நித்தம் மனதளவில் செத்து செத்து பட படபடப்புடன் வாழ்க்கை நடத்துவதற்கு இந்த பிரகடனம் வழி வகுத்துள்ளது....தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!....Well said Seralathen

By Martin Selvam
5/18/2010 5:43:00 PM

Hats off to you guys(Tamils)...your well planned and wonderfull strategy settings are very clear. Wish you guys all the best!

By Reddy
5/18/2010 5:39:00 PM

சரியான ராஜதந்திர பிரகடனம், சும்மா சொல்ல கூடாது வாழை பழத்தில் ஊசியை இறக்குவது போல நறுக்குனு இருக்கு இந்த அறிவிப்பு. கொலையாலிக்கும், கொலையை வகுத்து கொடுத்த முட்டா பயகளுக்கும் நிச்சயம் ஒரு தடுமாற்றம் ஏற்படும்.

By Karigalan-Malaysia
5/18/2010 5:33:00 PM

tamilan vazhka, tamilelam will come one day. we will win one day against singalam,and congress in india. its not too far. god bless for honorable Rudhirakumaran and leaders

By rajaram
5/18/2010 5:28:00 PM

உண்மையை ஏற்றுகொள்கிற பக்குவமோ, மனப்பான்மையோ இந்த புலிகளுக்கு எப்பவுமே இருந்ததில்லை. அவர்கள் செய்த அனைத்தையும் அவர்கள் உணர மறுக்கிறார்கள், உலகில் இவர்கள் மட்டும் தான் கச்டபடுபவர்களை போல ஒரு மாயையை உண்டு பண்ணுகிறார்கள், இயற்கையின் சீட்ட்ரத்தில் எத்தனையோ நாடுகள் அழிந்து போகின்றன. நீ உழைத்து உன் குடும்பத்தை காப்பாற்ற போகிறாய். அதற்க்கு எதற்க்கடா இந்த கோழை வெறி. ஏனென்றால் நீங்கள் உழைத்து வாழ விரும்பாதவர்கள், இப்படி அப்பாவி மக்களை நீங்களே பணய கைதிகளாக்கி கொன்று , அவர்களை காப்பதுபோல் உலகமெல்லாம் சென்று நிதி வாங்கி வெளி நாடுகளில் உங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஈழத்திலுள்ள அப்பாவிகளோ நீங்கள் தான் தெய்வம் என்றெண்ணி அரசாங்கத்தை எதிரியாக நினைத்து தங்கள் வாழ்வை அழித்துகொண்டிருக்கிரார்கள்.

By tamil
5/18/2010 5:27:00 PM

டெக்ரான்: ஜி-15 நாடுகள் கூட்டமைப்பின் புதிய தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.ஈரானில் ஜி-15 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடக்கிறது. இம்மாநாட்டில், கூட்டமைப்பின் புதிய தலைவராக இலங்கை அதிபர் ராஜபக்ஷே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஈரான் அதிபர் மகமூது அகமதீன் தாத்திடம் இருந்து இந்த பொறுப்பை, ராஜபக்ஷே நேற்று ஏற்றுக் கொண்டார்.அவர் கூறுகையில், 'ஜி-15 நாடுகள் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் என் நடவடிக்கை அமையும். கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நாடும், தங்களுக்கு இடையே ஆரோக்கியமான, வெளிப்படையான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்' என்றார்.

By NEWS TODAY
5/18/2010 5:24:00 PM

கிருஷ்ணமூர்த்திக்கும் சாரி... ரவிக்கும் செய்தியை பார்க்க பொறுக்க வில்லை, அதனால் இந்த பிணாத்தல்.....எங்கே மாறி மாறி வேறு வேறு பெயரில் பொய் மாறி பொலிவாயே, அதை அவுத்து உது உன் பிறவி குணத்துக்கு தக்க படி....குலத்தளவே ஆகுமாம் குணம் அது உமக்கு நன்கே பொருந்துமையா

By Tamilan, Madurai
5/18/2010 5:21:00 PM

சிலர் சிங்களவனின் எச்சில் காசுக்காக தினந்தோறும் தமிழனையும், தமிழ் வீரத்தையும் கொச்சைப்படுத்தி எழுவதையே தொழிலாக கொண்டுள்ளனர். எனவே உண்மை தமிழர்கள் அவர்களிடம் எந்தவித கருத்து பறிமாற்றமும் வைத்துகொள்ள வேண்டாம் என்று அன்புடன் வேண்கிறேன்.

By தஞ்சை ராஜு
5/18/2010 5:19:00 PM

Ravi Nee oru Sinhala kaikooli naje/ dog Thanks Hon Rudrakumaran for your leadership.

By Ram
5/18/2010 5:15:00 PM

கூரை ஏறி கோழி புடிக்க முடியாத நாயி, வானம் ஏறி வைகுண்டம் போவென்னு சொல்லுமாம். அது மாதிரி கேக்குறவன் கேணப்பயன்னா, எலி ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு அள்ளி உடலாம்.

By Usanthan
5/18/2010 5:06:00 PM

"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு"....அதன் அத்தாட்சி தான் இந்த "போர்" ஜனநாயக "போர்" பிரகடனம். புலிகளுடன் ஆயுத போரின் போது, சிங்களவன் உயிரைத்தான் விட்டான் ஆனால் இனி நித்தம் நித்தம் மனதளவில் செத்து செத்து பட படபடப்புடன் வாழ்க்கை நடத்துவதற்கு இந்த பிரகடனம் வழி வகுத்துள்ளது....தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

By Seralathan
5/18/2010 5:05:00 PM

"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு"....அதன் அத்தாட்சி தான் இந்த "போர்" ஜனநாயக "போர்" பிரகடனம். புலிகளுடன் ஆயுத போரின் போது, சிங்களவன் உயிரைத்தான் விட்டான் ஆனால் இனி நித்தம் நித்தம் மனதளவில் செத்து செத்து பட படபடப்புடன் வாழ்க்கை நடத்துவதற்கு இந்த பிரகடனம் வழி வகுத்துள்ளது....தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!

By Seralathan
5/18/2010 5:04:00 PM

ஏ ரவி நாயே , யாரடா நீ? ஆற்றில் வெள்ளத்தில் செல்பவன் ஒரு துரும்பு கிடைக்காத பற்றிக்கொள்ள என்று நினைக்கும் பொது, உலகில் தமிழர்களின் அவலநிலையை எடுத்து சொல்ல ஒருவன் கிடைத்தனே என்று நினைக்காமல், நீ ஒரு மிருகம். ராஜபக்சேயின் கொலை கரங்களில் இருக்கும் அந்த மக்களை ஒரு நிமிடம் நினைத்து பார்.

By SAM
5/18/2010 5:01:00 PM

ஒரு கோமாளியின் உரைக்கு இவ்வளவு முக்கியத்துவமா?????

By Ravi
5/18/2010 4:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக